கரூர்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கொங்கு கல்வி அறக்கட்டளை, ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் கரூரில் அறிவியல் திருவிழா மற்றும் 18வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. அட்லஸ் கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில், கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் நாச்சிமுத்து தலைமை வகித்தார். ஏ.டி.ஜி.பி., ராஜா சிறப்புரையாற்றினார். கரூர் ரோட்டரி சங்கத் தலைவர் முத்துசாமி, அறிவியல் சங்க மாநில செயலாளர் சேதுராமன், கவுரவத் தலைவர் சங்கர் முன்னிலை வகித்தனர். கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் சிவகுமார் வரவேற்றார். பரணிபார்க் கல்வி நிறுவனங்கள் சீனியர் முதல்வர் ராமசுப்பிரமணியன் அறிமுக உரை நிகழ்த்தினார். பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கொங்கு மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜேந்திரன், பரணிபார்க் கல்வி நிறுவனங்கள் தாளாளர் மோகனரங்கன், வெள்ளாளர் மேல்நிலை மேல்நிலைப்பள்ளி தாளாளர் கணபதி உட்பட பலர் பங்கேற்றனர்
நன்றி: தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக