தே.கு.அ.மாநாடு 2010

தே.கு.அ.மாநாடு 2010
NCSC 2010 - Tamil Nadu

திங்கள், 14 நவம்பர், 2011

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

பதிவு செய்த நாள் : நவம்பர் 10,2011,22:55 IST

காரைக்குடி : செலக்ட் லயன்ஸ் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து காரைக்குடியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தியது. லயன்ஸ் சங்க தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் முருகன் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணை செயலாளர் சிவக்குமார் அறிமுகவுரையாற்றினார். 35 பள்ளிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், 75 பேர் நிலவளம் குறித்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சிறந்த ஆய்வு கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ரகுபதி, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி தாளாளர் சேதுராமன், ஆசிரியர் சுந்தரராமன், மாவட்ட செயலாளர் சாஸ்தாசுந்தரம் பங்கேற்றனர்.

நன்றி: தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக