கோபி, நவ. 11: கோபி ஸ்ரீ குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் இயற்கை விவசாயம் செய்யும் முயற்சியில் மாணவியர்கள் ஈடுபட்டுள்ளனர்.தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்காக ஸ்ரீ குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் 5 மாணவிகள் இயற்கை முறையில் தயார் செய்யக்கூடிய கரைசல்கள், பூச்சி விரட்டிகளைத் தயார் செய்வது குறித்து இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் சத்தியைச் சேர்ந்த சுந்தரராமன் என்பவரிடம் மூன்று நாள்கள் பயிற்சி பெற்றனர்.இதைப் பள்ளியில் செயல்படுத்தி, 1 சென்ட் நிலத்தில் நெல், தக்காளி, வெண்டை, கத்தரி ஆகிய பயிர்களைப் பயிர் செய்து, தயாரித்த கரைசல்களைப் பயிர்களுக்குப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர்.
நன்றி: தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக