First Published : 17 Nov 2011 09:20:57 AM IST
சிதம்பரம், நவ. 16: மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நன்றி: தினமணி
நவம்பர் மாத இறுதியில் கோவை மாவட்டம் சத்தியமங்கலத்தில் மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. அண்மையில் குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சமர்ப்பித்த நெய்வேலி சுரங்க மண்ணின் பண்புகள்- ஒர் ஆய்வு என்ற ஆய்வறிக்கை தேர்வு பெற்றது.
ஆர்.ஜெயஸ்ரீ தலைமையில் எம்.மரியா தில்வேனியா, பி.அக்ஷயா, ஏ.அஜ்மீரா, பி.ஷப்னா ஆகியோர் இந்த ஆய்வறிக்கையை சமர்பித்திருந்தனர். அதில் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்காக அப்புறப்படுத்தப்படும் மண் காரத்தனமை உடையதாக உள்ளது. இம்மண்ணை அமிலத்தன்மை உடைய நிலத்தில் சேர்த்தால் நடுநிலைப்படுத்தப்படும் என்பதே அம்மாணவிகளின் கண்டுபிடிப்பாகும். மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவிகள், வழிகாட்டி ஆசிரியர்கள் எம்.கே.பன்னீர்செல்வம், எம்.சிவகுரு, ஜே.பி.சங்கரன் ஆகியோரை பள்ளி நிர்வாகிகள் ரத்தின.பாலசுப்பிரமணியன், ரத்தின.திருநாவுக்கரசு, தலைமை ஆசிரியர் ஆர்.ரவிசங்கர், உதவித் தலைமை ஆசிரியர் டி.சுவாமிநாதன் ஆகியோர் பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக