தே.கு.அ.மாநாடு 2010

தே.கு.அ.மாநாடு 2010
NCSC 2010 - Tamil Nadu

புதன், 17 நவம்பர், 2010

சாயக்கழிவு பிரச்னைக்கு எளிய முறையில் தீர்வு : பிரண்ட்லைன் பள்ளி மாணவர்கள் ஆய்வு

நவம்பர் 12,2010,21:08 IST

திருப்பூர் : பிரண்ட்லைன் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், "திருப்பூரை காப்பாற்றுவோம்' என்ற தலைப்பில் சாய ஆலைகளால் ஏற்படும் பிரச்னை மற்றும் அதற் கான தீர்வு குறித்து ஆய்வு கட்டுரை தயாரித்துள்ளனர். இக்கட்டுரை, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளது.
அமிர்தா நிகர்நிலை பல்கலையில் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. இதில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில், பிரண்ட்லைன் பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் அஸ்வின் பாரதி, அரவிந்த் விஜய், கார்த்திக் பிரசாந்த், துரை வெங்கடேஷ், கவிதா ஆகியோர் ஆசிரியர் சுமதி தலைமையில் தயாரித்த "திருப்பூரை காப் போம்' என்ற தலைப்பிலான ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தனர்.
திருப்பூரில் நிலவி வரும் சாயக் கழிவு பிரச்னை மற்றும் அதற்கான தீர்வு குறித்த அக்கட்டுரை, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகிஉள்ளது. அப்போட்டி, வரும் டிச., 3ம் தேதி, கோவை கே.பி.ஆர்., கல்லூரியில் நடக்கிறது.
ஆய்வு கட்டுரை தயாரித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர் கூறியதாவது: சாய ஆலைகளில் சுத்திகரிப்பு முறையில் நீரை சுத்தப்படுத்தி பயன்படுத்துகின்றனர். ஆனால், அதிலிருந்து வெளிப்படும் திடக் கழிவுகளை மண்ணில் புதைத்து விடுகின்றனர். இதனால், பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன. சுற்றுச்சுழலுக்கு மாசு ஏற்படுத்தக் கூடிய பயனற்ற திடக்கழிவுகளை நுண்ணுயிர்கள் மூலம் உயிரியல் திடக்கழிவாக மாற்றி உரமாக பயன் படுத்தும் முறையை தயாரித்து உள்ளோம். சாய திடக்கழிவில் கிளோரைட், சல்பேட், கால்சியம், மெக்னீசியம், சோடியம் உள்ளிட்ட ரசாயனங்கள் அதிக அளவில் உள்ளன. இவை இயற்கைக்கு மாசு ஏற்படுத்தும்.
ரசாயன திடக்கழிவில் நுண்ணுயிர்களை பயன்படுத்தி, மாற்றப் பட்ட உயிரியல் திடக்கழிவில் பாஸ்பரஸ், நைட்ரஜன், பொட்டாசியம், ஆர்கானிக் கார்பன் உள்ளிட்டவை நிறைந்துள்ளன. இவை சுற்றுச்சூழலுக்கு தீங்கற்றது; மேலும், பயிர்கள், செடிகள் பயிரிடுவதற்கு உரமாக பயன்படுத்தலாம் என்ற எங்கள் ஆய்வை கோவை வேளாண் பல்கலை உறுதி செய்துள்ளது. அதிக செலவில்லாமல் இந்த ஆய்வை செயல்படுத்தலாம், என்றனர்.
இதே பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஹரிபிரசாந்த், கனிமொழி, பவித்ரா, தீபிகா, மீனா பேச்சியம்மாள் ஆகியோர் ஆசிரியர் சுபா தலைமையில் சாயநீர் சுத்திகரிப்பு பற்றிய மற்றொரு ஆய்வு கட்டுரை யையும் மாவட்ட அளவிலான போட்டிக்கு சமர்ப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி: தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக