திட்டம் 2:
நிலப்பயன்பாடு வகை ஆய்வு
இந்தியாவில், நிலப்பகுதி பரப்பு 3,287,263 ச.கி.மீ உள்ளது. இந்தியாவில், விதம்விதமான நிலவகைகள் உள்ளன; விவசாய நிலம், தரிசு நிலம், ரியல் எஸ்டேட் நிலம், வணிக நிலம், பண்ணை நிலம் மற்றும் வசிப்பிட நிலம். இந்திய மக்கள், முக்கியமான விவசாய செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதிலுள்ள மொத்த நிலத்தில், விவசாய நிலம் 54.7%... விவசாய நிலங்கள், மெட்ரோ நகரங்களை சுற்றி, அமைந்துள்ளன. பொதுவாக விவசாய நிலங்கள் இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் பரவிக்கிடக்கிறன. விவசாய வளங்கள், மிக முக்கிய புதுப்பிக்கப்படும் நிலங்களாகவும் மற்றும் அபார இயற்கை வளங்களாகவும் கருதப்படுகின்றன. பலவகை கலப்பு விஷயங்கள், நம்பிக்கையான மற்றும் சரியான நேரத்தில் அப்பகுதி நிலப்பயன்பாட்டு வகை பற்றிய தகவல்களைத் தருவித்தன் மூலம், அதனை அதிக பட்சம் பயன்படுத்துதல், அப்பகுதியின் வளர்ச்சி போன்றவற்றில் உணவுப் பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய நிலப்பயன்பாடு மற்றும் சரியான பயன்பாட்டு வகை, நிலப்பயன்பாட்டின் வரலாறு போன்றவற்றில் இருக்கக் கூடிய அனுபவ அறிவின் மூலம், தகுந்த நிலத்தை திட்டத்துடன் விவசாயிகள் பயன்படுத்த உதவும்.
குறிக்கோள் :
1. திட்டப் பகுதிக்கான நிலப்பயன்பாட்டு வகை / அமைப்பை அறிதல்.
2. பலவகையான நிலவகைகளில் பயிர் செய்யும் வகை, பயிர் வகையின் அடர்த்தியை அறிதல்.
3. உள்ளூர் பகுதிக்கான மாற்று நில பயன்பாட்டு திட்டம் தயாரிப்பதற்கான ஆலோசனை.
தேவையான பொருட்கள் :
1. கண்டுபிடிக்கும் பதிவுக்கான, புள்ளிவிபரத்தாள்
2. மாவட்ட, துணைப்பிரிவு, பிளாக், பஞ்சாயத்து விவசாய அலுவலகம், அரசு சார்பற்ற அமைப்புகள் மற்றும் விவசாயிகளிடமிருந்து முதன்மை மற்றும் இரண்டாம் புள்ளிவிபர தகவல்கள் சேகரித்தல்.
3. அப்பகுதியின் பரந்த, பெரிய அளவு அடிப்படை வரைபடம்.
செய்முறை :
அ. கீழே குறிப்பிடப்பட்டுள்ள அளவீடுகளில், கடந்த சில ஆண்டுகளீல் கிடைத்த முதன்மை மற்றும் இரண்டாம் நிலை ஆதாரங்களிலிருந்து புள்ளிவிபரம் சேகரித்தல்.
1. ஆராய்வுக்கு தேவையான மொத்தபரப்பு.
2. காடுகள்
3. விவசாயமற்ற பயன்பாட்டுக்கான பகுதி
4. தரிசான மற்றும் விவசாயம் செய்யப்படாத பகுதிகள்
5. விவசாயம் செய்யப்படும் மொத்தப் பகுதி
6. ஒரு முறைக்கு மேல் விதைப்பு செய்யப்பட்ட பகுதி
7. மொத்தம் பயிரிடப்பட்ட பகுதி
8 பயிர் செய்யப்படும் பகுதியின் அடர்வு(சதவீதம்)
9. பாசனப் பகுதி... முடிந்தால்
10. பாசனம் செய்யப்படாத பகுதி
11. பாசனம் மற்றும் விவசாயம் செய்யப்படும் பகுதியின் சதவீதம்
12. தானியம், பருப்புகள், எண்ணெய்வித்துக்கள், நார்சத்து பயிர்கள், அலங்காரப் பயிர்வகைகள் மற்றும் பிற பயிர்கள் செய்யும் பகுதி
13. பலவகை பயிர்கள், எவ்வளவு எவ்வளவு என்று பிரித்து பகுதியை பிரித்தல்.
ஆ. கடந்த 10 ஆண்டுகளிலுள்ள நில பயன்பாட்டையும், தற்போது உள்ளதிற்கும் உள்ள வேறுபாடுகளை ஆராய்க.
இ. விவசாயிகளின் தேவையை அடிப்படையாகக் கொண்டு அறியப்பட்ட நில பயன்பாட்டிற்கான ஆலோசனையை வழங்குக.
ஈ. காலப்போக்கில்(வருடங்களை கணக்கில் கொண்டு) அளவீடுகள் மாற்றம் தொடர்பாய், வரைபட பிரிதிநிதிகளை/முன்மாதிரிகளைத்ட் தயார் செய்.
தொடர்புள்ளவை :
சீதோஷண நிலை மாற்றம், நிலச் சிதைவு, மனித தலையீடுகள் போன்ற உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளால், கடந்த காலங்களில் நடைபெற்ற நில பயன்பாட்டு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், எதிர்காலத்தில் திட்டமிடுபவர்கள், நிர்வாகிகள் மற்றும் பயனீட்டாளர். இ.நி, மாறும் காட்சி / அமைப்புக்கேற்ப, தாக்குப் பிடிப்பதை அறிய ஆலோசனை வழங்கும் தன்மையுடையது என்பதை மாணவர்கள் ஒரு எதிர்கால பார்வையோடு அறிய முடியும்.
முக்கியமான வார்த்தைகள்:
பயிர் வகைபாடு / அமைப்பு - ஒரு வருடத்தில் குறிப்பிட்ட பகுதியில் மாற்று முறை
/ மற்றும் தரிசு அமைதல்.
பயிர் அடர்வு - அப்பகுதியில் பயிரிடப்படும் பயிர் அழைக்கும், விவசாயம் செய்ய
அளவுக்கும் உள்ளேயுள்ள விகிதம். இதனை 100% அறிய 100-ஆல் பெருக்கி சதவீதம் அறியவும். கீழேயுள்ள சூத்திரப்படி இதனைக்
கணக்கிட்டு தெரிந்து கொள்ளலாம்.
பயிர் அடர்வு = மொத்த பயிர் பகுதி / சரியாக பயிர் வளர்ந்த பகுதி X 100
சரியாக பயிர் வளர்ந்த பகுதி - விவசாயம் செய்த பகுதி
மொத்தம் பயிரிடப்பட்ட பகுதி - எவ்வளவு பயிருக்காக விதைத்திருக்கிறதோ அத்துடன் எவ்வளவு விதைதிருக்கிறது என்பதை அறிவது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக