தினமலர்,
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2010,04:04 IST
திருநெல்வேலி:நெல்லையில் நாளை (5ம் தேதி) இளம் விஞ்ஞானி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு இளம் விஞ்ஞானிகளுக்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நாளை (5ம் தேதி) காலை 10 மணிக்கு மாவட்ட அறிவியல் மையத்தில் நடக்கிறது.பல்கலைக் கழக பேராசிரியரும், அறிவியல் இயக்க தலைவருமான மாதவன் தலைமை வகிக்கிறார். மாவட்ட அறிவியல் மைய அலுவலர் சீதாராம் முன்னிலை வகிக்கிறார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் வரவேற்கிறார்.
இப்பயிற்சியை முதன்மை கல்வி அலுவலர் மேரிஜேசிரோச் துவக்கி வைக்கிறார். வான்முகில் இயக்குனர் பிரிட்டோ, பேராசிரியர் பார்வதிநாதன், மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர் கணபதி, மாநில துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் உட்பட பலர் பேசுகின்றனர்.ஒருங்கிணைப்பாளர் பீட்டர் பாஸ்கரன் நன்றி கூறுகிறார்.இளம் விஞ்ஞானிகளை உருவாக்க விரும்பும் அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும், இதில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். நில வளம் சார்பான ஆய்வும், பயிற்சியும், வழிகாட்டுதலும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் என்று மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர் கணபதி தெரிவித்தார்.ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், வான்முகில் அறக்கட்டளையினர் இணைந்து செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக