தே.கு.அ.மாநாடு 2010

தே.கு.அ.மாநாடு 2010
NCSC 2010 - Tamil Nadu

செவ்வாய், 22 நவம்பர், 2011

மாநாட்டின் 9 கட்டுரைகள்: மாநில போட்டிக்கு தேர்வு



பதிவு செய்த நாள் : நவம்பர் 16,2011,01:05 IST

கூடலூர் : கூடலூரில் நடந்த 13வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 9 ஆய்வு கட்டுரைகள், மாநில மாநாட்டு போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன.நீலகிரி மாவட்ட அளவிலான 13 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, கூடலூர் ஜி.டி.எம்.ஒ., பள்ளியில் நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வட்ட தலைவர் ஜெயன்லாப்தீன் வரவேற்றார். மாநாட்டுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுலைமான் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சரவணவடிவு பேசினார். கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மீராசேகர், வேளாண்மை துறை அலுவலர்கள் ரமேஷ், ரகு, கூடலூர் பாரதியார் பல்கலைக் கழக கலை அறிவியல் கல்லூரி விரிவுரையாளர்கள் சித்ரா, ஸ்ரீத்ரா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். மாநாட்டில் "மண்' என்ற தலைப்பில் மாணவர்கள் 88 ஆய்வு கட்டுரைகள் சமர்பித்தனர்.இதில், மார்னிங் ஸ்டார் பள்ளியிலிருந்தும், ஐடியல் மெட்ரிக் பள்ளியிலிருந்தும் தலா 2 ஆய்வு கட்டுரைகள், கூடலூர் புனித தாமஸ், தேவர்சோலை ஹோலிகிராஸ், ஹல்அமீன் மெட்ரிக் மற்றும் நீலகிரி மெட்ரிக் பள்ளிகளிலிருந்து தலா 1 ஆய்வு கட்டுரை, பள்ளி அல்லாத தொழில் இல்லத்தலிருந்து 1 கட்டுரை என மொத்தம் 9 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. ஜி.டி.எம்.ஓ., மெட்ரிக் பள்ளி முதல்வர் தேவராஜ் நன்றி கூறினார். "தேர்ந்தெடுக்கப்பட்ட 9 கட்டுரைகளும் இம்மாதம் சக்தியமங்கலம் பன்னாரிஅம்மன் பொறியியல் கல்லூரியில் மாநில அளவில் நடக்கும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு போட்டியில் சமர்பிக்கப்பட உள்ளது,' என அலுவலர்கள் தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செய்திருந்தது.


நன்றி: தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக