விழுப்புரம் : தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நிறைவு விழா விழுப்புரத்தில் நடந்தது.விழுப்புரம் நித்யானந்தா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த விழாவிற்கு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் வீரபாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநாடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவமுருகன் வரவேற்றார். அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் நித்யானந்தம், முதல்வர் பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினர்.
மாநில செயலாளர் வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினார். தேசிய குழந்தைகள் அறிவியில் தினத்தையொட்டி நடந்த ஆய்வு கட்டுரை போட்டியில் 20 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில் திருக்கோவிலூர் தாலுகா இளாப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி முதல் பரிசை வென்றது. வானூர் தாலுகா பரங்கினி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்கள் இரண்டாவது பரிசையும், விழுப்புரம் இ.எஸ்., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மூன்றாவது பரிசையும் பெற்றனர். போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு தாவரவியல் துறை தலைவர் (ஓய்வு) தனஞ்செழியன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக