சேலம்: சேலத்தில், பள்ளி மாணவர்களுக்கான தேசிய அறிவியல் கண்காட்சி நடந்தது. அதில், விநாயகா வித்யாலயா பள்ளி மாணவர்கள் முதல் பரிசு பெற்றனர்.
"தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு' சார்பாக ஆண்டுதோறும், தேசிய அறிவில் கண்காட்சி, "நாலேட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில்' நடந்தது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த, 70 க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. சேலம் ஃபேர்லாண்ட்ஸ் விநாயகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாணவ, மாணவியர், "நீடித்த நிலையான கரும்பு சாகுபடி' என்ற தலைப்பில் குறைந்த நீரை கொண்டு, இரு மடங்கு மகசூல் பெறுவது பற்றி செயல்முறை மூலம் நிரூபித்து, முதல் பரிசை பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக