தே.கு.அ.மாநாடு 2010

தே.கு.அ.மாநாடு 2010
NCSC 2010 - Tamil Nadu

புதன், 15 செப்டம்பர், 2010

நிலமும் மானுடவியல் செயல்பாடுகளும்

நிலமும் மானுடவியல் செயல்பாடுகளும்

-முனைவர். ப. இளங்கோ

"மானிட தேவைக்கு வேண்டியவற்றை வேண்டிய அளவு

உலகில் இயற்கை வழங்கியுள்ளது. ஆனால் மானுட பேராசைக்கல்ல"

- மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.


மானுடவியல் செயல்பாடுகள் என்பது மனித செயல்பாடுகளின் விளைவால் தோன்றியப் பொருட்களும், நடைமுறை செயல்பாடுகளும் ஆகும். அனைத்து வேளாண் செயல்பாடுகளும் நேரடியாகவோ, மறைமுகமாகமோ நிலத்தை எவ்வாறு கையாளுகிறோம் என்பதனைச் சார்ந்திருப்பதால் மனித மற்றும் வளர்ப்பு விலங்கினங்களின் நலன் என்பதன் அடிப்படையில் பெரிதும் நிலத்தின் வளத்தையே சார்ந்ததாகும். உற்பத்தி, இலாபம் மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதில் நில மேலாண்மை என்பது ஓர் மறைமுக சவாலாக உள்ளது. நிலத்தின் தன்மையை இயற்பியல், வேதியியல், உயிரியல் விதிமுறைகள் வாயிலாக மதிப்பீடு செய்யலாம். ஒன்றோடொன்று தொடர்புடைய ஒன்றோ அதற்கு மேற்பட்ட சாதகமற்ற தன்மைகள் மண்ணில் நீண்டகாலம் நீடித்திருப்பது வேளாண்மையைத் தொடர இயலாத நிலைக்கு தள்ளிவிடுகிறது. மண்ணின் நுண்திறனில் மனித செயல்பாடுகள் ஏற்படுத்தும் பெரும் பாதிப்புகளை இக்கட்டுரை விளக்குகிறது.


மண்வளம் குறைதல்

மண்ணின் செயல்பாடுகள் குறைதல் அல்லது இழத்தல் என்பது மண்வளம் குறைதல் எனப்படும். இந்நிலை சமீபகாலமாக மிகவும் கவலையுடன் செயல்பட வேண்டிய ஒன்றாக உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. மேலும் வேளாண் உற்பத்திக்கும் தரை வாழிட சூழ்நிலை மண்டலத்திற்கும், பெரும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது. மேல் மண் இழப்பு, இயற்பியல் மாற்றகாகிய நில அமைப்பு சேதமடைதல் வேதி மாற்றங்களாகிய உப்புத் தன்மை, அமிலத்தன்மை, சோடியம் உள்ளிட்ட வெடி உப்புக்களின் மூலக்கூறுகள், கடின உலோகங்களின் படிவு, ஒட்டு மொத்த மண்ணின் செழுமையும்

ற்பத்தியும் குறைதல் ஆகிய அனைத்தும் மண்வளம் குறைதல் எனப்படுகிறது.

கிட்டத்தட்ட 2 பில்லியன் ஹெக்டேர் நிலத்தின் வளம் குறைக்கப்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது சுமார் 22% மொத்த பயிர் நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், காடுகள், மரப்பயிர்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். மண்வளம் குறைதலில் தட்பவெப்ப நிலையும், புவித் தோற்ற மூலங்களின் செயல்பாடுகளும் பெரிய அளவில் நிர்ணயிக்கும் காரணிகளாக இருப்பதும், உள்ளூர் சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளும் போது மனித செயல்பாட்டுக் காரணிகளின் பாதிப்பைத் தவிர்த்து விட இயலாது. மனித செயல்பாடுகளில் வேளாண்மை, தொழிற்மயமாக்கல், நகரமயமாக்கல் போன்றவற்றின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

நிலத்தை உழுதல் போன்ற வேளாண் செயல்பாடுகள் நிலத்தின் அமைப்பைச் சிதைப்பதுடன் கனிமப் பொருட்களை வெறுமையாக்கி மண் அரிமானத்தையும், நுண்ணூட்டச் சத்துக்களின் இழப்பையும் ஊக்கப்படுத்துகிறது. இருப்பினும் உழுதல் மண்ணில் காற்றோட்டத்தை அதிகரித்தும், வெப்பத்தை குறைத்தும் விதை முளைத்தலுக்கும் நுண்ணுயிரிகள் செயல்பாட்டிற்க்கும் மண்ணை ஏற்றதாக்குகிறது. அதிக நீர்பாசனமும், தரம் குறைந்த பாசன நீரும் நிலத்தில் நீர்த் தேங்குதல், உப்புத் தன்மையை அதிகரித்தல் போன்ற பிரச்சனைகளைத் தோற்றுவிக்கிறது. அதாவது மேற்கொள்ளப்பட்ட நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற வேதி உரங்களின் பயன்பாடும், குறைந்த நிலப்பரப்பில் இருப்பு செய்யப்பட்ட அதிகளவு வளர்ப்பு உயிரனங்களும் அவற்றின் கழிவுகளும் வேளாண் நிலத்தின் வேதி தரக்குறைபாடுகள் ஏற்பட்டதோடு மட்டுமின்றி, வழிந்தோடும் நீரினால் ஆறு உள்ளிட்ட நிலமேற் நீரோட்டத்தையும் அதிக அளவு நைட்ரஜன் நைட்ரேட்டாக மாறி நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகிறது. மற்ற வேதி வேளாண் பொருட்களான பூச்சிக் கொல்லிகள், களைக் கொல்லிகள் போன்றவைகளும் நிலத்தின் மேல் மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றன.

தொழிற்சாலைக் கழிவுகள் தனது பெரும் பங்காக நில வளத்தின் வேதித் தன்மை இழப்பை ஏற்படுத்துகிறது. முறையற்ற கழிவுகள் மேலாண்மை சுற்றுப்புறத்தில் கடின உலோகப் படிவுகளை நிலம், நீர்நிலைகள், நிலத்தடி நீர் போன்றவற்றில் ஏற்படுத்துகிறது. அதிவேக நகரமாயமாக்கலும் கூட நில வள இழப்பை அதிகப்படுத்துகிறது. தீவிரமான சுரங்கச் செயல்பாடுகள், காடுகளை அழித்தல், முறையற்ற நில மேலாண்மை, ஆராயது மேற் கொள்ளப்படும் உழுதல் போன்ற செயல்பாடுகள் போன்றவைகள் காற்று மற்றும் நீர் செயல்பாடுகளினால் ஏற்படும் கடுமையான மேற் மண் அரிப்பை அதிகரிக்கின்றன. இவை மட்டுமின்றி கணிசமான அளவு மேற்மண் இழப்பு செங்கல் மற்றும் மட்பாண்டத் தயாரிப்புத் தொழில் மூலம் ஏற்பட்டு பல பாரம்பரிய இன மக்களை பாதித்துள்ளது. இதில் முக்கியமாக நாம் அறிய வேண்டிய ஒன்று என்னவென்றால் 2.5 செ.மீ அளவு இழந்த மண்ணை ஈடுசெய்ய பல நூற்றாண்டுகளாகும்.


பல்லுயிர்ப் பெருக்க இழப்பு

பல்லுயிர்ப் பெருக்கம் என்பது ஒரு நிலப்பகுதியின் மொத்த மரபணுக்கள், இனங்கள் மற்றும் சுற்றுச் சூழல் மண்டலத்தைக் குறிப்பதாகும். இந்தியா உலக நிலப்பரப்பில் 2.4% பெற்றுள்ளது. ஆனால் 8% இனங்களை புவியின் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும், இமயமலையும், இந்தியா-பர்மாவிற்கு இடைப்பட்ட பகுதிகளும் உலகளவில் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான 34 முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். நிலப் பயன்பாடு, நிலப் போர்வை மாற்றம் போன்றவற்றால் பல்லுயிர்ப் பெருக்க இழப்பு என்பது பொதுவான ஒன்றாகும். எப்போது ஓர் இயற்கையான காடு விளைநிலங்களாக மாற்றப்படுகிறதோ, அப்போதே மரங்கள், தாவரங்கள், விலங்கினங்கள், நுண்ணுயிரிகள் போன்றவைகள் முழுமையாக அழிந்துவிடுகின்றன. அதனைப் போன்று புல்வெளிகளிலும், நிலத் தொடர்களிலும், அளவற்ற மேய்ச்சல் பல்லுயிர்ப் பெருக்கத்தை சிதைத்துவிடுகிறது. இவை மட்டுமின்றி வணிக நோக்கில் அமைந்த தீவிர சாகுபடியும், மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களும் வேளாண் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளது. சுற்றுச் சூழலுக்கு இணக்கமான தொழில் நுட்பமாகக் கருதப்படும் இயற்கை எரிசக்தி தொழில் நுட்பமும் கூட, ஆராயாமல் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளினால் ஏற்படும் நிலப் பயன்பாட்டு முறை மாற்றங்களினால், பல்லுயிர்ப் பெருக்கம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தி அதிகரித்தல்

நிலவளங்களை தவறாகப் பயன்படுத்துதல் நமக்கு உணர்த்தும் முகம் காட்டும் கண்ணாடியே வளிமண்டலமாகும். விலைமதிப்பற்ற நிலவளங்க்ளில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு மனித செயல்பாடும் வளிமண்டலத்தில் ஓர் பதிவை ஏற்படுத்துகின்றன. கரி அமில வாயுவின் அடர்த்தி 31% ம், மீத்தேனின் அடர்த்தி 15% ம், நைட்ரஸ் ஆக்ஸைடின் அடர்த்தி 17% ம் 1750 லிருந்து அதிகரித்து வருவது உலகளவில் சுற்றுச்சூழல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொழில் புரட்சி, நகரமாயமாக்கல், பெருகி வரும் வளர்ப்பு விலங்குகள் பண்ணைகள், நவீன வேளாண்மை போன்றவற்றால் அதிகரித்துவரும் நிலப் பயன்பாட்டு மாற்றங்களோடு தற்செயலாக ஒத்துப்போகிறது. இது பருவ மாற்றங்களுடனும், அதனால் விளையும் பிரச்சனைகளுடனும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பு கொண்டுள்ளது. வளிமண்டலத்தில் பெருகி வரும் பசுமை இல்ல அடர்த்தியில் நிலவியல் சக்திகள்

பெரும்

தாக்கத்தைச் செலுத்துவதாகக் கருதினாலும், மனித தலையீடுகள், அதிகரித்து வரும் பசுமை இல்ல வாயுக்களின் பாதகமான தாக்கத்தை பெருமளவில் சீர்படுத்த இயலும். வளிமண்டலத்திலுள்ள முக்கியமான பசுமை இல்ல வாயுக்களுக்கு நிலம், தாவரம், விலங்கு போன்றவற்றின் அமைப்பே மூல தோற்றுவாயாக அமைகிறது. இவற்றை சிறப்பாக மேலாண்மை செய்யும் ஓர் முறையை, முறையான ஆய்விற்கு உட்பட்ட நில பயன்பாட்டுத் திட்டங்களின் மூலம் மேற்கொண்டால் நிலத்தின் வளம் தாங்கும் திறனை அதிகரிக்கலாம்.

நீர் மாசடைதல்

நீர், நிலவளத்தின் ஓர் முக்கியமான ஆக்கக் கூறு ஆகும். இக்கோள்களில் மடியாமல் மனித வாழ்வு தொடர்வதற்குக் காரணமான நீரே உயிரியல் வேதியியல் முறைகளில் மாசடையும் போது நோயகளும் பேரிடர்களும் தோன்ற மூல காரணமாகிறது. மானிட செயல்பாடுகளான தொழிற்மயமாதல், நகரமயமாதல், விளைநிலம் மற்றும் வளர்ப்பு விலங்கு பண்ணைகள், அறிவுப்பூர்வமற்ற திடக்கழிவுகள் வெளியேற்றம் போன்றவகளால் தற்போது கிடைக்கும் நிலன் அளவும் தரமும் பெருமளவில் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குடிநீரில் அர்சனிக், குரோமியம் போன்ற கடின உலோகங்களின் அடர்விற்கு மண்ணியல் மற்றும் மானுடவியல் இணைந்த செயல்பாடுகளே காரணமாகிறது. மற்றொரு வகையில் பார்க்கும் போது, பண்ணை மற்றும் நகரக் கழிவுகளிலிருந்து பெருமளவில் கேடுவிளைவிக்கக் கூடிய அனங்ககப் பொருட்களும் செயற்கை கழிவிற்கும் சிறிது சிறிதாகக் கசிந்து நீர் நிலைகளையும், நிலத்தடி நீர் மட்டத்தையும் மாசுபடுத்துகின்றன. இவை தொடர்பான விளக்கமான புரிதலுக்கு நீர் மாசுறுதலும், நிலப் பயன்பாட்டு மாற்றங்களுக்குகிடையே உள்ள தொடர்பை ஆய்வு செய்வது அவசியமாகும்.

நீரியல்


நீரியல் என்பது நிலத்திலும், நிலத்தடியிலும் நீரின் இயக்க ஆற்றலைக் குறிப்பதாகும். கட்டுக்கடங்காமல் சீறிப் பெருகிவரும் குடியிருப்புப் பகுதிகளால் இயற்கையான நீர் சேமிக்கும் ஆற்றுப் பள்ளத்தாக்குகல் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. தொழில்நுட்பத் தலையீடுகள் காரணமாக கற்பனைக்கெட்டாத அளவு மண்ணியல் அமைப்பில் மாற்றங்கள் மிக வேகமாக ஏற்பட்டு வருகின்றன. பெரிய நீர்நிலைகளும் மலையுச்சிகளும் கூட அழிவிலிருந்து விட்டுவைக்கப்படவில்லை. மனிதன் ஏற்படுத்தும் திட்டங்களால் இயற்கையான ஆற்றின் போக்குகளும் மாற்றப்பட்டுள்ளன. கடுமையான மானிட செயல்பாடுகளால் மழைகாலத்தில் நிலத்தினுள் ஊடுறுவும் நீரின் அளவு பெருமளவில் பாதிக்கப்பட்டு வெள்ள நீராக ஓடி நீரிழப்பை ஏற்படுத்துகிறது. இது ந

கரங்களிலும், புறநகர்ப்பகுதிகளிலும் நீர்த் தேங்வெள்ளப் பு

றநகர்ப்பகுதிகளிலும் நீர்த் தேங்கலையும்,

இவற்றால் பல பிரச்சனைகள் முழுமையாக மானிட செயல்பாடுகளினால் ஏற்படுத்தப்படவில்லை என்றாலும் இவைகள் நிச்சயமாக மனித செயல்பாடுகளினால் ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும் ஆய்விற்குட்படுத்தப்பட்ட நிலப் பயன்பாடு, முறையான திட்டங்கள் இவற்றின் மூலம் எதிர்கால தலைமுறைக்காக நிலவளங்களைப் பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். இயற்கை ஒர் பள்ளியாகும். இப்பள்ளியில் இளைஞர்கள் தாம் பங்கு கொள்ளும் அறிவியல் செயல்பாடுகள் மூலம் தான் இயற்கையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக