தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு என்ற குழந்தைகளுக்கான, ஒரு நிகழ்வு ,1973 லிருந்து,கடந்த17 ஆண்டுகளாக,இந்தியா முழுவதும், அனைத்து மாநிலங்களிலும், நடத்தப் பட்டு வருகிறது. இதனை இந்திய அரசின் தொழில் நுட்பத்துறையும், தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழுமமும், மற்றும் Rashtriya Vigyan Evan Prodyogiki Sanchar Parishad (RVPSP), இணைந்து நடத்துகின்றன. மாநிலங்களின் அறிவியல் தொழில் நுட்பக்கழகம் / தன்னார்வல இயக்கங்கள் இதில் பங்கேற்று ,இதனை, ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றன. இந்தியாவின் மற்ற மாநிலங்களில், அரசு சார்ந்த அமைப்புகளும், தமிழ் நாட்டிலும் மற்றும் ஆந்திராவிலும் தன்னார்வல அமைப்பும் நடத்துகின்றன. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பைச் சேர்ந்த, தமிழ் நாடு அறிவியல் இயக்கம்தான், தமிழ் நாட்டில் இதனை கடந்த 17 ஆண்டுகளாக, சிறப்புடன் செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் மாதம் 27 -31 தேதிகளில், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, ஏதாவது ஒரு மாநில தலைநகரில் நடக்கும். பொதுவாக இதில், இந்நாட்டின் முதல் குடிமகன், குடியரசுத் தலைவர்தான், இதில் பங்கேற்று, மாணவர்களுக்கு, இளம் விஞ்ஞானி பட்டமும், சான்றிதழும், பரிசும் கொடுப்பார் . .
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கான கருப் பொருளை இந்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை, உலகின் அன்றைய சூழல் மற்றும் தேவையை ஒட்டி தேர்ந்தெடுக்கும்.ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை இந்த தலைப்பு மாறுபடும். கடந்த மாநாட்டின் மையப் பொருள்,,
புவிக்கோள். இந்த மாநாட்டின் கருப் பொருள்,, நிலவளம்..இதன் கீழ் குழந்தைகள், 6 துணைத்தலைப்புகளில் ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். பொதுவாக இப்படி குழந்தைகள் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதி லிருந்து, நாட்டின் மூலை முடுக்குகளிலுள்ள வளங்கள், உயிரினங்கள் , அரிய ஜீவராசிகள், புதிய உயிரிகள் போன்றவை அறியப் பட்டு, உயிரின புத்தகங்களில் பதிவும் செய்யப் படுகின்றன. அதற்கான வாய்ப்புகள் குழந்தைகள் மூலமே உருவாக்கப் படுகின்றன.ஓர் அரசு தனியாக செயல்பட்டு செய்வதைவிட, செலவின்றி, இப்படி குழந்தைகள் மூலம், தேசத்தின் அரிய பொக்கிஷங்களை கண்டறிவது எளிது.
இந்தியா முழுவதிலும் உள்ள 10-17 வயதுள்ள குழந்தைகள் இதில் பங்கேற்கலாம். பங்கேற்பதற்கான ஒரே தகுதி வயது மட்டும்தான் . பள்ளிக்குழந்தைகளும், பள்ளி சாராக் குழந்தைகளும், இரவுப்பள்ளியில் படிப்பவர்களும், படிப்பை இடைவிட்ட குழந்தைகளும் கூட இதில் பங்கேற்கலாம். . இக்குழந்தைகள் அறிவியல் தொழில் நுட்ப குழுமம் அறிவித்த மைய பொருள் பற்றி சுமார் மூன்று மாத காலம் குழுவாக ஆய்வு செய்ய வேண்டும். .குழுவின் எண்ணிக்கை 2 - 5 பேர் மட்டுமே.. குழந்தைகளின் குழு,ஆய்வினை சுமார் 3 மாத காலம் . ஒரு வழிகாட்டி ஆசிரியரின் துணையுடன் செய்ய வேண்டும். ஆய்வு எப்போதும், உள்ளூர் பிரச்சினைகள் , தகவல்கள்,செயல்பாடுகள் உள்ளதாய் இருக்க வேண்டும். ஒரு மாவட்டத்துக்காரர் அடுத்த மாவட்ட தகவல்களை எடுத்து ஆய்வு செய்தல் கூடாது. தலைப்பே தன்னிலை விளக்கம்
தருவதாக இருக்க வேண்டும். ஆய்வு சோதனையாகவோ,கணக்கெடுப்பு முறையாகவோ, மக்களின் பிரச்சனைகளை மையப் படுத்தியோ இருக்கலாம். ஆனால், உயிர்ப் பொருள்கள், ஆபத்து விளைவிக்கும் பொருள்கள் மற்றும் மனிதனின் உணவு/பானம் போன்றவற்றில், ஆய்வுகள் செய்தல் கூடாது.
மாவர்களின் ஆர்வத்தைத் தூண்டி, சிந்தனையை வளர்த்து , அதற்கு அறிவியல் கண்நூட்டத்தொடு உரிய வடிவம் கொடுக்கும் நல்ல வாய்ப்பை இம்மாநாடு, குழந்தைகளுக்குத் தருகிறது.ஆய்வின் கருத்தினை. இளநிலை வயதினர் (10௦-13),2500 வார்த்தைகளுக்கு மிகாமலும், மேனிலை வயதினர் (14 -17 ) , 3 ,500௦௦ வார்த்தைகளுக்கு மிகாமலும் ஆய்வறிக்கை தயார் செய்ய வேண்டும். மேலும்,
ஆய்வறிக்கைக்கான செலவு, ரூ 250 க்கு மேல் ஆகக் கூடாது. தினந்தோறும் அதற்கான நாட்காட்டி எழுத வேண்டும். அறிக்கை யை மாணவர்கள், மாவட்ட மாநாட்டில் சமர்ப்பிப்பார்கள். அதிலிருந்து மாநில மாநாட்டிற்கு அறிக்கை தெரிவு செய்யப்படும். பின்னர், தேசிய மாநாட்டிற்குகுழந்தைகளின் அறிக்கைகள் தேர்ந்தெடுக்கப் படும். எல்லா நிலைகளிலும், பங்கு பெறும் குழந்தைகளுக்கு இளம் விஞ்ஞானி சான்றிதழும், பரிசும் தரப்படும்.
குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் குழந்தைகள், மதிப்பீட்டாளர் முன்பு உரையாடல்/நேர்காணலும் செய்ய வேண்டும்.இங்கு குழந்தைகள், தங்கள் ஆய்வறிக்கைக்கான பிரச்சினை மற்றும் தீர்வையும் சொல்லுவார்கள்.ஒரு மாவட்டத்தில் சுமார் 200௦௦ ஆய்வறிக்கைகள் என்றால், ஒவ்வொரு ஆண்டும் இந்த தகவல்கள் தமிழ் நாடு முழுவதும் சுமார் 200 X 5 X 30 =30,000 குழந்தைகளுக்கு இந்த அறிவுத்தேடல் நடை பெறுகிறது. இந்தியா முழுவதும், சுமார் 90 ,0000 குழந்தைகள் இதில் பங்கேற்கின்றனர்.
தேசிய குழந்தைகள அறிவியல் மாநாடு நடைபெறும் இடத்தில் , ஒரே நாளில், அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த குழந்தைகள், , சாதி, மதம், இனம் , மொழி கடந்து சந்தோஷமாய் கூடி விளையாடி இருப்பார்கள், அங்கேதான்,உண்மையான தேசிய ஒற்றுமையும், ஒருமைப்பாடும்,காணப்படும். மேலும் கடந்த 4 ஆண்டுகளாக, தெற்கு ஆசிய நாடுகளான, நேபாளம் ,பூடான், பர்மா, மலேசிய, தாய்வான் 7என நாடுகள் பங்கேற்றன.( உலகின் மற்ற மூன்றாம் நாடுகள், நம் போலவே, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப் போவதாக கூறினர். ) குழந்தைகள், அறிஞர்களுடன்,கணினி மூலம் தொடர்பு கொண்டு, வினா கேட்டு விடை பெறுவார்கள். குழந்தைகளின் வாழ்நாளில் இது மறக்க முடியாத நிகழ்வு/பயணமாக இருக்கும். என்றும் அவர்களின் நெஞ்சில்
இனிமையாக, பசுமையான நினைவாக வாழும்.
2005 மாநாடு நடந்த இடம்..புவனேஸ்வர்,
2006, மாநாடு.சிக்கிம்
2007 மாநாடு, பாராமதி
2008 மாநாடு, நாகாலாந்து
2009 , மாநாடு குஜராத்
குறிப்பு.: இரு ஆண்டுகளுக்கு முன்பு, திருப்பூரில் ஒரு குழந்தை செய்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், உயர் நீதிமன்ற தீர்ப்பு ஒன்று எழுதப்பட்டது.
எழுதியவர்: பேராசிரியர் : S.மோகனா, NCSC 2010 , TNSF
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக