சென்னை
First Published : 17 Nov 2011 09:50:36 AM IST
திருத்தணி, நவ. 16: திருத்தணியில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு அறிவியல் படைப்புகளை செய்து காட்டி பரிசுகளை பெற்றனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு திருத்தணி அரசு மகளிர் மேனிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொருளார் எம்.மகாலிங்கம் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் எம்.கந்தசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.கோபி வரவேற்றார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஜெ. நாகேந்திரன் அறிமுக உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக திருத்தணி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் இ.என்.கண்டிகை எ. ரவி கலந்துகொண்டு குழந்தைகள் அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்து இளம் அறிவியல் விஞ்ஞானிகளை வாழ்த்தி பேசினார்.
மாலை 4-மணிக்கு நடைபெற்ற நிறைவு விழாவில் மாவட்ட தலைவர் டாக்டர். ஆர்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். வட்டார மேற்பார்வையாளர் பி.முருகேசன், உதவி தொடக் கல்வி அலுவலர் எம்.தணிகாசலம் (பொறுப்பு), மாவட்ட செயலர் டி.வி. அருண வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஏ. பாலசந்தர் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக திருத்தணி நகர மன்ற தலைவர் டி.சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு சான்றிதழ், பரிசு வழங்கி மாணவர்களை பாராட்டினார். நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் மாசிலாமணி, நகர மன்ற உறுப்பினர்கள் கேபிள் எம்.சுரேஷ், செல்வகுமார், அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் அ.கலைநேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நன்றி: தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக