தே.கு.அ.மாநாடு 2010

தே.கு.அ.மாநாடு 2010
NCSC 2010 - Tamil Nadu

திங்கள், 14 நவம்பர், 2011

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: காரங்காடு பள்ளி தேர்வு

First Published : 14 Nov 2011 01:18:30 PM IST


தக்கலை, நவ. 13:÷ஈரோட்டில் மாநில அளவில் நடைபெறும் 19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க காரங்காடு புனித அலோசியஸ் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வாகினர். குழிவிளை பகுதியில் முந்திரி மரம் குறைதலும், மண்வளம் பாதுகாத்தலும், அதை மேம்படுத்துதலும் என்ற தலைப்பில் பள்ளித் தலைமைஆசிரியர் எம்.ஒய்.என். ஆன்டனி அம்மாள் அனுமதியுடன் ஆசிரியர் ம. லீமாரோஸ் வழிகாட்டுதலில் 9-ம் வகுப்பு மாணவர்கள் லோகேஷ், அஸ்வின் செனட், அஞ்சுமதி, ஸ்டெர்லின், ஸ்னோ, ஜெனிஷா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் இம் மாணவர்கள் சமர்ப்பித்த கட்டுரையை ஆய்வுக்குழு தேர்வு செய்தது. இதையடுத்து, இப் பள்ளி மாணவர்கள் ஈரோடு சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் நவம்பர் 25-ல் நடைபெறும் மாநில அளவிலான 19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தேர்வாகினர். தேர்வுபெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் அருள்பணி ஜெயப்பிரகாஷ், மேலாளர் அந்தோனிமுத்து மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

நன்றி; தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக