First Published : 12 Nov 2011 12:22:23 PM IST
காரைக்குடி, நவ. 11: காரைக்குடியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செலக்ட் அரிமா சங்கம் ஆகியன சார்பில் மகரிஷி வித்யாமந்திர் பள்ளியில் 19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது.
நன்றி: தினமணி
விழாவுக்கு, அரிமா சங்கத் தலைவர் அரு. கிருஷ்ணன் தலைமை வகித்தார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க காரைக்குடி கிளைத் தலைவர் என். முருகன் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் சி. சிவக்குமார் அறிமுக உரையாற்றினார்.அரிமா சங்க முன்னாள் ஆளுநர் விஆர். சின்ன அருணாசலம் சிறப்புரையாற்றினார்.
மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலிருந்தும் மாணவர்கள் கலந்துகொண்டு 60 தலைப்புகளில் ஆராய்ச் சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இதில் தமிழ்வழிப் பள்ளிகளான காரைக்குடி எஸ்எம்எஸ்வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, படமாத்தூர் சக்தி உயர்நிலைப் பள்ளி, பீர்க்கலைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி, சருகணி புனித பால் உயர்நிலைப் பள்ளி, ஆங்கில வழிப் பள்ளிகளான திருப்பத்தூர் பாபா அமிர் பாதுஷா, கல்லல் சாந்திராணி மெட்ரிக் பள்ளி, புதுவயல் ஸ்ரீ கலைமகள் வித்யாலயா ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் கட்டுரைகள் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்குத் தேர்வு செய்யப்பட்டன. இவர்கள் நவ. 26-ந் தேதி ஈரோட்டில் நடைபெறும் மாநிலப் போட்டிக்கும் தேர்வு செய்யப்பட்டனர். பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டத் தலைவர் டாக்டர் கே. ரகுபதி, மாவட்டச் செயலாளர் பி. சாஸ்தா சுந்தரம், டாக்டர் சையது முகமது, பேராசிரியர் என். ஜானகிராமன் மற்றும் பலர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.
முடிவில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டக் குழு உறுப்பினர் ஜீவானந்தம் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக