சிவகங்கை : அறிவியல் இயக்கம் சார்பில், இளம் விஞ்ஞானிகள் மாநாடு நடக்கவுள்ளது.
மாவட்ட தலைவர் ரகுபதி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் கூறியதாவது: 10 முதல் 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களிடையே அறிவியல் ஆர் வத்தை தூண்டும் வகையில், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் நடக்கும் இம்மாநாட்டிற்கான ஆய்வு தலைப்பு, "நிலவளம்'. அதில் "வளமைக்காக பயன்படுத்துவோம்; வரும் தலைமுறைக்காகவும் பாதுகாப்போம்' என்ற பொருளை மையமாக வைத்து ஆய்வு கட்டுரைகள் தயாரிக்க வேண்டும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை இளநிலை மாணவர் பிரிவு; ஒன்பது முதல் பிளஸ் 2 வரை சீனியர் பிரிவுகளில் தலா ஐந்து பேர் கொண்ட குழுவினர் பங்கேற்கலாம்.
இம்மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானிகள் விருது, வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்படும். பள்ளிக்கு ஒரு அறிவியல் ஆசிரியர் பங்கேற்கலாம் என்றனர்.
நன்றி: தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக