தே.கு.அ.மாநாடு 2010

தே.கு.அ.மாநாடு 2010
NCSC 2010 - Tamil Nadu

புதன், 21 ஜூலை, 2010

செய்யவேண்டியவையும்... செய்யக்கூடாதவையும்


18 & 19 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு..2010 - 2011
மையப் பொருள் : நிலவளங்கள்
பேரா.சோ.மோகனா,
மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர்,
NCSC 2010-2011
அறிவியல் மாநாட்டுக்கான ஆய்வு பற்றிய குறிப்பு..:
செய்யவேண்டியவையும்... செய்யக்கூடாதவையும்...
  • ஆய்வு செய்யும் குழந்தைகள் 10௦-17 வயதினராய் இருக்க வேண்டும்.
  • அவர்களின் வயது டிசம்பர் 31 ம் நாள் என்ன வயதோ,, அதுவே அவர்களின் ஆய்வுக் குழுவின் வயதாகும்,
  • 10 -13 வயதினர் இளநிலை/கீழ் நிலை என்றும், 13+ -17 வயதினர்,முது நிலை/ மேல் நிலை என்று சொல்லப் படுகிறது.
  • கீழ்நிலை/இளநிலை மாணவர்கள்(10 -13 ), 2 ,500௦௦ வார்த்தைகளும், மேல்நிலை / முதுநிலை மாணவர்கள் (13+ - 17) 3500 வார்த்தைகளுக்கு மிகாமல் ஆய்வறிக்கை தயாரிக்க வேண்டும்.
  • மேலும், ஒரு குழுவில் அதிக பட்ச வயது என்னவோ, அதுதான் அந்த குழுவின் வயதாகும்.
  • குழந்தைகள்,பள்ளியில் படிக்கலாம். பள்ளியில் படிக்காமலும் இருக்கலாம். ஆனால் ஆய்வு செய்யலாம்.வயது மட்டுமே ஆய்வுக்கான நிர்ணயம். முறைசாரப் பள்ளி,/இரவுப் பள்ளி/சிறார் பள்ளி/துளிர் இல்லத்திலிருந்தும் கூட ஆய்வுகள் செய்யலாம்.
  • ஆய்வு பதிவு செய்த உடனேயே, சுமார் ஒரு பக்கத்தில், ஆய்வு பற்றி எழுதி மாநில மையத்திற்கு அனுப்ப வேண்டும்.
  • குழந்தைகள், கட்டாயமாய் 2 -5 பேர் கொண்ட குழுவாகத்தான் செய்ய வேண்டும்.
  • தனி ஒருவராக ஆய்வு அறிக்கை தயார் செய்ய கூடாது.
  • ஆய்வறிக்கைக்கு உதவிட, ஒரு வழிகாட்டி ஆசிரியர் வேண்டும்.
  • அவர் பள்ளி ஆசிரியராகவோ, துளிர் இல்ல பொறுப்பாளராகவோ,அல்லது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்
  • பொதுவாக சோதனை முறையில் ஆய்வு செய்தால், அதனை சரியாக முறைப்படி செய்ய வேண்டும். . ,
  • .ஆய்வின் கருத்து புதிதான, எளிதான, செயல் முறையுடன் கூடியதாய், கூட்டு செயல்பாட்டுடன் இருக்க வேண்டும்.
  • ஆய்வு செய்யும் விஷயங்கள், உள்ளூர் பிரச்சினைகளை மையமாக வைத்து, தகவல்கள், கணக்கெடுப்பு ,சோதனைகள் போன்றவற்றை தங்களின் மாவட்டத்துக்குள்ளேயே தெரிவு செய்து, ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.
  • மாவட்ட எல்லை தாண்டுதல் கூடாது.
  • தலைப்பே தன்னிலை விளக்கம் தருவதாக இருக்க வேண்டும்.
  • புள்ளிவிபரங்கள் போதுமானதாக இருக்க வேண்டும்.
  • புள்ளிவிபரம்/கணக்கெடுப்பு, நேர்காணலுக்கான வினாத்தாள் தயாரிக்கும்போது, அதில் குறைந்த பட்சம் 20 வினாக்கள் இருக்க வேண்டும்.
  • அதே போல் ஆய்வுக்காக நேர்காணல் செய்யப்படும் நபர்கள், குறைந்தது 50 நபராவது இருக்க வேண்டும்
  • கட்டாயமாக , மனிதனின் மேலோ, மனிதன் உண்ணும், குடிக்கும் எந்த பொருளிலும் ஆய்வு செய்யக் கூடாது.
  • மேலும், மருத்துவம், மருந்துகள் , வியாதி தொடர்பாகவும் .ஆய்வு செய்யக் கூடாது.
  • ஆய்வறிக்கையை இணையதளத்தில் இருந்து இறக்கி போடக்கூடாது.
  • ஆய்வறிக்கையை கையால் எழுதலாம்; தட்டச்சும் செய்யலாம்.
  • ஆய்வறிக்கையில் அதிகபட்சமாக 4 நிழற்படங்கள் / அட்டை/விளம்பரப் படம் மட்டுமே இருக்க வேண்டும்.
  • அதிகபட்சமாக உள்ள நிழற்படங்கள் / அட்டைக்கு எவ்வித மதிப்பீடும் கிடையாது.
  • கட்டாயமாக VCD அனுமதிக்கப்பட மாட்டாது.
  • ஆய்வறிக்கைக்கானசெலவைரூ.250க்கு மேல் மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • ஆய்வறிக்கையின் போது கட்டாயமாக தினசரி LOG book எழுத வேண்டும். ( தினசரி..நாட்குறிப்பு போலத்தான் அது.)
  • மாநாட்டின் போது, ஆய்வின் சுருக்கம், ஆங்கிலத்தில் 250 வார்த்தைகள் தட்டச்சு செய்து மாவட்ட ஒருங்கிணைப்பாளரிடம் கொடுக்க வேண்டும்.
  • மாவட்ட மாநாட்டின் பொது கட்டாய மாக log book சமர்ப்பிக்க வேண்டும். ,
  • LOG book இல்லாத குழந்தைகள் மாநாட்டில் பங்கெடுக்க முடியாது.
  • ஒவ்வொரு மாநாட்டுப் பிறகும்,குழந்தைகள், ஒரு 5 பக்கம் ,மாநாட்டிற்குப்பின் என்ன செய்தார்கள் என்பது பற்றிய Follow -up Action பற்றிய தகவல் கட்டாயமாய் இணைக்க வேண்டும். இதனை தனியாக மதிப்பீடு செய்வார்கள்,
  • குழந்தை விஞ்ஞானிகள் மாநாட்டிற்குப்பின் சமூகத்திடம் எவ்வாறு சென்று செயல் படப் போகிறார்கள் என்பதனையும், மாநாட்டில் அவசியம் சொல்லவேண்டும்.
  • குழந்தை விஞ்ஞானிகள் ஆய்வறிக்கையை, நேர்காணலின் போது 8 நிமிடத்தில் சொல்லி முடிக்க வேண்டும்.
  • வழிகாட்டி ஆசிரியர்கள் குழந்தை விஞ்ஞானிகளை ஆய்வறிக்கை சொல்லும்போது, நாங்கள் , செய்தோம், கண்ணன் குழி தோண்டினான், நான் மண் போட்டேன், கலா விதைப் போட்டு தினம் நீர் ஊற்றினாள் என குழுவின் அனைத்து குழந்தைகளையும் இணைத்துப் பேச பழக்க வேண்டும். ஏனெனில் இது ஒரு கூட்டு செயல்பாடு என்பதும், கூட்டு செயல்பாடு , நடவடிக்கைக்கு தனியான மதிப்பீடு உண்டு என்பதை, குழந்தை விஞ்ஞானிகளும், வழிகாட்டி ஆசிரியர்களும் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்

வெள்ளி, 9 ஜூலை, 2010

உங்களின் நிலத்தை அறிந்து கொள்ளுங்கள்- திட்டம் 2: நிலப்பயன்பாடு வகை ஆய்வு

திட்டம் 2:

நிலப்பயன்பாடு வகை ஆய்வு

இந்தியாவில், நிலப்பகுதி பரப்பு 3,287,263 ச.கி.மீ உள்ளது. இந்தியாவில், விதம்விதமான நிலவகைகள் உள்ளன; விவசாய நிலம், தரிசு நிலம், ரியல் எஸ்டேட் நிலம், வணிக நிலம், பண்ணை நிலம் மற்றும் வசிப்பிட நிலம். இந்திய மக்கள், முக்கியமான விவசாய செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதிலுள்ள மொத்த நிலத்தில், விவசாய நிலம் 54.7%... விவசாய நிலங்கள், மெட்ரோ நகரங்களை சுற்றி, அமைந்துள்ளன. பொதுவாக விவசாய நிலங்கள் இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் பரவிக்கிடக்கிறன. விவசாய வளங்கள், மிக முக்கிய புதுப்பிக்கப்படும் நிலங்களாகவும் மற்றும் அபார இயற்கை வளங்களாகவும் கருதப்படுகின்றன. பலவகை கலப்பு விஷயங்கள், நம்பிக்கையான மற்றும் சரியான நேரத்தில் அப்பகுதி நிலப்பயன்பாட்டு வகை பற்றிய தகவல்களைத் தருவித்தன் மூலம், அதனை அதிக பட்சம் பயன்படுத்துதல், அப்பகுதியின் வளர்ச்சி போன்றவற்றில் உணவுப் பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய நிலப்பயன்பாடு மற்றும் சரியான பயன்பாட்டு வகை, நிலப்பயன்பாட்டின் வரலாறு போன்றவற்றில் இருக்கக் கூடிய அனுபவ அறிவின் மூலம், தகுந்த நிலத்தை திட்டத்துடன் விவசாயிகள் பயன்படுத்த உதவும்.

குறிக்கோள் :

1. திட்டப் பகுதிக்கான நிலப்பயன்பாட்டு வகை / அமைப்பை அறிதல்.

2. பலவகையான நிலவகைகளில் பயிர் செய்யும் வகை, பயிர் வகையின் அடர்த்தியை அறிதல்.

3. உள்ளூர் பகுதிக்கான மாற்று நில பயன்பாட்டு திட்டம் தயாரிப்பதற்கான ஆலோசனை.

தேவையான பொருட்கள் :

1. கண்டுபிடிக்கும் பதிவுக்கான, புள்ளிவிபரத்தாள்

2. மாவட்ட, துணைப்பிரிவு, பிளாக், பஞ்சாயத்து விவசாய அலுவலகம், அரசு சார்பற்ற அமைப்புகள் மற்றும் விவசாயிகளிடமிருந்து முதன்மை மற்றும் இரண்டாம் புள்ளிவிபர தகவல்கள் சேகரித்தல்.

3. அப்பகுதியின் பரந்த, பெரிய அளவு அடிப்படை வரைபடம்.

செய்முறை :

அ. கீழே குறிப்பிடப்பட்டுள்ள அளவீடுகளில், கடந்த சில ஆண்டுகளீல் கிடைத்த முதன்மை மற்றும் இரண்டாம் நிலை ஆதாரங்களிலிருந்து புள்ளிவிபரம் சேகரித்தல்.

1. ஆராய்வுக்கு தேவையான மொத்தபரப்பு.

2. காடுகள்

3. விவசாயமற்ற பயன்பாட்டுக்கான பகுதி

4. தரிசான மற்றும் விவசாயம் செய்யப்படாத பகுதிகள்

5. விவசாயம் செய்யப்படும் மொத்தப் பகுதி

6. ஒரு முறைக்கு மேல் விதைப்பு செய்யப்பட்ட பகுதி

7. மொத்தம் பயிரிடப்பட்ட பகுதி

8 பயிர் செய்யப்படும் பகுதியின் அடர்வு(சதவீதம்)

9. பாசனப் பகுதி... முடிந்தால்

10. பாசனம் செய்யப்படாத பகுதி

11. பாசனம் மற்றும் விவசாயம் செய்யப்படும் பகுதியின் சதவீதம்

12. தானியம், பருப்புகள், எண்ணெய்வித்துக்கள், நார்சத்து பயிர்கள், அலங்காரப் பயிர்வகைகள் மற்றும் பிற பயிர்கள் செய்யும் பகுதி

13. பலவகை பயிர்கள், எவ்வளவு எவ்வளவு என்று பிரித்து பகுதியை பிரித்தல்.

ஆ. கடந்த 10 ஆண்டுகளிலுள்ள நில பயன்பாட்டையும், தற்போது உள்ளதிற்கும் உள்ள வேறுபாடுகளை ஆராய்க.

இ. விவசாயிகளின் தேவையை அடிப்படையாகக் கொண்டு அறியப்பட்ட நில பயன்பாட்டிற்கான ஆலோசனையை வழங்குக.

ஈ. காலப்போக்கில்(வருடங்களை கணக்கில் கொண்டு) அளவீடுகள் மாற்றம் தொடர்பாய், வரைபட பிரிதிநிதிகளை/முன்மாதிரிகளைத்ட் தயார் செய்.

தொடர்புள்ளவை :

சீதோஷண நிலை மாற்றம், நிலச் சிதைவு, மனித தலையீடுகள் போன்ற உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளால், கடந்த காலங்களில் நடைபெற்ற நில பயன்பாட்டு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், எதிர்காலத்தில் திட்டமிடுபவர்கள், நிர்வாகிகள் மற்றும் பயனீட்டாளர். இ.நி, மாறும் காட்சி / அமைப்புக்கேற்ப, தாக்குப் பிடிப்பதை அறிய ஆலோசனை வழங்கும் தன்மையுடையது என்பதை மாணவர்கள் ஒரு எதிர்கால பார்வையோடு அறிய முடியும்.

முக்கியமான வார்த்தைகள்:

பயிர் வகைபாடு / அமைப்பு - ஒரு வருடத்தில் குறிப்பிட்ட பகுதியில் மாற்று முறை

/ மற்றும் தரிசு அமைதல்.

பயிர் அடர்வு - அப்பகுதியில் பயிரிடப்படும் பயிர் அழைக்கும், விவசாயம் செய்ய

அளவுக்கும் உள்ளேயுள்ள விகிதம். இதனை 100% அறிய 100-ஆல் பெருக்கி சதவீதம் அறியவும். கீழேயுள்ள சூத்திரப்படி இதனைக்

கணக்கிட்டு தெரிந்து கொள்ளலாம்.

பயிர் அடர்வு = மொத்த பயிர் பகுதி / சரியாக பயிர் வளர்ந்த பகுதி X 100

சரியாக பயிர் வளர்ந்த பகுதி - விவசாயம் செய்த பகுதி

மொத்தம் பயிரிடப்பட்ட பகுதி - எவ்வளவு பயிருக்காக விதைத்திருக்கிறதோ அத்துடன் எவ்வளவு விதைதிருக்கிறது என்பதை அறிவது.

திட்டம் 1: ஓர் இடத்தின் விவசாய - சூழல் வரைபடம்

கிராமத்து அளவில், விவசாய - சூழல் ஆய்வு என்பது, பண்ணை முறையில் மேலாண்மைக்கு ஒரு முக்கியமான கருவி / சாதனமாகும். விவசாய - சூழலமைப்பு வரைபடம், ஒரு இடத்தின் குறிப்பிட்ட சமூகத்தின் சிபாரிசு, தொழில் நுட்ப ஏற்ப மற்றும் வளம் சார்ந்தவற்றை பரவலாக்கும் அடிப்படை மற்றும் சமூக-பொருளாதார நிலைமையை உயர்த்த உதவும் காரணிகள். நில வகையின் துணிவார்ந்த முயற்சியின் சார்பாக, சமூகப் பொருளாதார வகைபாடுகள், இவைகளுக்கிடையேயுள்ள செயல்பாட்டை, குறிப்பிட்ட வளமையான பகுதிக்கும், விவசாயத்தை சீர் தூக்கி விடுதலுக்கு மற்றும் குறிப்பிட்ட தொழில் நுட்ப ஈடுபாட்டில் செயல்படவும் உதவுகின்றன.

------------------------

குறிக்கோள் :

1. அருகிலுள்ள கிராமங்களின் நிலவளம் கணக்கெடுப்பது

2. அந்தப் பகுதி வளநிலைமைக்கான சிக்கல் / பிரச்சனை மற்றும் வாய்ப்புக்கள் அறிதல்.

3. குழு உணர்வுடன் கிராமப்புற பல்வகை வளர்ச்சித் திட்டங்களில், திட்டமிட்டு தலையிடுதல்.

தேவையான பொருட்கள் :

1. கண்டுபிடிப்பு பதிவேடுக்கான தாள்கள்

2. வட்ட, துணைப்பிரிவு மற்றும் மாவட்டங்களிலிருந்து, பஞ்சாயத்து, தன்னார்வல அமைப்பு, விவசாய மன்றம் போன்றவற்றிடமிருந்தும், விவசாய அலுவலகங்களிலிருந்தும் தேவையான முதன்மை மற்றும் இரண்டாம் வள () தாள்கள்.

3. அப்பகுதியின் பெரிய அளவு வரைபடம்.

செய்முறை :

1. அடிப்படை வரைபடத்தின் சேகரிப்பு :

வருவாய் வரைபடம் அல்லது கிராம வரைபடத்தை மாவட்ட வருவாய் துறை / பஞ்சாயத்து அலுவலகத்திலிருந்து பெறலாம். அல்லது கூகுள் பூமி வலைதளத்திலிருந்து இறக்கம் செய்து பெறலாம்.

2. இடவியல்பு விளக்கம் மற்றும் நீரியல் வரைபடம்:

இந்த வரைபடம் ஒவ்வொரு நிலவகை தொடர்பாக தயாரிக்க வேண்டும். அதனை வகைபடுத்தி பிரித்து மற்றும் சாலைகள், வீடுகள், தோட்டங்கள் மற்றும் மற்ற நிலத்தின் குறியீடுகள் தொடர்பான பரவலான விபரத்தை பெறவேண்டும். எல்லைகள் உள்ள நிலவகையில் அதைச் சுற்றி போதுமான நடைபாதை இருப்பதை நிர்ணயம் செய்ய வேண்டும். வெள்ளம் மற்றும் வடிகால் திசை, இன்னபிற முக்கிய நீர் வளங்களை விவசாயிகளிடமிருந்து பெறவேண்டும்.

3. தொழில் சார்ந்த வரைபடம்

இந்த வரைபடம் விவசாயிகளிடமிருந்தும், என்ன தொழில் வளம் உள்ளது, அந்த நிலத்தை எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்ற தகவலுடன் வரைபடம் தயாரிக்க வேண்டும். முக்கிய தொழில் வளங்களான பயிர்வகைகள், விலங்குகள், மீன், தோட்டம், சமூகக் காடுகள் போன்றவற்றிற்கான வரைபடம் தயாரிக்க வேண்டும். விவசாயம் மற்றும் விவசாயிகளின் செயல்பாடுகளான வாழிடம், பாறை அல்லது கல்லாலான பகுதிகள், சரிவான / செங்குத்தான நிலம் அல்லது தரிசு / பயிரிட வழியில்லாத நிலம் போன்றவற்றின் மேல் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்.

4. சமூகக் குழுக்களுக்கான வரைபடம்:

இந்த வரைபடம் விவசாயிகளிடமிருந்து, அப்பகுதியில் வாழும் அவர்களின் ஜாதி அல்லது சமூக குழு தொடர்பாய் வினாக்கள் தொடுத்து அதன் மூலம் தயாரிக்க வேண்டும். வீடுகள் போதுமான இடைவெளியுடன் பரவலாக இருப்பது தொடர்பாய் வரைபடம் தயாரித்தல்.

5. விவசாய - சூழல் குறுக்குவெட்டு மண்டலங்கள்

இந்த வரைபடம் நிலவகைகளின் ஒட்டு மொத்த கலப்பு பொருள் தொடர்பாக தயாரித்தல். ஒவ்வொரு நிலத்தின் தன்மைக்கும் ஏற்றபடி அதன் உள்ளூர் பெயர், மண்வகை, பயிர்கள், மரங்கள், கால்நடைகள், மீன், குறிப்பிட்ட வாய்ப்புகள் மற்றும் சங்கடங்கள் / சிக்கல்கள் போன்றவற்றை உள்ளூர்வாசிகளிடமிருந்து திரட்டிய தகவல்களை ஒட்டி பட்டியலிட வேண்டும்.

தொடர்புள்ளவை :

தற்போதுள்ள விவசாய-சூழல் அமைப்பைச் சார்ந்த நில பயன்பாட்டு திட்டத்திற்காகவும், அதனை நீடித்த வளர்ச்சிக்கும் பயன்பாடு செய்வதைத் தொடர்ந்து, நில வடிவமைப்பு, மண்கள், நீரியல், தாவரம், விலங்குகள் மற்றும் அப்பகுதி மக்கள் தொகை என்ற பலவகையான தலைப்புகளில், இடையே உள்ள முழுமையான செயல்பாடுகளுக்கான பார்வையை, பயனற்றதாக செய்ய ஒரு திட்டம் தீட்ட வேண்டும். இதைப் போன்ற விவசாய-சூழல் அமைப்பு முறையில் இதற்கான அறிவு / அனுபவம் தொடர்பாய் பல்வேறு விஷயங்களைச் செய்ய உதவும் / முடியும். மேலும் இது, அப்பகுதியின் அறிவார்ந்த மற்றும் குழு நடத்தை, மேலும் பிரச்சனையின் மீது மையம் / கவனம் மற்றும் அப்பகுதியில் வாய்ப்புகளை படிப்பிக்க / அறிந்து கொள்ள உதவும்.

சரியான குறுக்குவெட்டு நிலமுகப்புக்கான படம்

நிலவகை

உயர் நிலம்

(உள்ளூர் பெயர்)

நடுத்தரநிலம்

(உள்ளூர் பெயர்)

தாழ்நிலம்

(உள்ளூர் பெயர்)

நில மென்மைத்தன்மை

வண்டல்

சரளை

வண்டல்

சரளை

வண்டல்

சரளை

சரிவு

1-3%

தட்டை

தட்டை

நீரியல்

மழையளவு(சராசரி)

1200 மிமீ

1200 மிமீ

1200 மிமீ

வெள்ளப்பகுதி

இல்லை

0.25-0.45

0.50-0.60

கால அளவு

இல்லை

15-20 நாட்கள்

20-30 நாட்கள்

எவ்வளவு நாளுக்கு

2-3 முறை / வருடத்திற்கு

2-3 முறை / வருடத்திற்கு

ஒருமுறை

நீர்மட்டம்

1மீ - 10 மீ

0.5-0.75 மீ

0.0 - 0.5 மீ

பயிர்கள் மரங்கள்

பெருவிவசாயிகள்

நெல், கோதுமை,

சோளம், மா

பப்பாளி போன்றவை

நெல்,கோதுமை

கொண்டை கடலை,

நெல், கோதுமை,

கொண்டை கடலை, கரும்பு

சிறுவிவசாயிகள்

நெல், கோதுமை, சர்க்கரை வள்ளி போன்றவை

கோதுமை, சோளம், நெல்

நெல், கொண்டை கடலை, கோதுமை

தரிசு நெல்

ஊடு பயிர்கள்

கோதுமை, சோளம், தேக்கு சால், உள்ளூர் வகைகள்

கோதுமை, சோளம், தேக்கு சால், உள்ளூர் வகைகள்

கோதுமை, சோளம், தேக்கு சால், உள்ளூர் வகைகள்

கால்நடை

பசு - காளைகள், ஆடுகள்

ஆடுகள் மேய்த்தல்

காளைமாடு உழுதல்

பிரச்சனைகள்

எல்லா விவசாயிகளுக்கும்

எல்லா விவசாயிகளுக்கும்

எல்லா விவசாயிகளுக்கும்

விதை

விதை

விதை

பெருவிவசாயிகள்

பெருவிவசாயிகள்

பெருவிவசாயிகள்

உழைப்பு

உழைப்பு

மோசமான வடிகால்

சிறுவிவசாயிகள்

சிறுவிவசாயிகள்

சிறுவிவசாயிகள்

நீர்பாசன வசதி, மேய்ச்சல் நிலம் கிடைக்காமை, தாவர பாதுகாப்பு பிரச்சனைகள்

நீர்பாசன வசதி, மேய்ச்சல் நிலம் கிடைக்காமை, தாவர பாதுகாப்பு பிரச்சனைகள்

ராகி பயிரிடுதல் தடுப்பு, நெல் அறுத்த பின் ராகி பயிர்

வாய்ப்பு :

சிறுவிவசாயிகள் - தேவையான உள்பொருட்கள், சரியான நேரத்தில் கிடைக்கப் பொருளாதார ரீதியாக கடன் வசதிகள், கால்நடை வளர்ச்சி.

எழுதியவர்: பேரா.சோ.மோகனா

துணைத தலைப்பு - 1. உங்களின் நிலத்தை அறிந்து கொள்ளுங்கள்

உங்களின் நிலத்தை அறிந்து கொள்ளுங்கள்

நிலத்தை புரிந்து கொள்ளுதல், அதை பயன்படுத்துதல் மற்றும் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை பராமரிப்பதிலும், அதன் வளர்ச்சி மற்றும் அப்பகுதியின் வாழ்க்கைத்தரம் பிரதிபலிப்பதை அறியலாம். மனிதர்களின் முறையற்ற உபயோகத்தால், ஆக்கிரமிப்பால் சாகுபடி நிலப்பகுதி சுருங்குதல், செயற்கை உரங்களினால் மண்வளம் சரிதல், மண்வளம் பரிசோதிக்காமை, மண்வளம் குறைவது போன்ற ஏராளமான தாக்கங்கள் நிலத்தின் மேல் படிகின்றன. நிலத்தின் மதிப்பு என்பது, அதன் அளவு, அமைவிடம், வணிகச் சந்தையிலிருந்து உள்ள தூரம், மற்றும் உற்பத்தி தவிர அதற்கான இயற்கை பயன்பாடு இவற்றை பொறுத்தும் உள்ளது. ஒட்டு மொத்தமான குணங்களில் பூமியின் பரப்பில் மற்ற இடங்களிலிருந்து ------------ வேறுபாடுகள் உள்ளதால், அந்தப் பகுதியின் முக அமைப்பே மாறிவிடுகிறது. மண் என்பது அற்புதமான, அமைதியான இயற்கைப் பொருள். இது பாறைகள்

தட்பவெப்ப சீதோஷண நிலை மாற்றத்தால் சிதைவுறுவதால் உருவானது. இதில் தாதுப்பொருட்கள், அங்ககப்பொருட்கள் ஏராளமாக உள்ளன. எனவே இது குறிப்பிட்ட வேதியல், இயற்பியல், தாதுவியியல் மற்றும் உயிரியல் தன்மைகளை, பூமிப்பரப்பின் மேலும், கீழே பல்வேறு அடித்தளத்திலும், தாவரங்கள் வளர்வதற்கேற்றவாறு, தன்னகத்தே கொண்டது. சீதோஷண நிலை, உயிரியல், உருவாக்கப் பொருட்கள் மற்றும் காலம் இவைகளுக்கிடையேயுள்ள செயல்பாட்டு விளைவால் உருவானது. பலவகை மண்வகைகள், பலவகை பாறைகளிலிருந்தும், பலப்பல வகையான கலப்பு மூலம் உருவான உருவாக்கப் பொருள்களிலிருந்தும் அமையப்பெற்றதாகும்! எரிமலைப் பாறை, படிவுப் பாறை, சிதைவுப் பாறை, உருமாறிப் பாறை என பாறைகளில் பல்வேறு வகைகள் உள்ளன. பொதுவாக பாறைகள் சிலிகான், அலுமினியம், இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆக்ஸைடுகள் என்ற வேதிப்பொருட்களால் ஆனவை. பாறைகள் பல்வேறு வெப்பநிலை, அழுத்தம் மற்றும் ஈரப்பதத்தால் உண்டான வேதியல் மற்றும் இயற்பியல் சிதைவுகளால் மண் உருவாவதற்கான அடிப்படைப் பொருள் உருவாகிறது. பிறகு, திறந்த ----------- மாற்றங்கள் மற்றும் மண் உருவாகும் முறை இரண்டும் ஒன்றிணைந்து, மேலும் மண் வளத்தை மிகுதிப்படுத்துகிறது.

ஒவ்வொரு மண்ணும் அதன் பண்புகளைப் பொறுத்து பல வகைகளில் வகைப்படுத்தப்படுகிறது. இது மண்ணின் முகவமைப்பு என்று அழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பரப்பளவில், குறிப்பிட்ட ஆழத்திற்கு காணப்படும் மண் வகை, அந்த பகுதி முழுவதற்குமான மண்வகை ஆகும். அது வெவ்வேறு ஆழத்தில் வெவ்வேறு வெளிப் பண்புகளை கொண்டிருக்கும். இது நிறம், தொடுதன்மை, கட்ட அமைப்பு போன்றவற்றில் மாறுபடும். இவ்வாறு மண் ஆராயப்படும் பகுதிகளில் O, A, E, B, C மற்றும் R என்று வகைப்படுத்தப்படுகிறது. எனவே ஆராயப்படும் மண்வகை அமைப்பு மண்வகையைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு, வகைப்படுத்துவதற்கு அளவுகோலாய் மட்டுமல்லாமல் ஆராய்ச்சியாளர்களின் மண் - ஈரப்பதம் - தாவரங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைக் காட்ட பெரிதும் உதவுகிறது. எனவே ஒரு பகுதியின் மண்வகை / அமைப்பு, அப்பகுதியின் கட்டமைப்பியல், அடிப்படையில் மண்ணின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளை உள்ளடக்கியதாக அனைத்து தகவல்களையும் நமக்கு அளிக்கிறது.

மண்ணின் இயற்பியல் பண்புகள் கட்டமைப்பில், மிகவும் முக்கியமானது. ஏனெனில் இதனைக் கொண்டே விவசாயம், காடு வளர்ப்பு போன்றவைகளை நிர்ணயிக்க உதவுகிறது. மேலும் விவசாயமற்ற செயல்பாடுகளான வாழிடம், பொழுதுபோக்கு போன்றவைகளுக்கு பயன்படும். மண்ணின் ஊடுருவு தன்மை, நீர் பிடிப்பு தன்மை, காற்றோட்டம், நெகிழ்வுத் தன்மை மற்றும் மண் வளச்சத்தின் தன்மை போன்றவற்றை மண் துகள்களின் அளவு, தாதுப்பொருள்களின் கட்டமைப்பு, அளவு ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படுகிறது. மண்ணின் 4 முக்கிய கூறுகள் அனங்கம் அல்லது தாதுத்துகள்கள், கனிமப்பொருள் போன்றவை பலபகுதிகளில் பல்வகை--------------.மண், நீர், தாவரம் ஆகியவற்றிக்கு இடையே உள்ள தொடர்பைக் கொண்டு, மண்ணில் இருக்கும் நீர், புவியீர்ப்புவிசை நீர், தந்து--- நீர், ஈரப்பத நீர் எனப் பிரிக்கப்படுகிறது. தாவரங்கள் வாழ்வதற்கு கிடைக்கும் நீர் பெரும்பாலும் 15 பார்கள் அளவுவரை தந்துகிக் கவர்ச்சி நீரிலிருந்தே கிடைக்கிறது.

மண்ணின் வேதிப் பண்புகள், முக்கியமாக மண்ணின் கூழ்மப் பொருளிலுள்ள அங்கக, அனங்கக நிலைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலமே உருவாகின்றன. அங்கக பொருள் நிலை மாறுபட்டு நிலையில், புதிதாக அல்லது தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகளில் இருக்கும் அனங்கக நிலையின் மிச்ச சொச்சங்கள்

இணைந்தாகும்.

மனித சமுதாய வாழ்க்கை, பூமியின் மேலுள்ள எல்லா வகையான தாவர, விலங்கினங்கள் அனைத்திலும், தொடர்ந்து, நீர்சுழற்சி என்ற முடிவற்ற நீரோட்டத்தால் தூண்டப்பெற்றவையே! இந்த நீர்சுழற்சியில், மண் சேமிப்பு கிடங்காகவும், நீர் எப்பொழுதும் மண்ணிலுள்ள ஊடு சேமிப்பாகவும் உள்ளது. அங்கே, இரண்டு சுழற்சிகள் இணைந்து நெருக்குதல் உண்டாவதால், ஆவியாதல், கடல் மற்றும் வளிமண்டலத்திலிருந்து ஒருங்கே நடைபெறுகிறது. முதல் குறுகிய சுழற்சி என்பது, மழை பொழிவு மண்ணுக்குள் இறங்குவதுதான். பின் பச்சை நீர் என்றும் அழைக்கபடுகிறது. இரண்டாவது சுழற்சி நீலநீர் எனப்படுகிறது. இதுதான் மழை பொழிவு மண்வழியே ஈரப்பதமாகி, நிலத்தடி நீராகி, கடலுடன் கலப்பது என்ற நீண்ட தொடர் நிகழ்வு ஏற்படுகிறது. இங்கே குறிப்பிடும்படியான முக்கிய விஷயம் என்னவென்றால், நீர் சுழற்சி என்பது எப்போது துல்லியமாகவே பூமிமேல் பொழியும்படியே சரியாக ஒரே மாதிரி நடைபெறுவதில்லை.

இந்தியா, 328.72 மில்லியன் ஹெக்டேர் பரப்பு உள்ள மிகப்பெரிய நாடாகும். இதில் சுமார் 30 சதம், மலைகள், குன்றுகளாலும், 25 சதம் பீடபூமியாலும் மீதி 45 சதம் பள்ளத்தாக்குகளாலும் ஆனது. மொத்தப் புவிப்பரப்பில், காடுகள் 69.02 மில்லியன் ஹெக்டேர் பரப்பிலும், சாகுபடிக்கான புன்செய் நிலம் 28.48 மில்லியன் ஹெக்டேர் பரப்பிலும், நிரந்தர புல்வெளி மற்றும் மேய்ச்சல் நிலம் 11.04 மில்லியன் ஹெக்டேர் அளவிலும், தரிசும் நடப்பு தரிசும் 24.9 மில்லியன் ஹெக்டேராகவும், விவசாயம், காடு இவைகளுக்கில்லாத நிலப்பரப்பு, 59.19 மில்லியன் ஹெக்டேராகவும், விவசாய நிலம் 189.74 மில்லியன் ஹெக்டேராகவும் உள்ளது. மொத்தப் புவிப்பரப்பில் 54 சத பரப்பு நிலச் சிதைவு / அழிவுக்கு உள்ளாகி இருக்கிறது. நீர் அரிமானம், காற்று அரிமானம், நீர்பிடிப்பு, உவர்தன்மை, உப்புத்தன்மை, அமிலத்தன்மை மற்றும் பிற சிக்கலான பிரச்சனைகளை நோக்கி 93.6, 9.4, 14.3, 5.8,16.0 மற்றும் 7.4 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் இருக்கின்றன.

இயற்பியல் புவியமைப்பு படி, நம் நாட்டை 7 பகுதிகளாக பிரிக்கலாம். அவையாவன: இமயமலையை உள்ளடக்கிய வடக்கு மலைகள், வடகிழக்கு மலைத்தொடர்கள், சிந்து-கங்கைச் சமவெளி, மத்திய உயர் நிலங்கள், தக்காண தீபகற்ப பீடபூமி, கிழக்குக் கடற்கரை, மேற்கு கடற்கரை மற்றும் கடல் எல்லைகள், தீவுகள் என்பதே!

இந்தியா பரந்துபட்ட நிலவியல் அமைப்பைப் பெற்றுள்ளது. இந்தியாவின் வேறுபட்ட பகுதிகள் பல்வேறு கால அமைப்புள்ள / காலத்தில் உருவான நிலவியல் தகட்டில் பல்வேறு பாறை அமைப்புகளைப் பெற்றுள்ளது. சில பாறைகள் முழுதும் மோசமாக சிதைந்து நொறுங்கி வேறு வகைப் பாறைகளாகிவிட்டன. மற்றவைகள் பிற்காலத்தில் வண்டல் மண் படிந்துள்ளது. இந்திய நிலவியல் கண்க்கெடுப்பில் ஏராளமான வகைகளில், தாதுப்பொருள்கள் படிவுகள் மிகுந்த அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்திய புவியியல் நிலப்பரப்பை தக்காணமேடை கோண்டுவானா மற்றும் விந்தியன் என வகைப்படுத்த முடியும். தக்காணமேடையில், மகாராஷ்டிரம், குஜராத்தின் ஒரு பகுதி, கர்நாடகம், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் போன்றவை உள்ளன.

இந்திய மண்ணை பொதுவாக 4 பரந்த குழுக்களாக / பிரிவுவாகப் பிரிக்கின்றனர். இவை வண்டல் மண், கரிசல் மண், செம்மண் மற்றும் சரளை மண் எனப்படும். வண்டல் மண் படிவுகள் இந்து, கங்கை, பிரம்மபுத்திராவின் கழிமுகப் பகுதியிலிருந்து அடித்து வரப்பட்டவைகளாகும். இவற்றை டெல்டா வண்டல், சுண்ணாம்பு வண்டல், கடற்கரை வண்டல் என்றும் சொல்லப்படும். இது சுமார் 40 சதம் நிலப்பரப்பில் உள்ளது. கரிசல் மண், லேசான கருமை நிறத்தில் காணப்படும்; கரிமப் பொருள் மிகக் குறைவாகவே இருக்கும்; களிமண் அதிகமாய் இருக்கும். எதிர் அயனி மாற்றுத்திறன் அதிகம் உள்ளது. இவை ஒட்டும் தன்மையும், நெகிழித்தன்மையும் கொண்டது. இது மொத்த நிலப்பரப்பில் 22.2 சதம் உள்ளது. செம்மண் இந்தியாவில், கிட்டத்த்ட்ட அனைத்து மாநிலங்களிலும் காணப்படுகிறது. செம்மண்ணின் நிறம் என்பது, அதில் ஏராளமான இரும்பு சத்து கலந்துள்ளதாலேயே உண்டாகிறது. இந்த மண்ணில் நைட்ரஜ்ன், பாஸ்பரஸ் சத்துக்கள் குறைவாகவும், மட்கிய தழைச் சத்தும் உள்ளது. செம்மண்ணில், ‘கையோலினைட்டிக்வகை தாது உப்புகள் ஏராளமாய் காணப்படுகிறது. சரளை மண்ணில், சிதைந்த பொருட்கள் அதிகமாகவும், இரும்பு, அலுமினியத்தின் ஆக்ஸைடுகளும் காணப்படுகின்றன. இதில் அதிக அளவில் படிகல்களும், கையோலினைட்டும் உள்ளன.

மனித செயல்பாடுகளலும், பல வகையான இயற்கை இடர்பாடுகள் மற்றும் செயல்களாலும், நம் நாட்டின் நில அமைப்பு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. நிலத்தின் மேல்மண் அகற்றுதல், காடுகள் அழிப்பு, மற்றும் தடைசெய்யப்பட்ட சில விவசாய முறைகள் அனைத்தும் சேர்ந்து, நீண்ட காலமாய் நம்மை மோசமான சூழ்நிலையில் வாழும்படியான கட்டாயாத்துக்கு உள்ளாக்குகின்றன. நிலவமைப்பின் சூழச் சிதைவு / அழிவுதான், நம் நாட்டை மிகுந்த அழுத்தமான இறுக்கமான சூழலில் வாழ வைக்கின்றன. இதனால், நம்மை நீடித்த வளர்ச்சி நோக்கி நினைத்து, திட்டமிட்டு நீடித்து வாழ செயல்படும் படி தூண்டுகிறது. நமது எதிர்கால சந்ததியினர் இயற்கை செயல்பாடுகளில் ஏற்பட்ட குறிக்கீடுகளினால், நமது வாழிடம் வாழத் தகுந்ததாக இல்லாமல் போவதற்கும், எதிர்கால தலைமுறையில் நல்வாழ்வுக்கும் எண்ணி ஒரு இக்கட்டான சூழலில் இருக்கிறோம். எனவே நம் நிலத்தின் கடந்த கால மற்றும் இன்றைய அடிப்படைத் தகவல்கள், எதிர்கால அமைப்பை மாற்றிக் கணிக்க வழி காட்டுகின்றன. இதுவே நீடித்த வளர்ச்சியை நோக்கிய பயணத்தின் வளமையான படிக்கட்டுகள்ளாகும்..!

எழுதியவர் : பேரா.சோ. மோகனா, கல்வி ஒருங்கிணைப்பாளர், தே.கு.அ.மாநாடு-2010.