உங்களின் நிலத்தை அறிந்து கொள்ளுங்கள்
நிலத்தை புரிந்து கொள்ளுதல், அதை பயன்படுத்துதல் மற்றும் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை பராமரிப்பதிலும், அதன் வளர்ச்சி மற்றும் அப்பகுதியின் வாழ்க்கைத்தரம் பிரதிபலிப்பதை அறியலாம். மனிதர்களின் முறையற்ற உபயோகத்தால், ஆக்கிரமிப்பால் சாகுபடி நிலப்பகுதி சுருங்குதல், செயற்கை உரங்களினால் மண்வளம் சரிதல், மண்வளம் பரிசோதிக்காமை, மண்வளம் குறைவது போன்ற ஏராளமான தாக்கங்கள் நிலத்தின் மேல் படிகின்றன. நிலத்தின் மதிப்பு என்பது, அதன் அளவு, அமைவிடம், வணிகச் சந்தையிலிருந்து உள்ள தூரம், மற்றும் உற்பத்தி தவிர அதற்கான இயற்கை பயன்பாடு இவற்றை பொறுத்தும் உள்ளது. ஒட்டு மொத்தமான குணங்களில் பூமியின் பரப்பில் மற்ற இடங்களிலிருந்து ------------ வேறுபாடுகள் உள்ளதால், அந்தப் பகுதியின் முக அமைப்பே மாறிவிடுகிறது. மண் என்பது அற்புதமான, அமைதியான இயற்கைப் பொருள். இது பாறைகள்
தட்பவெப்ப சீதோஷண நிலை மாற்றத்தால் சிதைவுறுவதால் உருவானது. இதில் தாதுப்பொருட்கள், அங்ககப்பொருட்கள் ஏராளமாக உள்ளன. எனவே இது குறிப்பிட்ட வேதியல், இயற்பியல், தாதுவியியல் மற்றும் உயிரியல் தன்மைகளை, பூமிப்பரப்பின் மேலும், கீழே பல்வேறு அடித்தளத்திலும், தாவரங்கள் வளர்வதற்கேற்றவாறு, தன்னகத்தே கொண்டது. சீதோஷண நிலை, உயிரியல், உருவாக்கப் பொருட்கள் மற்றும் காலம் இவைகளுக்கிடையேயுள்ள செயல்பாட்டு விளைவால் உருவானது. பலவகை மண்வகைகள், பலவகை பாறைகளிலிருந்தும், பலப்பல வகையான கலப்பு மூலம் உருவான உருவாக்கப் பொருள்களிலிருந்தும் அமையப்பெற்றதாகும்! எரிமலைப் பாறை, படிவுப் பாறை, சிதைவுப் பாறை, உருமாறிப் பாறை என பாறைகளில் பல்வேறு வகைகள் உள்ளன. பொதுவாக பாறைகள் சிலிகான், அலுமினியம், இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆக்ஸைடுகள் என்ற வேதிப்பொருட்களால் ஆனவை. பாறைகள் பல்வேறு வெப்பநிலை, அழுத்தம் மற்றும் ஈரப்பதத்தால் உண்டான வேதியல் மற்றும் இயற்பியல் சிதைவுகளால் மண் உருவாவதற்கான அடிப்படைப் பொருள் உருவாகிறது. பிறகு, திறந்த ----------- மாற்றங்கள் மற்றும் மண் உருவாகும் முறை இரண்டும் ஒன்றிணைந்து, மேலும் மண் வளத்தை மிகுதிப்படுத்துகிறது.
ஒவ்வொரு மண்ணும் அதன் பண்புகளைப் பொறுத்து பல வகைகளில் வகைப்படுத்தப்படுகிறது. இது மண்ணின் முகவமைப்பு என்று அழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பரப்பளவில், குறிப்பிட்ட ஆழத்திற்கு காணப்படும் மண் வகை, அந்த பகுதி முழுவதற்குமான மண்வகை ஆகும். அது வெவ்வேறு ஆழத்தில் வெவ்வேறு வெளிப் பண்புகளை கொண்டிருக்கும். இது நிறம், தொடுதன்மை, கட்ட அமைப்பு போன்றவற்றில் மாறுபடும். இவ்வாறு மண் ஆராயப்படும் பகுதிகளில் O, A, E, B, C மற்றும் R என்று வகைப்படுத்தப்படுகிறது. எனவே ஆராயப்படும் மண்வகை அமைப்பு மண்வகையைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு, வகைப்படுத்துவதற்கு அளவுகோலாய் மட்டுமல்லாமல் ஆராய்ச்சியாளர்களின் மண் - ஈரப்பதம் - தாவரங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைக் காட்ட பெரிதும் உதவுகிறது. எனவே ஒரு பகுதியின் மண்வகை / அமைப்பு, அப்பகுதியின் கட்டமைப்பியல், அடிப்படையில் மண்ணின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளை உள்ளடக்கியதாக அனைத்து தகவல்களையும் நமக்கு அளிக்கிறது.
மண்ணின் இயற்பியல் பண்புகள் கட்டமைப்பில், மிகவும் முக்கியமானது. ஏனெனில் இதனைக் கொண்டே விவசாயம், காடு வளர்ப்பு போன்றவைகளை நிர்ணயிக்க உதவுகிறது. மேலும் விவசாயமற்ற செயல்பாடுகளான வாழிடம், பொழுதுபோக்கு போன்றவைகளுக்கு பயன்படும். மண்ணின் ஊடுருவு தன்மை, நீர் பிடிப்பு தன்மை, காற்றோட்டம், நெகிழ்வுத் தன்மை மற்றும் மண் வளச்சத்தின் தன்மை போன்றவற்றை மண் துகள்களின் அளவு, தாதுப்பொருள்களின் கட்டமைப்பு, அளவு ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படுகிறது. மண்ணின் 4 முக்கிய கூறுகள் அனங்கம் அல்லது தாதுத்துகள்கள், கனிமப்பொருள் போன்றவை பலபகுதிகளில் பல்வகை--------------.மண், நீர், தாவரம் ஆகியவற்றிக்கு இடையே உள்ள தொடர்பைக் கொண்டு, மண்ணில் இருக்கும் நீர், புவியீர்ப்புவிசை நீர், தந்து--- நீர், ஈரப்பத நீர் எனப் பிரிக்கப்படுகிறது. தாவரங்கள் வாழ்வதற்கு கிடைக்கும் நீர் பெரும்பாலும் 15 பார்கள் அளவுவரை தந்துகிக் கவர்ச்சி நீரிலிருந்தே கிடைக்கிறது.
மண்ணின் வேதிப் பண்புகள், முக்கியமாக மண்ணின் கூழ்மப் பொருளிலுள்ள அங்கக, அனங்கக நிலைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலமே உருவாகின்றன. அங்கக பொருள் நிலை மாறுபட்டு நிலையில், புதிதாக அல்லது தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகளில் இருக்கும் அனங்கக நிலையின் மிச்ச சொச்சங்கள்
இணைந்தாகும்.
மனித சமுதாய வாழ்க்கை, பூமியின் மேலுள்ள எல்லா வகையான தாவர, விலங்கினங்கள் அனைத்திலும், தொடர்ந்து, நீர்சுழற்சி என்ற முடிவற்ற நீரோட்டத்தால் தூண்டப்பெற்றவையே! இந்த நீர்சுழற்சியில், மண் சேமிப்பு கிடங்காகவும், நீர் எப்பொழுதும் மண்ணிலுள்ள ஊடு சேமிப்பாகவும் உள்ளது. அங்கே, இரண்டு சுழற்சிகள் இணைந்து நெருக்குதல் உண்டாவதால், ஆவியாதல், கடல் மற்றும் வளிமண்டலத்திலிருந்து ஒருங்கே நடைபெறுகிறது. முதல் குறுகிய சுழற்சி என்பது, மழை பொழிவு மண்ணுக்குள் இறங்குவதுதான். பின் பச்சை நீர் என்றும் அழைக்கபடுகிறது. இரண்டாவது சுழற்சி நீலநீர் எனப்படுகிறது. இதுதான் மழை பொழிவு மண்வழியே ஈரப்பதமாகி, நிலத்தடி நீராகி, கடலுடன் கலப்பது என்ற நீண்ட தொடர் நிகழ்வு ஏற்படுகிறது. இங்கே குறிப்பிடும்படியான முக்கிய விஷயம் என்னவென்றால், நீர் சுழற்சி என்பது எப்போது துல்லியமாகவே பூமிமேல் பொழியும்படியே சரியாக ஒரே மாதிரி நடைபெறுவதில்லை.
இந்தியா, 328.72 மில்லியன் ஹெக்டேர் பரப்பு உள்ள மிகப்பெரிய நாடாகும். இதில் சுமார் 30 சதம், மலைகள், குன்றுகளாலும், 25 சதம் பீடபூமியாலும் மீதி 45 சதம் பள்ளத்தாக்குகளாலும் ஆனது. மொத்தப் புவிப்பரப்பில், காடுகள் 69.02 மில்லியன் ஹெக்டேர் பரப்பிலும், சாகுபடிக்கான புன்செய் நிலம் 28.48 மில்லியன் ஹெக்டேர் பரப்பிலும், நிரந்தர புல்வெளி மற்றும் மேய்ச்சல் நிலம் 11.04 மில்லியன் ஹெக்டேர் அளவிலும், தரிசும் நடப்பு தரிசும் 24.9 மில்லியன் ஹெக்டேராகவும், விவசாயம், காடு இவைகளுக்கில்லாத நிலப்பரப்பு, 59.19 மில்லியன் ஹெக்டேராகவும், விவசாய நிலம் 189.74 மில்லியன் ஹெக்டேராகவும் உள்ளது. மொத்தப் புவிப்பரப்பில் 54 சத பரப்பு நிலச் சிதைவு / அழிவுக்கு உள்ளாகி இருக்கிறது. நீர் அரிமானம், காற்று அரிமானம், நீர்பிடிப்பு, உவர்தன்மை, உப்புத்தன்மை, அமிலத்தன்மை மற்றும் பிற சிக்கலான பிரச்சனைகளை நோக்கி 93.6, 9.4, 14.3, 5.8,16.0 மற்றும் 7.4 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் இருக்கின்றன.
இயற்பியல் புவியமைப்பு படி, நம் நாட்டை 7 பகுதிகளாக பிரிக்கலாம். அவையாவன: இமயமலையை உள்ளடக்கிய வடக்கு மலைகள், வடகிழக்கு மலைத்தொடர்கள், சிந்து-கங்கைச் சமவெளி, மத்திய உயர் நிலங்கள், தக்காண தீபகற்ப பீடபூமி, கிழக்குக் கடற்கரை, மேற்கு கடற்கரை மற்றும் கடல் எல்லைகள், தீவுகள் என்பதே!
இந்தியா பரந்துபட்ட நிலவியல் அமைப்பைப் பெற்றுள்ளது. இந்தியாவின் வேறுபட்ட பகுதிகள் பல்வேறு கால அமைப்புள்ள / காலத்தில் உருவான நிலவியல் தகட்டில் பல்வேறு பாறை அமைப்புகளைப் பெற்றுள்ளது. சில பாறைகள் முழுதும் மோசமாக சிதைந்து நொறுங்கி வேறு வகைப் பாறைகளாகிவிட்டன. மற்றவைகள் பிற்காலத்தில் வண்டல் மண் படிந்துள்ளது. இந்திய நிலவியல் கண்க்கெடுப்பில் ஏராளமான வகைகளில், தாதுப்பொருள்கள் படிவுகள் மிகுந்த அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்திய புவியியல் நிலப்பரப்பை தக்காணமேடை கோண்டுவானா மற்றும் விந்தியன் என வகைப்படுத்த முடியும். தக்காணமேடையில், மகாராஷ்டிரம், குஜராத்தின் ஒரு பகுதி, கர்நாடகம், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் போன்றவை உள்ளன.
இந்திய மண்ணை பொதுவாக 4 பரந்த குழுக்களாக / பிரிவுவாகப் பிரிக்கின்றனர். இவை வண்டல் மண், கரிசல் மண், செம்மண் மற்றும் சரளை மண் எனப்படும். வண்டல் மண் படிவுகள் இந்து, கங்கை, பிரம்மபுத்திராவின் கழிமுகப் பகுதியிலிருந்து அடித்து வரப்பட்டவைகளாகும். இவற்றை டெல்டா வண்டல், சுண்ணாம்பு வண்டல், கடற்கரை வண்டல் என்றும் சொல்லப்படும். இது சுமார் 40 சதம் நிலப்பரப்பில் உள்ளது. கரிசல் மண், லேசான கருமை நிறத்தில் காணப்படும்; கரிமப் பொருள் மிகக் குறைவாகவே இருக்கும்; களிமண் அதிகமாய் இருக்கும். எதிர் அயனி மாற்றுத்திறன் அதிகம் உள்ளது. இவை ஒட்டும் தன்மையும், நெகிழித்தன்மையும் கொண்டது. இது மொத்த நிலப்பரப்பில் 22.2 சதம் உள்ளது. செம்மண் இந்தியாவில், கிட்டத்த்ட்ட அனைத்து மாநிலங்களிலும் காணப்படுகிறது. செம்மண்ணின் நிறம் என்பது, அதில் ஏராளமான இரும்பு சத்து கலந்துள்ளதாலேயே உண்டாகிறது. இந்த மண்ணில் நைட்ரஜ்ன், பாஸ்பரஸ் சத்துக்கள் குறைவாகவும், மட்கிய தழைச் சத்தும் உள்ளது. செம்மண்ணில், ‘கையோலினைட்டிக்’ வகை தாது உப்புகள் ஏராளமாய் காணப்படுகிறது. சரளை மண்ணில், சிதைந்த பொருட்கள் அதிகமாகவும், இரும்பு, அலுமினியத்தின் ஆக்ஸைடுகளும் காணப்படுகின்றன. இதில் அதிக அளவில் படிகல்களும், கையோலினைட்டும் உள்ளன.
மனித செயல்பாடுகளலும், பல வகையான இயற்கை இடர்பாடுகள் மற்றும் செயல்களாலும், நம் நாட்டின் நில அமைப்பு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. நிலத்தின் மேல்மண் அகற்றுதல், காடுகள் அழிப்பு, மற்றும் தடைசெய்யப்பட்ட சில விவசாய முறைகள் அனைத்தும் சேர்ந்து, நீண்ட காலமாய் நம்மை மோசமான சூழ்நிலையில் வாழும்படியான கட்டாயாத்துக்கு உள்ளாக்குகின்றன. நிலவமைப்பின் சூழச் சிதைவு / அழிவுதான், நம் நாட்டை மிகுந்த அழுத்தமான இறுக்கமான சூழலில் வாழ வைக்கின்றன. இதனால், நம்மை நீடித்த வளர்ச்சி நோக்கி நினைத்து, திட்டமிட்டு நீடித்து வாழ செயல்படும் படி தூண்டுகிறது. நமது எதிர்கால சந்ததியினர் இயற்கை செயல்பாடுகளில் ஏற்பட்ட குறிக்கீடுகளினால், நமது வாழிடம் வாழத் தகுந்ததாக இல்லாமல் போவதற்கும், எதிர்கால தலைமுறையில் நல்வாழ்வுக்கும் எண்ணி ஒரு இக்கட்டான சூழலில் இருக்கிறோம். எனவே நம் நிலத்தின் கடந்த கால மற்றும் இன்றைய அடிப்படைத் தகவல்கள், எதிர்கால அமைப்பை மாற்றிக் கணிக்க வழி காட்டுகின்றன. இதுவே நீடித்த வளர்ச்சியை நோக்கிய பயணத்தின் வளமையான படிக்கட்டுகள்ளாகும்..!
எழுதியவர் : பேரா.சோ. மோகனா, கல்வி ஒருங்கிணைப்பாளர், தே.கு.அ.மாநாடு-2010.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக