18 Nov 2010 10:16:33 AM IST
கூடலூர், நவ 17: தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு, கூடலூர் மார்னிங் ஸ்டார் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்காக நடத்தப்பட்ட இளம் விஞ்ஞானிகள் தேர்வில், இப்பள்ளியைச் சேர்ந்த ஐரின், பிரியா, சுப்கஷா, சுனில், அபிலாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், வெட்டி வேர் புல்லை வளர்த்து, மண் அரிப்பைத் தடுப்பதுடன், மண் வளம், ஈரப்பதம், நிலத்தடி நீரைப் பாதுகாப்பது தொடர்பான ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்து, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நன்றி: தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக