20th NCSC - 2012. ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு (NATIONAL CHILDREN'S SCIENCE CONGRESS 2010 & 2012) டிசம்பர் 27 முதல் 31 வரை தேசிய அளவில் இந்திய அரசின் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரிவர்த்தனை குழுமத்தினால் (NCSTC-Network) நடத்தப்படுகின்றது.இந்தியா முழுவதிலும் உள்ள 10 முதல் 17 வயது வரை உள்ள மாணவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். இம்மாநாட்டினை தமிழ்நாட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ( TNSF) ஒருங்கிணைக்கிறது. 20வது அகில இந்தியமாநாடு ---ல் நடைபெறும்.
செவ்வாய், 22 நவம்பர், 2011
தேசிய அறிவியல் மாநாட்டுக்கு புகளூர் அரசு பள்ளி மாணவிகள் படைப்பு தேர்வு.
வேலாயுதம்பாளையம்: தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் வைக்க புகளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட அளவிலான 19வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கரூர் பரணி பார்க் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாநாட்டில் மாவட்டம் முழுவதும் இருந்து 175 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை பள்ளி மாணவர்கள் சமர்பித்தனர். அதில் புகளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிஆசிரியர் ராமசாமி வழி காட்டுதலின் பேரில் ப்ளஸ்1 மாணவிகள் தேவிகா, புவனேஷ்வரி, சங்கவி, யுவராணி, வினோதினி ஆகியோர் சமர்பித்த "அருகி வரும் பயிர்கள் - ஓர் ஆய்வு' என்ற ஆய்வுக் கட்டுரை, செப்டம்பர் 23ம் தேதி முதல் செப்டம்பர் 25ம் தேதி வரை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் இன்ஜினியரிங் கல்லூரியில் நடக்கவுள்ள மாநில அளவிலான 19வது தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளியின் ஆசிரியர் முரளி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் தீபிகா, வித்யாராணி, புனிதா, கவிதா, தமிழ்ச்செல்வி ஆகியோர் சமர்பித்த "தரிசு நிலம் மற்றும் தாவரங்கள் நிறைந்த நிலத்தில் உள்ள உயிரின வேறுபாடு ஓர் ஆய்வு' என்ற ஆய்வுக் கட்டுரையானது சிறந்த ஆய்வுக் கட்டுரையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அறிவியல் படைப்புகளை கண்டுப்பிடித்த மாணவிகள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் முருகேசன் ஆகியோரை பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல், பி.டி.ஏ., நிர்வாகிகள், கிராம கல்விக்குழுவினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக