தே.கு.அ.மாநாடு 2010

தே.கு.அ.மாநாடு 2010
NCSC 2010 - Tamil Nadu

வெள்ளி, 9 ஜூலை, 2010

நில வளங்கள் - அறிமுகம்

நில வளங்கள்

- பேரா.சோ.மோகனா

வளமைக்காக பயன்படுத்துங்கள்; வழித்தோனறல்களுக்காக.. பாதுகாப்பு செய்திடுங்கள்

"வாழ்க்கைகளின் மிகப்பெரிய இணைப்பான் நிலம்தான்;

அனைவரின் உருவாகும் ஆதாரமும், முடிவும்...அதுவே"

- வென்டெல் பெர்ரி

மனித குலத்தின் செயல்பாடுகள் அனைத்தும், மிக முக்கியமான இயற்கை வள ஆதாரமாக, மனிதனின் நினைவு தெரிந்த காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்திருக்கிறது. நிலமே நமது அடிப்படை வாழ்வாதாரம். உலக வரலாற்றைப் பார்க்கும் போது, மனித குலத்தின் தேவையான எரிபொருள், உடை, உறைவிடம், போன்றவற்றை நிலத்திலிருந்தே பெற்றுள்ளோம் என்பது தெரிய வருகிறது. அது நம உணவுக்கான மூலாதாரமாகவும், நாம் வேலை செய்து, விளையாடி மகிழ்ந்திருக்கும் வாழ்விடமாகவும் கூட அமந்துள்ளது. இந்த நிலம்தான் நம் வாழ்வில் பல்வேறு பாத்திரங்களை வகிக்கிறது. உற்பத்தி களமான விவசாயம், காடுகள், மீன்பிடி தொழில், சுரங்கத் தொழில் போன்றவற்றின் மூலம் நமது பொருளாதார மேம்பாட்டுக்கான காரணியாக விளங்குகிறது. ஒரு சமூகத்தின் மேன்மை / மதிப்பாகவும், செல்வவளம் மற்றும் அரசியல் சக்திக்கும் கூட நிலமே அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. இது மலைத்தொடர்கள், குன்றுகள், சமவெளிகள், தாழ்நிலங்கள் மற்றும் பள்ளத்தாக்குகள் ஆகிய பல்வேறு இயற்கையமைப்புகளையும் பெற்றுள்ளது. மேலும் அது வெப்பத்திலிருந்து மிகக் குளிரான பகுதிவரை, ஈரப்பதத்திலிருந்து வறண்ட பகுதிவரை என பல்வேறு தட்பவெப்ப நிலைகளைப் பெற்றுள்ளது. நிலம், தாவர உயிரனங்களுக்கு வாழ்விடமாய் திகழ்கிறது. நிலம் என்பதை பரந்த நோக்கில் பார்த்தால், மண் மற்றும் நிலத்தின் அமைப்பு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் இயற்கைப் பண்புகளையும் உள்ளடக்கியதும்தான்! அதன் மூலமே அடையாளம் காணப்படுகிறது. இந்த வகையில் நிலம் இயற்கைச் சூழலுடன் மிக நெருக்கமான உறவு கொண்ட கருத்தாக்கமாக விளங்குகிறது. இருந்தாலும் சில நேரங்களில் வெளி, சூழல், பொருளாதார செயல்பாடுகளின் காரணி ஆகியவையாகவும் கருதப்படும்!

இந்தியா, வளமான விளைநிலங்களைக் கொண்டதால், நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணியாக விளங்குகிறது. இது பரப்பளவில் உலகில் 7வது இடத்திலும், மக்கள் மக்கள் தொகையில் 2-வது இடத்திலும் உள்ளது. இந்தியா 328 மில்லியன் ஹெக்டேர் பரப்பு கொண்டது. இது மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாகும். சாகுபடி நிலம் என்பது, உழுது பயிடும் பரப்பு, தரிசு நிலம் , தரிசாக உள்ள, மரங்களின் கீழே காணப்படும் நிலம், அனைத்துமே உள்ளடக்கியது ஆகும். இது 167 மில்லியன் ஹெக்டேர் தான். இதுவே இந்தியாவின் பரப்பில் 5% இருந்தாலும் மனிதர்கள்-நிலம் என்ற விகிதத்தை பார்க்கும் போது ஆஸ்திரேலியா, கனடா, அர்ஜெண்டினா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், சிலி, டென்மார்க், மெக்ஸிக்கோ ஆகிய நாடுகளை விட இந்தியா மக்கள்த்தொகை மிகுந்த நாடாகக் கருதப்படுகிறது. இதுவே ஒரு குறைபாடாக உள்ளது.

இந்தியாவின் இயற்கை பண்புகள் பரந்துபட்டவை; சிக்கலானவையும் கூட! அதிக வேறுபாடுகளையும், நுட்பமான அமைப்பையும் கொண்டது. மலைத்தொடர்கள், குன்றுகள், பீடபூமிகள், சமவெளிகள் ஆகிய பகுதிகளில் வாழும் மனிதர்கள், தங்களின் வாழ்க்கை முறையில் நிறைய வேறுபாடுகளுடன் உள்ளனர். இந்திய நிலப்பரப்பில் சுமார் 30 சதம் மலைகளையும் கொண்டது. அவைகளில் நிலம் சரிவாக, சாய்மானமாக இருப்பதாலும் மிகக் குளிராக இருப்பதாலும், விவசாயத்திற்கு ஏற்றதாக இல்லை. இவற்றில் சுமார் 25% மட்டுமே விளைநிலங்கள். அவை நாடெங்கிலும் அங்கிங்குமாக பரவலாக சிதறிக் கிடக்கின்றன. பீடபூமிகள் மொத்தபரப்பில் 28% பரப்பளவை கொண்டிருக்கின்றன. ஆனால் 0.25 பகுதி நிலம் மட்டுமே விவசாயத்திற்கு ஏற்றதாக இருக்கிறது. நாட்டின் மொத்தப் பரப்பளவில், 43% சமவெளியாக உள்ளது. இது மொத்த விவசாய நிலப்பரப்பில் 95%-ஐ ஆக்கிரமிக்கிறது. மொத்த பரப்பளவில், பலவித வேறுபாடுகளையும், வித்தியாசங்களையும் ஒருங்கிணைத்து பார்க்கும் போது நாடு முழுவதிலும் உள்ள பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பே உபயோகமானது. மேலும் ஒவ்வொரு இடத்திலும் மண் வளம், தட்பவெப்ப நிலை, நிலத்தின் அமைப்பு ஆகியவை அப்பகுதியில் நடக்கும் விவசாய விளைபொருள்களின் தரத்தை முடிவுபண்ணும் வல்லமை பெற்றுள்ளது. இதன் விளைவாக நாட்டின் நிலப்பரப்பில் 50% நிலம் மட்டுமே விவசாயத்திற்கு பயன்படுகிறது. உலக அரங்கில், இந்தியா மிக அதிகமாக உள்ள விவசாய நிலங்களில் உள்ள நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

மனித நாகரிகம் உருவான காலத்திலிருந்து, மனித நாகரிக வளர்ச்சி என்பது, நம் நிலவளத்தை ஏராளமாய் பாதித்துள்ளது. மொத்தப்பரப்பில் சுமார் 175 ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலம் மனிதனால் பாதிப்புள்ளாகி சிதைந்து போயுள்ளது. மண் சிதைவு என்பது மண் அரிமானத்தால் உண்டாகிறது. மேலும் நிலத்தில் நீர் தேங்குவதாலும், நீரின் மிகையான உப்புத்தன்மை ஆகியவையும் நிலம் பாழ்படுவதற்கு முக்கிய காரணங்கள். காடுகளை அழிப்பதன் மூலம் நிலத்திற்கு அநியாயமான அபாயம் நேரிடுகிறது. பருவ காலங்களில் உண்டாகும் மழை நீரால் மண்சிதைவு ஏற்பட்டு நிலம் பாழ்படுகிறது. மழைக்காலங்களில் செங்குத்தான பாறைகளில் வேகமாக ஓடிவரும் நீரால் மண் சரிவும், மண் அரிமானமும் ஏற்படுகிறது. இந்நிலைமை மிக்கியமாக, இமயமலையின் தெற்குப் பகுதி சரிவிலும், மேற்கு தொடர்ச்சி மலையில் மேற்கு சரிவிலும் காணப்படுகிறது. உண்மையில் இமயமலைத் தொடரின் பெரும்பகுதி மண் சரிவும், மண் அரிமானமும் ஏற்படும் அபாயப்பகுதியாக உள்ளது. காற்றினால் ஏற்படக்கூடிய மண் அரிமானம் ராஜஸ்தானில் ஏராளமாய் உள்ளது. சம்பல் பள்ளத்தாக்கு, சோட்டா நாக்பூர், குஜராத், பஞ்சாப்பின் தாழ்பகுதிகள், இமயமலை போன்ற இடங்களில் இது நிகழ்கிறது. நீர் --------- மற்றும் நீரின் உப்புத்தன்மை நிலச்சிதைவின் இரண்டாம் காரணியாக உள்ளது. இதனால் 23 மில்லியன் ஹெக்டேர் நிலம் பாழ்பட்டிருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில் சுரங்கத் தொழிலினாலும் நிலம் பாதிப்புக்குள்ளாகிறது. மொத்தநிலப்பரப்பில் சுமார் 80 ஆயிரம் ஹெக்டேர் நிலபரப்பு சுரங்கத் தொழில் நடைபெறும் பகுதியாக உள்ளது.

விவசாய நிலத்தை ஆக்ரமித்து மிக முக்கிய பிரச்சனைதான், விவசாயத்திற்கு தேவையான நிலம் சரிந்து கொண்டே இருக்கிறது. வேற்றுமுறையில் சொல்வதானால், விவசாயம், நகர்மயமாதல், தொழில் வளர்ச்சி இவைகளுக்கிடையேயுள்ள போட்டிதான், நிலம் சிதைந்து, அழிந்து போவதின் தலையாய காரணியாகும்!

வெகு வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகைப் பெருக்கம் என்பது, நிலவளத்தின் மீதும், அதைச் சார்ந்து வாழுகின்ற தாவர உயிரினங்களை பாதிக்கிறது. அபாயத்துக்குள்ளாகி, வாழ்நிலை மிகத் தாக்கத்திற்கு உள்ளாக்கி தற்போதுள்ள நிலவளங்களின் அதிகபட்ச அழிவு என்பது விவசாய நிலங்கள் விவசாயமற்ற தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதும் பிரச்சனையின் தன்மையை மிகைப்படுத்துகின்றது. இதன் விளைவாக நிலவளத்தின் உற்பத்தி சீர் செய்ய முடியாத அளவுக்கு பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் சாகுபடி நிலத்தின் அளவும் காலப்போக்கில் குறைகிறது. இந்தியா மிகப் பெரிய விவசாய நாடாக இருக்கின்ற காரணத்தால், உணவு, எரிபொருள், நார்பொருள் ஆகியவைகளை ஒருங்கிணைத்து எதிர்காலத்தில் சூழல் பாதுகாப்புடன் உள்ள ஏராளமான பணிகளை சந்திக்க வேண்டியது கடமையாகும். இயற்கை வளங்களில் முக்கியமானதும், உயிரினங்கள் வாழ்வதற்கு அத்தியாவசியமான நிலவளம் உலகமெங்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறது.

நிலம் என்பது, இயற்கையின் அற்புதமான வடிவமைப்பு; அது இல்லாமல் இந்த உலகில், ஒரு உயிர் கூட வாழ முடியாது; உலகம் முழுவதும் இன்று அழிக்கப்படும் பொருளாக ஊசலாட்டத்தில் இருக்கிறது. இப்போது அதனைத் தாங்கிப்பிடித்து, நம்முடைய வடிவாதாரத்தை காக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. அதன் தறிகெட்டுச் செல்லும் நிலை தடுத்து, கடிவாளத்தைப் பிடித்து, நம் எதிர்கால சந்ததிகளுக்கு, நம் குழந்தைச் செல்வங்களுக்கு தர வேண்டும்; அவர்கள்தான் எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கான அதிசயங்களை, வினோதங்களை கண்டுபிடிக்கப் போகின்றனர். இது அறிவியலின் பன்முகப்பட்ட துறைகளின் புதிரான உதவியோடு, உறவோடு, எந்த நிலத்தின் மேல் தினமும் வளர்ந்து, விளையாடி, புரண்ட----- அந்த நிலவளம் காப்பற்றப்படும் ஆச்சர்யம் நிகழ உள்ளது. இதுதான் அவர்களின் தலையாய கடமை----. இதற்கான அறிவை விதைத்து... புத்திசாலித் தனத்தை கையகப்படுத்தி, அத்துடன் முன்னோர்களின் பல்வேறு நிலவள பயன்பாட்டு வழிகாட்டுதலுடன், செயல்படுத்த வேண்டும்..!

நம்முடைய வசதிக்காக, நில வளம் முழுவதையும் 6 விதமான தலைப்புகளின் கீழ் விரிவாக தேடி 1. உங்கள் நிலத்தை அறிந்து கொள்ளுங்கள், 2. நிலத்தின் செயல்பாடுகள், 3. நிலத்தின் தரம், 4. நிலமும் மானுடவியல் செயல்பாடுகளும், 5. நிலவளத்தின் நீடித்த பயன்பாடு, 6. நிலம் பயன்பாட்டில் நம் சமூக அறிவு.


எழுதியவர்: - பேரா.சோ.மோகனா, தே.கு.அ.மாநாடு2010, கல்வி ஒருங்கிணைப்பாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக