தே.கு.அ.மாநாடு 2010

தே.கு.அ.மாநாடு 2010
NCSC 2010 - Tamil Nadu

புதன், 15 செப்டம்பர், 2010

நிலமும் மானுடவியல் செயல்பாடுகளும்-3

திட்டம் - 2

மண்ணின் இயற்பியல் பண்புகளில் மூடாக்கின் தாக்கம்

-முனைவர். ப. இளங்கோ


மூடாக்கு என்பது மண் அரிமானத்தைத் தடுக்கும் ஓர் ஆற்றல் மிக்க செயல்பாட்டு முறையாகும். இது மண்ணை அரித்துச் செல்லும் மழைநீர் மற்றும் மண்ணைக் கிளப்பும் காற்றிலிருந்தும் மண்ணைப் பாதுகாக்கிறது. மூடாக்கின் நிறத்திற்கேற்ப மூடாக்கு உட்கிரகிக்கும் வெப்ப அலையின் அளவு கூடவோ
குறையவோ செய்யும். மேலும் நிலத்திலிருந்து வெளியேறும் வெப்பத்தின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. இவ்வாறாக ஆற்றலைச் சமன் செய்கிறது. குளிர்காலத்தில் நிலத்தின் வெப்பம் வெகுவாகக் குறையும் போது நிலத்தை வெதுவெதுப்பாக மாற்ற மூடாக்கு உதவுகிறது. மேலும் நிலத்தின் நீராவிப் போக்கை கட்டுப்படுத்துவதால் மண்ணின் நீரையும் பாதுகாக்கிறது. பல வேளாண் முறைகளில் குறிப்பாக புன்செய் நிலங்களில் மூடாக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.

நோக்கம்

1. மண்ணின் வெப்பத்தில் மூடாக்கின் தாக்கத்தை கண்டறிதல்.

2. மண்ணின் ஈரப்பதத்தில் மூடாக்கின் தாக்கத்தை கண்டறிதல்.

தேவையான பொருட்கள்

மூடாக்கு போட்ட விளைநிலம்

o நெல் / கோதுமை இவற்றின் வைக்கோலை மூடாக்காக பயன்படுத்தலாம்.

o சுத்தமான வெள்ளை அல்லது கருப்பு நெகிழி / காகித மூடாக்கையும் பயன்படுத்தலாம்.

o வேறுவகையான மூடாக்கையும் பயன்படுத்தலாம்.

· மூடாக்கு போடாத விளைநிலம்

· எளிய வெப்பமானிகள்

· மண் மாதிரிகள் சேகரிக்கும் கரண்டிகள்

· மாதிரிகளைச் சேமிக்க உதவும் குவளைகள்.

ஆய்வு நெறிமுறைகள்

வெப்பத்தின் ஆய்வு

· ஒரே தன்மையுள்ள மூடாக்கு போட்ட, மூடாக்கு போடாத இரண்டு விளைநிலங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

· மூடாக்கிட்ட, மூடாக்கிடாத நிலங்களில் 5 செ.மீ ஆழத்தில் வெப்பமானியை சொறுகி 8, 12, 20 ஆவது மணி நேரங்களில் வெப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

· பகல் நேரம் வெப்பத்தைப் பதிவு செய்து மேற்கூறிய இரு வகை நிலங்களில் எது வெப்பமாகவும், எது குளிர்ச்சியாகவும் உள்ளது எனக் கண்டறிய வேண்கும்.

· ஈரத்தன்மைக்கான ஆய்வு

· 250 மிலி கொள்ளவு கொண்ட 8 காலி குவளைகளின் எடையினைக் காண வேண்டும்.

· மூடாக்கிடாத, மூடாக்கிட்ட நிலங்களில் நீர்பாய்ச்சிய தேதிகளைக் குறித்துக் கொள்ள வேண்டும்.

· மேற்கூறிய நிலங்களின் மண் மாதிரிகளை 500 செமீ ஆழத்திலிருந்து கரண்டிகள் மூலம் எடுத்து குவளையில் அடைக்க வேண்டும்.

· மேலும் நீர்பாய்ச்சிய 7 நாட்களுக்குப் பின் மண்ணின் வெப்பத்தையும் கணக்கிட வேண்டும்

· ஈர மண்ணின் எடையை குவளையுடன் காண வேண்டும்.

· மாதிரிகளை உலர்த்தி குவளை எடையைக் கழித்து மண்ணின் ஈரப்பதத்தைக் காண வேண்டும்.

ஈர மண்ணின் எடை - உலர்ந்த மண்ணின் எடை

மண்ணின் ஈரப்பதம்(%) =

உலர்ந்த மண்ணின் எடை)*100

எந்த மண் அதிக ஈரப்பதத்தைப் பேணுகிறது என ஒப்பிடவும்.

தொடர்பானத் தகவல்

நீரின் வீத வெப்பமானம் 1 கலோரி / கிராம் ஆகும். மண்ணின் வீத வெப்பமானம் 0.2 கலோரி / கிராம் ஆகும். அதாவது ஒரே ஆற்றலைப் பயன்படுத்தும் போது மண்ணின் வெப்பநிலை நீரின் வெப்பநிலையை விட ஐந்து மடங்கு அதிகமாகிறது. மூடாக்கு மண்ணின் நீரைத் தக்க வைத்து மிக மெதுவாக மண்ணின் வெப்பத்தை உயர வைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக