வேளாண் நிலப் பயன்பாட்டில் மாறிவரும் போக்கு
-முனைவர். ப. இளங்கோ
ஓராண்டிற்கு மேலான வேளாண் நிலப்பயிர் சாகுபடி முறைகளின் வரைபடம் தயாரிக்கும் போது பயிரிடப்படாத காலங்களையும் குறிப்பிட வேண்டும். மேலும் பருவகாலத்திற்குரிய பயன்படுத்தாத நிலங்களும், ஓராண்டிற்கு மேலாக வேளாண்மை செய்யப்படாத நிலங்களும்குறிப்பிடப்பட வேண்டும்.
நோக்கம்
1. கடந்த காலத்தில் ஏற்பட்ட வேளாண்மை நிலப் பயன்பாட்டு மாற்றங்களைப் பதிவு செய்தல்(20-40 ஆண்டுகள்)
2. இடம் மாற்றத்திற்கான காரண காரியங்களை ஆய்வு செய்தல்
3. ஏற்படக்கூடிய விளைவுகளைப் பட்டியலிடுதல்.
4. தேர்ந்தெடுக்கப்பட்ட வேளாண் நிலத்தின் நிலப் பயன்பாட்டு வரலாற்றைத் தயாரித்தல்.
ஆய்வு நெறிமுறைகள்
சுற்றுவட்டாரத்திலுள்ள 50 வயதிற்கு மேற்பட்ட ஒத்துழைக்கும் தன்மை விவசாயிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஒவ்வொரு விவசாயியின் அடையாளம் கண்டு பார்வையிட வேண்டும்.
1. நிலத்தின் தற்போதைய நிலைமை, 20 ஆண்டுகளுக்கு முன்
2. 40 ஆண்டுகளுக்கு முன் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து பயிர்கள் / பயிரிடாத காலங்கள் ஆகியவற்றை கீழ்காணும் படிவத்தில் மூன்று நகல்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
வரிசை எண் விவசாயியின் பெயர் நிலஅளவு (ஏக்கரில்) இலையுதிர் காலத்திற்கு நிலப்பரப்பு குறிப்பு இலையுதிர் காலத்திற்கு முன் இலையுதிர் காலத்தில் இலையுதிர் காலத்திற்கு பின் பயிர் நிலப்பரப்பு (ஏக்கரில்) பயிர் நிலப்பரப்பு (ஏக்கரில்) பயிர் நிலப்பரப்பு (ஏக்கரில்) 1. 2. 3. . . . 40.
வேளாண் நிலப் பயன்பாட்டு முறை குறித்த கால அளவை அறிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தின் நிலப் பயன்பாட்டு வரலாற்றை எழுத வேண்டும்.
நிலப் பயன்பாட்டு முறைக்கான காரணங்களையும் விளைவுகளையும் கண்டு பிடிக்கவும்.
ஆய்வுக்கு பொருத்தமான தகவல்
இத்திட்டமானது மாணவர்கள் தங்கள் பகுதியிலுள்ள வேளாண் நிலப் பயன்பாட்டு முறைகளின் வரலாற்றையும் தொடர்புடைய செயல்பாடுகளை விவசாயிகளின் அறிவு, பொருளாதார நிலை, நிலப்பரப்பு, கிடைக்கக்கூடிய வளங்கள், தேவைகள் மற்ற சமூகக் காரணிகள் போன்றவற்றுடன் அறிந்து கொள்ள உதவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக