27 Oct 2010 12:10:20 PM IST
ராமநாதபுரம், அக். 26: ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வுக் கட்டுரைப் போட்டிகளில், சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளுக்கு பரிசு வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பள்ளி மாணவ, மாணவியர்க்கான பல்வேறு ஆய்வுக் கட்டுரைப் போட்டிகளை ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு என்ற பெயரில் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நில வளம் காப்போம் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரைப் போட்டிகள், ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியல் நடத்தப்பட்டன. மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 32 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதில், 4 கட்டுரைகள் சிறந்தவையாகத் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
ராமநாதபுரம் நேஷனல் அகாதெமி மெட்ரிக் பள்ளி, சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியனவாகும்.தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பரிசு வழங்கும் நிறைவு விழாவில், என்.சி.எஸ்.சி. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தர்மமுனியராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் இ.பாலகிருஷ்ணன், பொருளாளர் டி.முத்துலெட்சுமி, பேராசிரியர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என்.போஸ், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
விழாவில் வேளாண்மை அலுவலர் கோபாலகிருஷ்ணன், மன நல ஆலோசகர் அசரப் அலி, கீழக்கரை பாலிடெக்னிக் பேராசிரியர் அஜய், செந்தில்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக