தே.கு.அ.மாநாடு 2010

தே.கு.அ.மாநாடு 2010
NCSC 2010 - Tamil Nadu

புதன், 17 நவம்பர், 2010

குழந்தைகள் இயக்க அறிவியல் மாநாடுவழிகாட்டி

ஜூலை 29,2010,03:06 IST

திருப்பூர்:தேசிய குழந்தைகள் இயக்க அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உதவும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம், காங்கயம் ராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வரும் 31ல் நடக்கிறது.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:தேசிய அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப கவுன்சில் சார்பாக, 1993 முதல் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது. இந்தாண்டு வரும் டிச., 27 முதல் 31 வரை ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் நடக்கிறது.நில வளம் என்ற தலைப்பில் இந்தாண்டு மாநாடு நடத்தப்படுகிறது. இதில், ஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.

ஒரு வழிகாட்டி ஆசிரியரின் ஒத்துழைப்புடன் மாணவர்கள் ஆய்வை மேற்கொண்டு, ஆய்வறிக்கை தயார் செய்ய வேண்டும். மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்படும் ஆய்வுக்கட்டுரைகள், அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும்.ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் மிக சிறந்த இரண்டு ஆய்வு கட்டுரைகள், இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டில் பங்கேற்று சமர்பிக்கப்படும்.இம்மாநாட்டுக்கு மாணவர்களை தயார் செய்ய உதவும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம், காங்கயம் ராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வரும் 31ம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு 94430 - 24086 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக