தே.கு.அ.மாநாடு 2010

தே.கு.அ.மாநாடு 2010
NCSC 2010 - Tamil Nadu

புதன், 17 நவம்பர், 2010

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு : மாணவர் சார்பில் 87 ஆய்வு கட்டுரைகள்

நவம்பர் 12,2010,21:18 IST

கூடலூர் : கூடலூரில் நடந்த 18வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மாணவர்கள் சார்பில் 87 ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாவட்ட அளவிலான 18வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, கூடலூர் மார்னிங் ஸ்டார் பள்ளியில் நடந்தது. மாநாட்டை மார்னிங் ஸ்டார் பள்ளி தாளாளர் அருட்தந்தை மேத்யூ துவக்கி வைத்தார். இதில்,6 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் ஜூனியர் பிரிவிலும், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்கள் சீனியர் பிரிவிலும் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.
மொத்தம் 87 ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டது. இதில், ஜூனியர் மாணவர்கள் 50 ஆய்வு கட்டுரைகள் சமர்பித்து, நடுவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். நடுவர்களாக பெங்களுரூ இந்திய அறிவியல் மைய ஆராய்ச்சியாளர் ஆனந்த், நீலகிரி மாவட்ட வேளாண் துறையை சேர்ந்த ரமேஷ், கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மீராசேகர், ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் முருகேசன், கூடலூர் பாரதியார் பல்கலைக் கழக கலை அறிவியல் கல்லூரி விரிவுரையாளர் பழனிசாமி ஆகியோர் இருந்தனர்.
மாநாட்டில் 10 ஆய்வு கட்டுரைகள் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன. மாநில தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு அடுத்த மாதம் 3, 4 ஆகிய தேதிகளில் கோவையில் நடக்கிறது. மாநாட்டுக்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட தமிழ் நாடு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுலைமான் செய்திருந்தனர்.


நன்றி: தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக