தே.கு.அ.மாநாடு 2010

தே.கு.அ.மாநாடு 2010
NCSC 2010 - Tamil Nadu

புதன், 24 நவம்பர், 2010

திருத்தணி :தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

நவம்பர் 24,2010,00:42 IST

திருத்தணி : மாவட்ட அளவிலான 18வது தேசிய குழந்தைகளின் அறிவியல் மாநாடு திருத்தணியில் நடந்தது.திருத்தணி அரக்கோணம் சாலையில் இயங்கி வரும் ஜெய்ஸ்ரீ ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாவட்ட அளவிலான 18வது தேசிய குழந்தைகளின் அறிவியல் மாநாடு நடந்தது. அறிவியல் இயக்க தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தர் வரவேற்றார்.இதில் திருத்தணி ஒன்றியத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும் கலந்து கொண்டு நிலவளம், அறிவியல் இயக்க செயல்பாடுகள் மற்றும் தற்போது அறிவியல் வளர்ச்சி குறித்து கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது.போட்டியில் சுதந்திர மெட்ரிக் பள்ளியும், ஆர்.கே.தெரு பள்ளியும் மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி தாளாளர் ரவி பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் நாகேந்திரன் நன்றி கூறினார்.


நன்றி: தினமலர்

மாநில அறிவியல் போட்டி எஸ்.பி.கே., பள்ளி தேர்வு

பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2010,23:11 IST

அருப்புக்கோட்டை : பெரிய வள்ளிக்குளம் நோபிள் மெட்ரிக் பள்ளியில் நடந்த தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சசிகலா, சுவாதி, விசேஷினி, அபர்ணபிரியா, லட்சுமி பிரியா ஆகியோரின், "நுண்ணுயிர் மற்றும் இயற்கை உரத்தின் மூலம் உளுந்து பயிரிட்டு மண்வளத்தை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரை மாநில போட்டிக்கு தேர்வானது. இவர்களை பள்ளிச் செயலாளர் ராஜரத்தினம், தலைமை ஆசிரியை ராஜபூபதி, ஆசிரியை விஜயா மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.


நன்றி : தினமலர்

விழுப்புரம்: அறிவியல் மாநாடு நிறைவு விழா

நவம்பர் 18,2010,23:42 IST

விழுப்புரம் : தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நிறைவு விழா விழுப்புரத்தில் நடந்தது.விழுப்புரம் நித்யானந்தா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த விழாவிற்கு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் வீரபாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநாடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவமுருகன் வரவேற்றார். அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் நித்யானந்தம், முதல்வர் பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினர்.


மாநில செயலாளர் வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினார். தேசிய குழந்தைகள் அறிவியில் தினத்தையொட்டி நடந்த ஆய்வு கட்டுரை போட்டியில் 20 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில் திருக்கோவிலூர் தாலுகா இளாப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி முதல் பரிசை வென்றது. வானூர் தாலுகா பரங்கினி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்கள் இரண்டாவது பரிசையும், விழுப்புரம் இ.எஸ்., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மூன்றாவது பரிசையும் பெற்றனர். போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு தாவரவியல் துறை தலைவர் (ஓய்வு) தனஞ்செழியன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.


நன்றி: தினமலர்

செவ்வாய், 23 நவம்பர், 2010

காஞ்சி மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாடு

சென்னை
குழந்தைகள் அறிவியல் மாநாடு

First Published : 23 Nov 2010 01:54:37 PM IST


உத்தரமேரூர், நவ. 22: உத்தரமேரூர் தாலுகா ரெட்டமங்கலம்
ஆதிதிராவிட நல அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான 18-வது தேசிய
குழந்தைகள் அறிவியல் மாநாடு சனிக்கிழமை நடந்தது.

உத்தரமேரூர் கிளைத் தலைவர் சிவா.அன்பழகன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் இ.மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர் த.பாரதிராஜா வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ச.தீனதயாளன், மாவட்ட செயலாளர் ஜி.முனுசாமி வாழ்த்தி பேசினர். ரெட்டமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.ஜி.பூபாலன் மரக்கன்றுகளை
நட்டார்.

மாலையில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட தலைவர் எஸ்.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். வரவேற்புக் குழு தலைவர் லோ.வரகுணபாண்டியன், மாவட்ட துணைத் தலைவர் எ.வீரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட அறிவியல் பிரசார ஒருங்கிணைப்பாளர் எ.குமார் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் எ.அருண்பிரசாத் மாநாட்டை தொடங்கிவைத்து பேசினார்.

காஞ்சி பச்சையப்பன் ஆடவர் கல்லூரி முதல்வர் பி.பரமசிவம், உத்தரமேரூர் வேளாண் அலுவலர் வி.ராஜதுரை
மதிப்பீட்டுரையாற்றினார்கள். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி.முருகன் இளம் விஞ்ஞானிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி பேசினார். மாவட்ட பொருளாளர் டி.குமார் நன்றி கூறினார்.
நன்றி: தினமணி

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

நவம்பர் 20,2010,00:52 IST

உத்தமபாளையம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுந்தர் வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு)அமானுல்லா மாநாட்டை துவக்கி வைத்தார். குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர் அறிமுக உரையாற்றினார். மாவட்டம் முழுவதிலிருந்தும் ஏராளமான மாணவர்கள் 60 குழுக்களாக பல்வேறு தலைப்புகளில் ஆய்வுகளை சமர்ப்பித்தனர். ஆறு குழுக்கள் மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டன. தேர்வான குழுக்களுக்கு ஆர்.டி.ஓ.,ராஜேந்திரன் சான்றிதழ்கள் வழங்கினார். மருத்துவ துறையில் நானோ தொழில் நுட்பம் என்ற தலைப்பில் விஞ்ஞானிகள் சந்திப்பு நடந்தது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேதியியல் விஞ்ஞானி முருகபூபதி கருத்துரை வழங்கினார். ஆய்வு ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தேர்வான ஆய்வு முடிவுகளை அறிவித்தார். நிறைவு விழா மாவட்ட துணைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது.
துளிர் அறிவியல் மைய இயக்குனர் தியாகராஜன், இணைச்செயலாளர் ராஜமாணிக்கம் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன் நன்றி கூறினார்.

நன்றி : தினமலர்

வியாழன், 18 நவம்பர், 2010

குழந்தைகள் அறிவியல் மாநாடு: கூடலூர் மாணவர்கள் தேர்வு

18 Nov 2010 10:16:33 AM IST


கூடலூர், நவ 17: தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு, கூடலூர் மார்னிங் ஸ்டார் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்காக நடத்தப்பட்ட இளம் விஞ்ஞானிகள் தேர்வில், இப்பள்ளியைச் சேர்ந்த ஐரின், பிரியா, சுப்கஷா, சுனில், அபிலாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், வெட்டி வேர் புல்லை வளர்த்து, மண் அரிப்பைத் தடுப்பதுடன், மண் வளம், ஈரப்பதம், நிலத்தடி நீரைப் பாதுகாப்பது தொடர்பான ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்து, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நன்றி: தினமணி

மாநில அளவில் அறிவியல் போட்டி ஜேஸீஸ் பள்ளி மாணவர்கள் தேர்வு

நவம்பர் 17,2010,01:21 IST

காங்கயம்: தேசிய குழந்தைகள் மாநாட்டில், மாவட்ட அளவில் நடந்த ஆய்வுக்கட்டுரை போட்டியில், சிவன்மலை ஜேஸீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், விஜயமங்கலம் சசூரி பொறியியல் கல்லூரியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட பள்ளிகளில் இருந்து 89 அறிவியல் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சிவன்மலை ஜேஸீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் "காங்கயம் பகுதியில் மண் வளம் குறைவதற்கான காரணங்களும், அவற்றை மேம்படுத்துதலும்' என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு கட்டுரை, மாநில அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆய்வில், "மண் வளம் மாசு அடைவதற்கு முக்கிய காரணங்களான நிலம், நீர் மற்றும் காற்று மாசை கட்டுப்படுத்தும் முறை, மண் வளத்தை மேம்படுத்துவதற்கு இயற்கை உரங்களான உயிர் உரங்கள், பண்ணை கழிவு, மண்புழு உரம் போன்றவற்றை பயன்படுத்துவதால் மண்வளம் மேம் படுத்தப்படுகிறது' என தீர்வு அளிக்கப்பட்டது. கோவையில் நடைபெற உள்ள மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், இந்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு கட்டுரை வழிகாட்டி ஆசிரியர்களான சின்னதுரை, உஷாராணி மற்றும் ஆய்வுக்குழு மாணவியர் நித்யா, வாசுகி, ராகதீபிகா, மாணவர்கள் ஹரிகிருஷ்ணன் மற்றும் சண்முகவேலனை, பள்ளி தலைவர் ராமசாமி, தாளாளர் பழனிச்சாமி, பள்ளி முதல்வர் சாவித்திரி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பாராட்டினர்.

நன்றி: தினமலர்

புதன், 17 நவம்பர், 2010

ஆய்வுக் கட்டுரை சமர்பித்தல்: வாலாஜா பள்ளி மாணவர்கள், மாநில அறிவியல் மாநாட்டிற்குத் தேர்வு

Bš° Ly|ÛW NUŸ ‘†R¥:

YÖXÖ^Ö T·¸ UÖQYŸL·, UÖŒX A½«V¥ UÖSÖyz¼h ÚRŸ°

YÖXÖ^Ö, SY.15-

Bš° Ly|ÛW NUŸ‘†R¨eLÖL, YÖXÖ^Ö AWr BL· ÚU¥ŒÛX T·¸ UÖQYŸL· UÖŒX A½«V¥ UÖSÖyz¼h ÚRŸ° ÙNšVTy| E·[]Ÿ.

Bš° Ly|ÛW

A½«V¥ UÖQYŸLºeh FeL• A¸eh• YÛL›¥, JªÙYÖ£ B|• ÚRpV hZ‹ÛRL· A½«V¥ UÖSÖ| NÖŸ‘¥, Bš° Ly|ÛW NUŸ‘TR¼LÖL ˜RÁÛU L¥« A¨YXŸ ™X• AÛ]†‰ T·¸eiPjLºeh• AÛZ“ «|eLTy| Y£f\‰. ARÁTz YÖXÖ^Ö AWp]Ÿ BL· ÚU¥ŒÛX T·¸ RÛXÛU Bp¡VŸ z.ÚL.N°‹RWWÖ^Äeh• R–²SÖ| A½«V¥ CVeL• NÖŸ‘¥ AÛZ“ «|eLTyP‰.

AÛR†ÙRÖPŸ‹‰, T·¸›Á Y³LÖyz Bp¡VŸ ‘.TYÖ ™X• Bš° hµ«¼h RÛXÛU Bp¡VŸ AÄU‡ A¸†RÖŸ.

hµ Bš°

ARÁTz, 11-• Yh“ UÖQYŸ «.YN‹RhUÖŸ RÛXÛU›¥ ÚL.TÖXÖÈ, G•.ÚY¥˜£LÁ, G¥.‘WNÖ‹† U¼¿• G•.«eÚ]cYŸ BfÚVÖŸ APjfV UÖQYŸ hµ AÛUeLTyP‰.

A‹R hµ«]Ÿ "ŒX• J£ ŒW‹RW ÙLÖÛPVÖ¸" GÁ\ RÛX‘¥ YÖXÖ^ÖÛY A|†R A•UQ‹RÖjL¥ fWÖU†‡¥ fWÖU RÛXYŸ ‘.EcÖWÖ‚ AÄU‡PÁ LQeÙL|“ SP†‡]Ÿ. AÚTÖ‰ A‹R fWÖU†‡¥ 47 NR®R «YNÖ›L· Uy|ÚU T›¡y|·[]Ÿ GÁT‰ ÙR¡VY‹R‰.

«³“QŸ°

AÛR†ÙRÖPŸ‹‰ ÚY[ցÛU RÛXÛU A‡LÖ¡ GÍ.pj A½°ÛW›ÁÚT¡¥ ÚY[ցÛU A¨YXŸ s¡VSÖWÖVQÁ, A•UQ‹RÖjL¥ fWÖU «YNÖ›Lºeh ‰P½eÛL ™X• «³“QŸ° H¼T|†‡]ÖŸ. AÚTÖ‰ «YNÖ›Lºeh, F| T›¡|• ÙNzL· EVŸ A‡LÖ¡L· ™X• YZjLTyP].

C‰ÙRÖPŸTÖL Bš° Ly|ÛW RVÖ¡†‰ NUŸ‘eLTyP‰.

UÖŒX UÖSÖyz¼h...

ARÁ AzTÛP›¥ hÚ[ÖT¥ ÙTÖ½›V¥ L¥©¡›¥ SP‹R UÖYyP UÖSÖyz¥ YÖXÖ^Ö AWr BL· ÚU¥ŒÛX T·¸ UÖQYŸL· ÙY¼½ ÙT¼¿, UÖŒX UÖSÖyz¥ LX‹‰ ÙLÖ·YR¼h ÚRŸ° ÙNšVTy| E·[]Ÿ.

நன்றி: தினத்தந்தி

டி.ஆர்.பி., இன்ஜினியரிங் கல்லூரியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

நவம்பர் 15,2010,02:23 IST

மண்ணச்சநல்லூர்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், திருச்சி இருங்களுர் டி.ஆர்.பி., இன்ஜினியரிங் கல்லூரியில் 18வது தேசிய குழந்தைகள் இரண்டு நாள் அறிவியல் மாநாடு நேற்று துவங்கியது. பாரதிதாசன் பல்கலை மகளிரியல் துறை இயக்குனர் மணிமேகலை தலைமை வகித்து பேசுகையில், ""மாணவர்கள் படிப்பது மட்டுமின்றி சமுதாயத்துக்கும் சேவையாற்ற வேண்டும். நிலவளத்தை பாதுகாத்து மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும்,'' என்றார். இருங்களுர் எஸ்.ஆர்.எம்., குழும துணைத்தலைவர் பார்க்கவன் பச்சமுத்து, முதன்மை நிர்வாக அதிகாரி வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநாட்டில் பங்கேற்ற கருத்தாளர்களை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சபரிக்குமார் அறிமுகப்படுத்தினார். டி.ஆர்.பி., கல்லூரி முதல்வர் தமிழரசன் மாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில், ""எரிசக்தியை சிக்கனப்படுத்துதல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல், உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்துதல் ஆகிய மூன்றிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார். விழாவில், டி.ஆர்.பி.,கல்லூரி முதலாமாண்டு ஒருங்கிணைப்பாளர் இளங்கோ, உதவி பேராசிரியர் ரொசாரியோ உட்பட பலர் பங்கேற்றனர். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் தேசிய அளவில்நடக்கும் இளம் விஞ்ஞானிகள் தேர்வில் கலந்து கொள்வர். முன்னதாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் நடராசன் வரவேற்றார். திருச்சி ஜோசப் கல்லூரி சுற்றுச்சூழல் துறை உதவி பேராசிரியர் அசோக் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.


நன்றி: தினமலர்

கரூரில் குழந்தைகள் அறிவியல் மாநாடு

நவம்பர் 14,2010,02:39 IST

கரூர்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கொங்கு கல்வி அறக்கட்டளை, ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் கரூரில் அறிவியல் திருவிழா மற்றும் 18வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. அட்லஸ் கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில், கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் நாச்சிமுத்து தலைமை வகித்தார். ஏ.டி.ஜி.பி., ராஜா சிறப்புரையாற்றினார். கரூர் ரோட்டரி சங்கத் தலைவர் முத்துசாமி, அறிவியல் சங்க மாநில செயலாளர் சேதுராமன், கவுரவத் தலைவர் சங்கர் முன்னிலை வகித்தனர். கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் சிவகுமார் வரவேற்றார். பரணிபார்க் கல்வி நிறுவனங்கள் சீனியர் முதல்வர் ராமசுப்பிரமணியன் அறிமுக உரை நிகழ்த்தினார். பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கொங்கு மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜேந்திரன், பரணிபார்க் கல்வி நிறுவனங்கள் தாளாளர் மோகனரங்கன், வெள்ளாளர் மேல்நிலை மேல்நிலைப்பள்ளி தாளாளர் கணபதி உட்பட பலர் பங்கேற்றனர்


நன்றி: தினமலர்

பரணி வித்யாலயாவில் அறிவியல் கண்காட்சி

நவம்பர் 13,2010,01:10 IST

கரூர்: கரூர் பரணிவித்யாலயா பள்ளியில் தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு நிறுவனர் சாமியப்பன் நினைவு அறிவியல் கண்காட்சி, பள்ளி அளவிலான 18வது குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது.
அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் மாநாட்டுக்கு பள்ளி தாளாளர் மோகனரங்கன் தலைமை வகித்தார். செயலாளர் பத்மாவதி, சங்கரா வித்யாலயா பள்ளி தாளாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். பள்ளி முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன் வரவேற்றார்.
கரூர் டி.எஸ்.பி.,சிவபாஸ்கர் பங்கேற்று கண்காட்சியை துவக்கி வைத்து பேசினார். வாங்கல் இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர். நிலவளம் என்ற மையக்கருத்தின் அடிப்படையில் அறிவியல் மாநாடு நடந்தது. அறிவியல் கண்காட்சியில் 3 முதல் 10 வயது வரையுள்ள குழந்தைகளின் 125 அறிவியல் ஆய்வுகளும், பள்ளி அளவிலான அறிவியல் மாநாட்டில் 35 ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டன. முதல்வர் சுதாதேவி நன்றி கூறினார். ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் சுரேஷ் செய்திருந்தார்.


நன்றி: தினமலர்

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு : மாணவர் சார்பில் 87 ஆய்வு கட்டுரைகள்

நவம்பர் 12,2010,21:18 IST

கூடலூர் : கூடலூரில் நடந்த 18வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மாணவர்கள் சார்பில் 87 ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாவட்ட அளவிலான 18வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, கூடலூர் மார்னிங் ஸ்டார் பள்ளியில் நடந்தது. மாநாட்டை மார்னிங் ஸ்டார் பள்ளி தாளாளர் அருட்தந்தை மேத்யூ துவக்கி வைத்தார். இதில்,6 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் ஜூனியர் பிரிவிலும், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்கள் சீனியர் பிரிவிலும் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.
மொத்தம் 87 ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டது. இதில், ஜூனியர் மாணவர்கள் 50 ஆய்வு கட்டுரைகள் சமர்பித்து, நடுவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். நடுவர்களாக பெங்களுரூ இந்திய அறிவியல் மைய ஆராய்ச்சியாளர் ஆனந்த், நீலகிரி மாவட்ட வேளாண் துறையை சேர்ந்த ரமேஷ், கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மீராசேகர், ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் முருகேசன், கூடலூர் பாரதியார் பல்கலைக் கழக கலை அறிவியல் கல்லூரி விரிவுரையாளர் பழனிசாமி ஆகியோர் இருந்தனர்.
மாநாட்டில் 10 ஆய்வு கட்டுரைகள் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன. மாநில தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு அடுத்த மாதம் 3, 4 ஆகிய தேதிகளில் கோவையில் நடக்கிறது. மாநாட்டுக்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட தமிழ் நாடு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுலைமான் செய்திருந்தனர்.


நன்றி: தினமலர்

சாயக்கழிவு பிரச்னைக்கு எளிய முறையில் தீர்வு : பிரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் ஆய்வு

நவம்பர் 12,2010,21:08 IST

திருப்பூர் : பிரண்ட்லைன் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், "திருப்பூரை காப்பாற்றுவோம்' என்ற தலைப்பில் சாய ஆலைகளால் ஏற்படும் பிரச்னை மற்றும் அதற் கான தீர்வு குறித்து ஆய்வு கட்டுரை தயாரித்துள்ளனர். இக்கட்டுரை, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளது.
அமிர்தா நிகர்நிலை பல்கலையில் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. இதில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில், பிரண்ட்லைன் பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் அஸ்வின் பாரதி, அரவிந்த் விஜய், கார்த்திக் பிரசாந்த், துரை வெங்கடேஷ், கவிதா ஆகியோர் ஆசிரியர் சுமதி தலைமையில் தயாரித்த "திருப்பூரை காப் போம்' என்ற தலைப்பிலான ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தனர்.
திருப்பூரில் நிலவி வரும் சாயக் கழிவு பிரச்னை மற்றும் அதற்கான தீர்வு குறித்த அக்கட்டுரை, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகிஉள்ளது. அப்போட்டி, வரும் டிச., 3ம் தேதி, கோவை கே.பி.ஆர்., கல்லூரியில் நடக்கிறது.
ஆய்வு கட்டுரை தயாரித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர் கூறியதாவது: சாய ஆலைகளில் சுத்திகரிப்பு முறையில் நீரை சுத்தப்படுத்தி பயன்படுத்துகின்றனர். ஆனால், அதிலிருந்து வெளிப்படும் திடக் கழிவுகளை மண்ணில் புதைத்து விடுகின்றனர். இதனால், பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன. சுற்றுச்சுழலுக்கு மாசு ஏற்படுத்தக் கூடிய பயனற்ற திடக்கழிவுகளை நுண்ணுயிர்கள் மூலம் உயிரியல் திடக்கழிவாக மாற்றி உரமாக பயன் படுத்தும் முறையை தயாரித்து உள்ளோம். சாய திடக்கழிவில் கிளோரைட், சல்பேட், கால்சியம், மெக்னீசியம், சோடியம் உள்ளிட்ட ரசாயனங்கள் அதிக அளவில் உள்ளன. இவை இயற்கைக்கு மாசு ஏற்படுத்தும்.
ரசாயன திடக்கழிவில் நுண்ணுயிர்களை பயன்படுத்தி, மாற்றப் பட்ட உயிரியல் திடக்கழிவில் பாஸ்பரஸ், நைட்ரஜன், பொட்டாசியம், ஆர்கானிக் கார்பன் உள்ளிட்டவை நிறைந்துள்ளன. இவை சுற்றுச்சூழலுக்கு தீங்கற்றது; மேலும், பயிர்கள், செடிகள் பயிரிடுவதற்கு உரமாக பயன்படுத்தலாம் என்ற எங்கள் ஆய்வை கோவை வேளாண் பல்கலை உறுதி செய்துள்ளது. அதிக செலவில்லாமல் இந்த ஆய்வை செயல்படுத்தலாம், என்றனர்.
இதே பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஹரிபிரசாந்த், கனிமொழி, பவித்ரா, தீபிகா, மீனா பேச்சியம்மாள் ஆகியோர் ஆசிரியர் சுபா தலைமையில் சாயநீர் சுத்திகரிப்பு பற்றிய மற்றொரு ஆய்வு கட்டுரை யையும் மாவட்ட அளவிலான போட்டிக்கு சமர்ப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி: தினமலர்

குருகுலம் பள்ளியில் இயற்கை விவசாயம்


12 Nov 2010 09:33:51 AM IST

கோபி, நவ. 11: கோபி ஸ்ரீ குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் இயற்கை விவசாயம் செய்யும் முயற்சியில் மாணவியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்காக ஸ்ரீ குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் 5 மாணவிகள் இயற்கை முறையில் தயார் செய்யக்கூடிய கரைசல்கள், பூச்சி விரட்டிகளைத் தயார் செய்வது குறித்து இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் சத்தியைச் சேர்ந்த சுந்தரராமன் என்பவரிடம் மூன்று நாள்கள் பயிற்சி பெற்றனர்.

இதைப் பள்ளியில் செயல்படுத்தி, 1 சென்ட் நிலத்தில் நெல், தக்காளி, வெண்டை, கத்தரி ஆகிய பயிர்களைப் பயிர் செய்து, தயாரித்த கரைசல்களைப் பயிர்களுக்குப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர்.
நன்றி: தினமணி

Role of asking questions stressed

Special Correspondent

At National Children's Science Congress


Mere reading of text books insufficient for becoming a scientist

Experience inspiring, say students


VELLORE: “Don't be content with reading lessons in the textbooks, but ask questions, and keep asking questions”, Ramanujam, former State president of the Tamil Nadu Science Forum (TNSF) told the participants at the Vellore District 18th National Children's Science Congress (NCSC) 2010 at the Global Institute of Engineering and Technology (GIT) in Melvisharam on Saturday.

Mr. Ramanujam said that students could learn scientific concepts only by trying out experiments at home. “You can become a scientist only by conducting experiments to ascertain the truth of what was taught through the science books. You should continue to ask questions about the lessons taught in the classroom. You will succeed only by asking questions”, he told the school students who presented projects at the Congress.

C. Rajendran, Collector of Vellore, who was the chief guest, lauded the TNSF for its role in conducting such competitions to kindle scientific thinking among school students and bring out hidden talents. He said that the NCSC brings home the fact that mere reading of textbooks would not suffice for one to become a scientist. One shoul have a questioning attitude to seek to come up with new innovations and inventions. “ Present-day children always asking probing questions which are often so brilliant that the parents or teachers struggle to answer them,” he said, recalling that Tamil Nadu has produced many scientists like C.V. Raman and S. Ramanujam.T.G. Pandurangan, Director, Ranipettai Engineering College (REC) wanted the district administration to request the engineering colleges in Vellore district to adopt some of the government schools in the neighbourhood.The REC deputed its teachers to schools in its vicinity and also brought the students from the schools to the college to explain scientific concepts in their labs, he said.

A student of Little Flower Convent Girls Higher Secondary School, Ranipet, said that she came to know a lot during the process of preparing for theNCSC. “The experience I got in the project has inspired me to achieve something useful through further experiments”, she said. A student of the Government Girls Higher Secondary School, Valluvambakkam said that theys used to read books written by others, participation in the Science Congress had enabled them to write and submit a project on their own.

A. Kalainesan, district president, TNSF, said ‘Let us use land for creation of wealth and protect it' was the theme of the district NCSC. Gopala Rajendran, district vice-president, TNSF, said that of the 75 projects presented by students at the District NCSC, nine projects--seven in Tamil and two in English—had been selected for the State-level NCSC to be held at Coimbatore from December 3 to 5. The best projects at the State NCSC would be presented at the national-level NCSC to be held at the Vel's University, Chennai from December 27 to 31.

V. Dhanasekaran, TNSF resource person; M. Saravanan, maths teacher, Government Boys Higher Secondary School, Odugathur; Jothilingam, science teacher, Government Girls Higher Secondary School, Odugathur; Subashini, District Education Officer, Vellore; Hemaprasad, chairman, GIT; N. Madhavan, State coordinator, TNSF; and S. Subramani, State secretary, TNSF, spoke.

The Collector later distributed prizes to young scientists who participated in the NCSC, guide teachers who helped the students prepare the projects and TNSF activists.

நன்றி: The Hindu

இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் திட்டம் தேசிய போட்டி டிச. 27ல் துவக்கம்

நவம்பர் 10,2010,00:38 IST

விருதுநகர் : இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் திட்டத்தில் தேசிய அளவிலான போட்டி, சென்னை வேல்ஸ் பல்கலையில் டிச., 27 முதல் 31 வரை நடக்கவுள்ளது. பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்டவும், புதிய படைப்புகளை உருவாக்கவும், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தாண்டு "மண்வளம் 'என்ற தலைப்பில் மாணவர்கள் படைப்புகளை உருவாக்கி உள்ளனர். டிச.,3 முதல் 5ம் தேதி வரை கோவையில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு ஒரு மாவட்டத்தில் இருந்து ஏழு குழுக்கள் தேர்வு செய்யப்படும். மாநில அளவில் குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்து வருகிறது.

நன்றி: தினமலர்

சிறந்த அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளுக்குப் பரிசு

27 Oct 2010 12:10:20 PM IST
ராமநாதபுரம், அக். 26: ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வுக் கட்டுரைப் போட்டிகளில், சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளுக்கு பரிசு வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பள்ளி மாணவ, மாணவியர்க்கான பல்வேறு ஆய்வுக் கட்டுரைப் போட்டிகளை ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு என்ற பெயரில் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நில வளம் காப்போம் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரைப் போட்டிகள், ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியல் நடத்தப்பட்டன. மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 32 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதில், 4 கட்டுரைகள் சிறந்தவையாகத் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் நேஷனல் அகாதெமி மெட்ரிக் பள்ளி, சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியனவாகும்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பரிசு வழங்கும் நிறைவு விழாவில், என்.சி.எஸ்.சி. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தர்மமுனியராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் இ.பாலகிருஷ்ணன், பொருளாளர் டி.முத்துலெட்சுமி, பேராசிரியர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என்.போஸ், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

விழாவில் வேளாண்மை அலுவலர் கோபாலகிருஷ்ணன், மன நல ஆலோசகர் அசரப் அலி, கீழக்கரை பாலிடெக்னிக் பேராசிரியர் அஜய், செந்தில்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

நெல்லையில் நாளை இளம் விஞ்ஞானி:வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி

ஆகஸ்ட் 04,2010,04:04 IST

திருநெல்வேலி:நெல்லையில் நாளை (5ம் தேதி) இளம் விஞ்ஞானி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு இளம் விஞ்ஞானிகளுக்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நாளை (5ம் தேதி) காலை 10 மணிக்கு மாவட்ட அறிவியல் மையத்தில் நடக்கிறது.பல்கலைக் கழக பேராசிரியரும், அறிவியல் இயக்க தலைவருமான மாதவன் தலைமை வகிக்கிறார். மாவட்ட அறிவியல் மைய அலுவலர் சீதாராம் முன்னிலை வகிக்கிறார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் வரவேற்கிறார்.


இப்பயிற்சியை முதன்மை கல்வி அலுவலர் மேரிஜேசிரோச் துவக்கி வைக்கிறார். வான்முகில் இயக்குனர் பிரிட்டோ, பேராசிரியர் பார்வதிநாதன், மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர் கணபதி, மாநில துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் உட்பட பலர் பேசுகின்றனர்.ஒருங்கிணைப்பாளர் பீட்டர் பாஸ்கரன் நன்றி கூறுகிறார்.இளம் விஞ்ஞானிகளை உருவாக்க விரும்பும் அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும், இதில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். நில வளம் சார்பான ஆய்வும், பயிற்சியும், வழிகாட்டுதலும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் என்று மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர் கணபதி தெரிவித்தார்.ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், வான்முகில் அறக்கட்டளையினர் இணைந்து செய்துள்ளனர்.


நன்றி: தினமலர்

குழந்தைகள் இயக்க அறிவியல் மாநாடுவழிகாட்டி

ஜூலை 29,2010,03:06 IST

திருப்பூர்:தேசிய குழந்தைகள் இயக்க அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உதவும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம், காங்கயம் ராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வரும் 31ல் நடக்கிறது.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:தேசிய அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப கவுன்சில் சார்பாக, 1993 முதல் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது. இந்தாண்டு வரும் டிச., 27 முதல் 31 வரை ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் நடக்கிறது.நில வளம் என்ற தலைப்பில் இந்தாண்டு மாநாடு நடத்தப்படுகிறது. இதில், ஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.

ஒரு வழிகாட்டி ஆசிரியரின் ஒத்துழைப்புடன் மாணவர்கள் ஆய்வை மேற்கொண்டு, ஆய்வறிக்கை தயார் செய்ய வேண்டும். மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்படும் ஆய்வுக்கட்டுரைகள், அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும்.ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் மிக சிறந்த இரண்டு ஆய்வு கட்டுரைகள், இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டில் பங்கேற்று சமர்பிக்கப்படும்.இம்மாநாட்டுக்கு மாணவர்களை தயார் செய்ய உதவும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம், காங்கயம் ராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வரும் 31ம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு 94430 - 24086 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர்

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

ஆகஸ்ட் 31,2010,02:30 IST

ராசிபுரம்: மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மற்றும் மாவட்ட வழிகாட்டி ஆசிரியர்கள் பயிற்சி முகாம் ராசிபுரம் வித்யா மந்திர் பள்ளியில் நடந்தது. மாவட்டத் தலைவர் தெய்வசிகாமணி தலைமை வகித்தார். பள்ளி தலைவர் ஆடிட்டர் சேகர், செயலாளர் ராமசாமி, பொருளாளர் சுந்தரராஜன், முதல்வர் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மல்லிகா, மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சேதுராமன், சுரேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகேஷ்குமார், மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.


நன்றி: தினமலர்


இளம் விஞ்ஞானிகள் மாநாடு

ஆகஸ்ட் 19,2010,23:01 IST

சிவகங்கை : அறிவியல் இயக்கம் சார்பில், இளம் விஞ்ஞானிகள் மாநாடு நடக்கவுள்ளது.

மாவட்ட தலைவர் ரகுபதி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் கூறியதாவது: 10 முதல் 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களிடையே அறிவியல் ஆர் வத்தை தூண்டும் வகையில், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் நடக்கும் இம்மாநாட்டிற்கான ஆய்வு தலைப்பு, "நிலவளம்'. அதில் "வளமைக்காக பயன்படுத்துவோம்; வரும் தலைமுறைக்காகவும் பாதுகாப்போம்' என்ற பொருளை மையமாக வைத்து ஆய்வு கட்டுரைகள் தயாரிக்க வேண்டும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை இளநிலை மாணவர் பிரிவு; ஒன்பது முதல் பிளஸ் 2 வரை சீனியர் பிரிவுகளில் தலா ஐந்து பேர் கொண்ட குழுவினர் பங்கேற்கலாம்.

இம்மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானிகள் விருது, வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்படும். பள்ளிக்கு ஒரு அறிவியல் ஆசிரியர் பங்கேற்கலாம் என்றனர்.


நன்றி: தினமலர்

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

அக்டோபர் 22,2010,00:00 IST

காரைக்கால்:காரைக்கால் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் 18வது மாநாடு நடந்தது.இம்மாநாடு குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தர்மராஜ் கூறியதாவது:காரைக்காலில், தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் மாநாட்டையொட்டி, 6 வயது முதல் 14 வயது வரையிலான மாணவ, மாணவியர் 2500 வார்த்தையிலும், 14 முதல் 17 வயது வரையிலான மாணவ, மாணவியர் 3500 வார்த்தைகளிலும் மண் வளம் குறித்து ஆய்வுக் கட்டுரை தயாரித்து சமர்ப்பிக்கும்படி @கட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.


அதன்படி 30 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 200 மாணவர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கினர். மாணவ, மாணவியர்களின் ஆய்வுக் கட்டுரைகளை புதுச்சேரி சி.இ.ஆர்.பி., அமைப்பின் தலைவர் ரகுநாத், செயலர் விஜயமூர்த்தி, சுதர்சன் ஆகியோர் ஆய்வு செய்து, 6 சிறந்த கட்டுரையாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.அந்த 6 கட்டுரையாளர்களும் அடுத்த மாதம் புதுச்சேரியில் நடைபெறும் மாநில மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.அதன்பின் தேர்வு செய்யப்படுவோர் சென்னையில் நடைபெறும் அகில இந்திய அளவிலான மாநாட்டில் பங்கேற்பர்.


சென்னை மாநாட்டில் சிறந்த கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, இளம் விஞ்ஞானி உள்ளிட்ட விருதுகளுடன் அரசு வேலைக்கும் ஏற்பாடு செய்யப்படும்.மாநாடு ஏற்பாடுகளை புதுச்சேரி அறிவியல் இயக்கத் தலைவர் சம்பந்தம், நிர்வாகிகள் விஸ்வேஸ்வரமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் உள்ளிட்டோர் செய்தனர்.


நன்றி: தினமலர்

கோவையில் குழந்தைகளுக்கான அறிவியல் மாநில மாநாடு

அக்டோபர் 25,2010,01:10 IST
தினமலர்
சூலூர்: "குழந்தைகளுக்கான அறிவியல் மாநில மாநாடு, கோவையில் வரும் டிச.,ல் நடக்கிறது. மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை மற்றும் தேசிய அறிவியல் தொழில் நுட்ப பரிமாற்ற குழு இணைந்து, ஆண்டு தோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்துகின்றன. தமிழ்நாட்டில், "தமிழ்நாடு அறிவியல் இயக்கம்' மாநாட்டு பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த உள்ளது. பள்ளி மாணவர்கள் குழு வாரியாக தங்களின், அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளை மாவட்ட, மாநில வாரியாக சமர்ப்பிப்பார்கள். மாநில அளவில் தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும். வரும் டிச., 26 முதல் 31 வரை 18வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு சென்னையில் நடக்கிறது. "நில வளம்- வளமைக்காக பயன்படுத்துவோம், வரும் தலைமுறைக்காகவும் பாதுகாப்போம்' என்ற கருப்பொருள் மாநாட் டில் முக்கிய ஆய்வாக எடுத்துக் கொள்ளப் படும். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், வரும் டிச., 3 முதல் 5ம் தேதி வரை அரசூர் கே. பி. ஆர்., பொறியியல் கல்லூரியில் மாநில மாநாடு நடக்கிறது.

மாநாட்டு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை மற்றும் வரவேற்பு குழு கூட்டம் கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி மேலாண்மை இயக்குனர் சிகாமணி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் அருள்ஸ்ரீ வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலர் பாதுஷா பேசியதாவது: நவ.,ல் நடைபெறும் கோவை மாவட்ட மாநாட்டில் 2000 க்கும் அதிகமான ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படும். மாநாட்டில் 10,000 மாணவர்கள், 2,000 ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். அரசு பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சி. பி. எஸ். இ., என 1,500 பள்ளிகள் பங்கேற்கின்றன. ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். மாநில அளவில் தேர்வு செய்யப்படும் 200 ஆய்வுகளில், 30 கட்டுரைகள் தேசிய மாநாட்டுக்கு தேர்வு செய்யப்படும். மாநாட்டில், விஞ்ஞானிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடல், சாதனையாளர்களுடன் சந்திப்பு உள்ளிட்ட நிகழச்சிகள் நடக்கிறது. கணித விளையாட்டுகள், எளிய அறிவியல் பரிசோதனைகள், தொலைநோக்கி வழியே இரவு வான் என 9 அரங்குகளில் மாணவர்களுடன் விஞ்ஞானிகள் சந்திப்பு நடக்கிறது. மேலும், ஆசிரியர்களுக்காக கற்றல் கற்பித்தல் குறித்த அரங்குகள் மற்றும் பள்ளி மாணவர்கள் காணும் வகையில், மாவட்டங்களின் கலை நிகழ்ச்சிகள், அறிவியல் கண்காட்சி நடக்கிறது. மாநாடு ஒட்டி இன்ஜி., கலை அறிவியல் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்குகள் நடைபெறும். இவ்வாறு, பாதுஷா பேசினார். நிகழ்ச்சியில், அண்ணா பல்கலை முனைவர் விக்கிரமன், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாதவன், மாவட்ட தலைவர் நடராஜன் கல்லூரி முதன்மை செயல் அலுவலர் தனபால் உட்பட அறிவியல் இயக்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

நன்றி: தினமலர்

காரைக்காலில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு


தினமணி
22 Oct 2010 01:17:58 PM IST


காரைக்கால், அக். 21: காரைக்காலில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் தயார் செய்திருந்த மண் வளம் குறித்த ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது.

தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் 2010 என்ற மாவட்ட அளவிலான அறிவியல் மாநாடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாநாட்டை முதன்மைக் கல்வி அலுவலர் எஸ். தர்மராஜ் தொடக்கிவைத்தார்.

இந்த மாநாட்டில் மண்ணின் தரம், எந்தெந்த தாவரம் பயிரிட முடியும் உள்ளிட்ட பல்வேறு விளக்கங்களுடன் கட்டுரைகளை ஆய்வுக் குழுவினரிடம் மாணவர்கள் அளித்தனர். காரைக்காலில் 30 பள்ளிகளில் இருந்து சுமார் 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, கட்டுரைகளில் கூறப்பட்டுள்ள விவரங்களை விளக்கினர். முதன்மைக் கல்வி அலுவலர் எஸ். தர்மராஜ் பேசும்போது, இந்த மாநாட்டில் தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அடுத்த மாதம் புதுச்சேரியில் நடைபெறவுள்ள மாநில அளவிலான மாநாட்டுக்கு அனுப்பப்படும். மாநில அளவில் தேர்வு செய்யப்படுவோர் சென்னையில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான மாநாட்டில் பங்கேற்பர். இவர்களுக்கு இளம் விஞ்ஞானி உள்ளிட்ட பல விருதுகளும், வேலைவாய்ப்புக்குரிய முன்னுரிமையும் கிடைக்கும் என்றார்.

மாநாட்டில் பேராசிரியர் சம்பந்தன், விஸ்வேஸ்வரமூர்த்தி, சிஇஆர்பி அமைப்பின் தலைவர் ரகுநாத், விஜயமூர்த்தி, சுதர்ஸன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

18-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

கம்பம், ஜூலை 23: தேசிய குழந்தைகளுக்கு நடத்தப்படும் அறிவியல் மாநாட்டிற்கு தலைப்புகளை அறிவியல் இயக்கம் அறிவித்துள்ளது.
குழந்தைகளிடையே இயல்பாக உள்ள ஆய்வு மனப்பான்மையையும், படைப்புத் திறனையும் வெளிகொண்டு வரும் விதமாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 1993-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை, தேசிய தகவல் மற்றும் அறிவியல் தொழில்நுட்பப் பரிமாற்றக்குழு ஆகியவற்றோடு இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இம்மாநாட்டை நடத்தி வருகிறது.


இந்த 18-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 10 முதல் 13 வயதுள்ள குழந்தைகளும், 14 முதல் 17 வயதுள்ள பள்ளிக் குழந்தைகள் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆய்வுக் கட்டுரைகளைத் தயார் செய்யலாம். இதில் இந்தாண்டு கருப்பொருளாக நிலவளம்-வளத்திற்காகப் பயன்படுத்துவோம், வருங்காலத்திற்காகவும் பாதுகாப்போம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உபதலைப்பாக, நிலத்தின் செயல்பாடுகள், நிலத்தின் தரம், நிலத்தில் மனிதனால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள், நிலவளத்தின் நிலைத்தகு பயன்பாடுகள், நிலத்தை பயன்படுத்துவது பற்றிய சமூக அறிவு ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பெயர் பதிவு ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்கும். பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே மாநாட்டில் கலந்து கொள்ள முடியும். மாவட்ட அளவில் அக்டோபரிலும், மாநில அளவில் நவம்பரில் கோவையிலும், தேசிய அளவில் டிசம்பர் மாதம் ஹரியானா மாநிலத்திலும் மாநாடு நடைபெற உள்ளது.


மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். சிறந்த ஆய்வு புரிந்தவருக்கு இளம் விஞ்ஞானி விருது குடியரசு தலைவரால் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.


இதுபற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், ஆசிரியருமான எஸ்.சுந்தர் கூறியதாவது:
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கடந்தாண்டு தேனி, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 2 மாணவர்கள் இளம் விஞ்ஞானி விருதைப் பெற்றனர். இந்தாண்டு அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்கும் விதத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வழிகாட்டிப் புத்தகங்கள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

நன்றி: தினமணி