மண்ணச்சநல்லூர்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், திருச்சி இருங்களுர் டி.ஆர்.பி., இன்ஜினியரிங் கல்லூரியில் 18வது தேசிய குழந்தைகள் இரண்டு நாள் அறிவியல் மாநாடு நேற்று துவங்கியது. பாரதிதாசன் பல்கலை மகளிரியல் துறை இயக்குனர் மணிமேகலை தலைமை வகித்து பேசுகையில், ""மாணவர்கள் படிப்பது மட்டுமின்றி சமுதாயத்துக்கும் சேவையாற்ற வேண்டும். நிலவளத்தை பாதுகாத்து மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும்,'' என்றார். இருங்களுர் எஸ்.ஆர்.எம்., குழும துணைத்தலைவர் பார்க்கவன் பச்சமுத்து, முதன்மை நிர்வாக அதிகாரி வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநாட்டில் பங்கேற்ற கருத்தாளர்களை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சபரிக்குமார் அறிமுகப்படுத்தினார். டி.ஆர்.பி., கல்லூரி முதல்வர் தமிழரசன் மாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில், ""எரிசக்தியை சிக்கனப்படுத்துதல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல், உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்துதல் ஆகிய மூன்றிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார். விழாவில், டி.ஆர்.பி.,கல்லூரி முதலாமாண்டு ஒருங்கிணைப்பாளர் இளங்கோ, உதவி பேராசிரியர் ரொசாரியோ உட்பட பலர் பங்கேற்றனர். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் தேசிய அளவில்நடக்கும் இளம் விஞ்ஞானிகள் தேர்வில் கலந்து கொள்வர். முன்னதாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் நடராசன் வரவேற்றார். திருச்சி ஜோசப் கல்லூரி சுற்றுச்சூழல் துறை உதவி பேராசிரியர் அசோக் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.
நன்றி: தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக