கரூர்: சென்னை மற்றும் சத்தியமங்கலத்தில் நடைபெறவுள்ள அறிவியல் கண்காட்சியில் படைப்புகளை வைக்க கரூர் நகராட்சி குமரன் உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்ட அளவிலான இன்ஸ்பயர் அறிவியல் கண்காட்சியில் கரூர் நகராட்சி குமரன் உயர்நிலைப்பள்ளி மாணவன் பிரவீன் வைத்த மனித ஆற்றல் மூலம் பல்வகை செயல்பாடு என்ற அறிவியல் படைப்பு தேர்வு செய்யப்பட்டது. மாணவன் பிரவீன் விரைவில் சென்னையில் நடைபெறவுள்ள அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
மேலும், 19 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பள்ளி மாணவர்கள் பிரகாஷ்வேல், ரமேஷ், நவீன், பாரதி, தாஹூர் செய்த கடவூர் மலைப்பகுதியில் இயற்கை வளங்களை அழித்தால் ஏற்பட விளைவுகள் குறித்த படைப்பும் சிறந்தவையாக தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து மாணவ, மாணவிகள் வரும் 24 ம் தேதி மற்றும் 25 ம் தேதிகளில் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் நடைபெறவுள்ள அறிவியல் கண்காட்சியில் பங்கு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர் சண்முகவடிவு, அறிவியல் ஆசிரியர்கள் கண்ணகி, இளஞ்செழியன், ஆரோக்கிய பிரேம்குமார் ஆகியோர் பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக