மேல் மண் அரிமானத்தைத் தடுப்பதில் நிலப் பயன்பாட்டு விருப்பம்
-முனைவர். ப. இளங்கோ
மேல் மண் அனைத்து உயிரினங்களுக்கும் மிகவும் மதிப்பு மிக்கதாகும். காற்று, நீர் போன்ற இயற்கை காரணிகளால் மேல் மண் தொடர்ந்து அரிமானமாகிக் கொண்டுள்ளது. மண்ணில் வளர்ந்துள்ள தாவரங்கள் மண் அரிப்பை இரு முறைகளால் தடுக்கின்றன. தாவரத்தின் மேற்பகுதியிலுள்ள இலைகள் மழைப் பொழிவின் இயக்க உந்து ஆற்றலை உள்வாங்கி அதன் வேகத்தைக் குறைக்கிறது. வேர் அமைப்புகள் நிலத்தின் மண் நுண் துகள்களைத் தாங்கிப் பிடித்து நிலத்தில் பாய்ந்தோடும் நீரினாலும் பலத்த காற்றினாலும் மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. தாவரங்கள் மிகக் குறைவாக காணப்படும் வறண்ட நிலப்பகுதிகளில் மண் அரிமானம் அதிகமாகக் காணப்படும். மலைப்பகுதிகளில் படிவரிசை அடுக்குத் தளம் அமைத்தல், சரிவானப் பகுதிகளில் குறுக்கு உழவு செய்தல் போன்ற செயல் முறைகள் மண் அரிப்பைக் கட்டுப்படுதலுக்கான பிரலமான அணுகு முறையாகும். ஆராயாது மேற் கொள்ளப்படும் நிலப்பயன்பாட்டு திட்டமிடல் மண் அரிமான பிரச்சனைகளை அதிகப்படுத்துகிறது. பல்வேறு நிலப் பயன்பாட்டு முறைகளில் மண் அரிமான ஆற்றல் எப்படி உள்ளது என்பதை மதிப்பீடு செய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
நோக்கம்
1. பல்வேறு தாவர போர்வைகளில் ஏற்படும் மண் அரிமான அளவைக் கண்காணித்தல்.
2. மண்ணின் நுண்துகள்களை நிலப்பகுதியில் ஒன்று சேர்ப்பதில் வேர்த் தொகுதியின் பங்கைப் பகுத்தாய்வு செய்தல்.
3. மண்ணின் பண்பிற்கேற்ப மழை நீரின் முடிவு எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்தல்.
தேவையான பொருட்கள்
1. 2’ 3’ 8’ அளவுள்ள கசிவற்ற தகர தட்டங்கள்
2. பயிரிடுவதற்கான பொருட்கள்(விரைவாக இனப்பெருக்கமடையும். குறைந்த ஆழமே வேர் பரவும் பூண்டினங்களின் விதைகள் மற்றும் பல்வேறு புல்லினங்களின் வெட்டிய வேர்த் தொகுப்புகள்)
3. சிறிய புனலுள்ள நீர் சேகரிக்கும் உருளைகள்.
4. பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட மண்(பல்வேறு பண்புகளைக் கொண்டதாக இருத்தல் அவசியம்)
5. ரோஸ் குவளை.
ஆய்வு நெறிமுறைகள்
1. தட்டத்தின் இரு முனைகள் மற்றும் நடுப்பகுதியிலும் அடிப்புறத்தில் துளைகள் போட வேண்டும்.
2. ஒவ்வொரு துளையுடனும் ஒரு புனல் இணைத்து நீர் கசியாமல் இறுக்க வேண்டும்.
3. ஒவ்வொரு தட்டத்திலும் வெவ்வேறு வகையான மண்ணை 1” மேல் பகுதியில் இருக்குமாறு இறுக்கமாக நிரப்ப வேண்டும். இத் தட்டங்களை 1:20 என்ற விகிதத்தில் சாய்வாக வைக்கவேண்டும். அப்போதுதான் தாழ்வான கீழ்ப் பகுதியில் துளைகளுடன் இணைக்கப்பட்டுள்ள உருளைகளில் நீரைச் சேகரிக்க இயலும்.
4. கீழ்காணும் பொருட்களை ஒவ்வொரு தட்டத்திலும் பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
1. பல்வேறு புல் வகைகளின் வெட்டுய வேர்த் தொகுப்புகள்
2. அரைக்கீரை போன்ற வேகமாக வளரும் ஆழமற்ற வேருடையத் தாவரங்கள்
3. பயிரிடாத இறுக்கமான மண்
4. பயிரிடாத கைக்கருவி கொண்டு கொத்திய மிருதுவான மண்
5. பயிரிடாத சாய்வான பகுதியை ஒட்டி சரிவாக உழுத மண்
6. பயிரிடாத சரிவிற்குக் குறுக்காக உழுத மண்
7. வைக்கோல் அல்லது மற்ற பொருட்களால் அமைந்த மூடாக்கு.
8. தட்டங்களை அமைத்தவுடன் ஒவ்வொரு தட்டத்திலும் 7 நாட்களுக்கு ஒரு முறை பூவாளி மூலம் நீர் தெளிக்க வேண்டும்.
9 உருளைகளில் சேகரிக்கப்பட்ட நீரை ஆவியாக்கி உலர்ந்த வீழ் படிவுகளின் எடையைக் காணவேண்டும்.
10. ஒவ்வொரு தட்டத்திலும் சேகரித்த வீழ் படிவுகளை அந்தந்த தாவர வகை, குறூக்கு நெடுக்கு உழுதல் முறை போன்றவற்றுடன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளன என ஆராய வேண்டும்.
ஆய்வு தொடர்பான தகவல்
நீர் நிறைந்த பகுதிகளில் மண் அரிப்பிற்கு முக்கியக் காரணம் நீரேயாகும். நீரினால் ஏற்படும் மண் அரிப்பை, தாவர போர்வை மற்றும் நிலவடிவமைப்பு முறைகளில் தடுக்க இயலும். நீர் மற்றும் ஓடும் நீர் போன்றவற்றால் ஏற்படும் மண் அரிப்பைத் தடுக்கும் முறைகளை இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் புரிந்து கொள்ளலாம்.
கூடுதல் ஆய்வுத் திட்டங்கள்
1. மனித குடியிருப்புகள் நிலப் பயன்பாட்டு முறையில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கண்காணித்தல்.
2. இயற்கையான காடுகள் மற்றும் மனிதன் ஏற்படுத்திய பண்ணை முறைகளின் தங்குதடத் தாக்கம்.
3. மண்ணின் தன்மைகளில்(வேதியியல், இயற்பியல், உயிரியல் பண்புகள்) வனத் தாவரங்களின் தாக்கம்.
4. ஆழ்த்துளை கிணறுகள் மூலம் நிலத்தடி நீரைக் கண்காணித்தல்.
5. செங்கல் தயாரிப்பு தொழிற்சாலைகளினால் ஏற்படும் மேல் மண் இழப்பை மதிப்பீடு செய்தல்.
6. வரலாற்று மற்றும் இரண்டாம் நிலை ஆவணங்கள் மூலம் காடுகள் நிறைந்த மலைப் பகுதியில் நிலப் பயன்பாடு மாற்றங்களினால் மழை பொழி முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வு செய்தல்.
7. பல்வேறு நிலப் பயன்பாட்டு முறைகள் மூலம் மண்ணின் தோற்றத்ததை ஆய்வு செய்தல்.(மண் தோன்றும் முறைகளை அறிந்து கொள்வதற்காக)
குறிப்பிட்ட சில நில அமைப்புகளுக்கு ஏற்ற ஆய்வுத் தலைப்புகள் நகர மற்றும் தொழிற்சாலைப் பகுதி
1. காற்று மாசடைதலை ஆய்வு செய்தல்.(தொழிற்சாலைகளைச் சுற்றி)
· மிதக்கும் மாசுக்களான தூசி, பனி, பனி-தூசுக் கலவை போன்றவற்றை ஆய்வு செய்தல்.
2. நகரிய குடியிருப்புகளினால் அருகிலுள்ள நீர் நிலைகளின் தரம்
பாதிப்படைதல்.
1.வேதியியல், இயற்பியல், உயிரியல் பண்புகள்
2. உள்ளூர் நிறுவனங்கள் உதவியைத் தேவையெனில் பெறுதல்.
3. மத நிகழ்வுகளான சிலைகளைக் கரைத்தல், புனித நீராடல் போன்றவற்றால்
நதிகள் மற்றும் நீர்த் தேக்கங்கள் மாசடைதல்.
4. கடின உலோகம், பாலிதீன் உள்ளிட்ட திடக் கழிவுகளை அப்புறப்படுத்துதலும் நகர
குடியிருப்புகளில் அவற்றின் இறுதி முடிவும்.
தாழ்வு நில சூழ்நிலை மண்டலம்
1. தாழ்வு நில சூழ்நிலை மண்டலத்தில் நிலப் பயன்பாடு மாற்றுக்
கொள்கைகளை மதிப்பீடு செய்தல்.
1. பொருளாதார உற்பத்தித் திறன்
2. தொடர் வாழ்க்கை முறை
2. மீன் உற்பத்தியின் பொருளாதாரமும் நிலப் பயன்பாட்டுத் திறனும்
1. காற்று மற்றும் நீரினால் ஏற்படும் மண் அரிப்பை மதிப்பீடு செய்தல்.
2. உச்சகட்ட தட்பவெப்ப நிகழ்வுகளை இரண்டாம் நிலைத் தரவுகளைக் கொண்டு கண்காணித்தல்.
3. தனி மனித மற்றும் சமூக நீர் சேகரிப்பு அமைப்புகளின் ஆற்றலை மதிப்பீடு செய்தல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக