தே.கு.அ.மாநாடு 2010

தே.கு.அ.மாநாடு 2010
NCSC 2010 - Tamil Nadu

திங்கள், 14 நவம்பர், 2011

குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு: மாணவர்களுக்கு பரிசளிப்பு

First Published : 13 Nov 2011 12:58:37 PM IST


புதுக்கோட்டை, நவ. 12: புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் கிங்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற 19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாட்டில் பங்கேற்று கட்டுரை வாசித்த மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

மாநாட்டில், கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையார்கோவில், சுந்தப்பட்டி, ராஜாகுளத்தூர், மேலப்பட்டி, குப்பையன்பட்டி, மோகனூர், மஞ்சப்பேட்டை, வெள்ளாளவிடுதி ஆகிய ஊராட்சிகளில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேல்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதில், பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளை வாசித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட மாநாட்டுக்கு, கிங்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் எஸ். ஸ்ரீதரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் எல். பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அறிவியல் பிரசார அமைப்பாளர் எம். முத்துக்குமார், கிங்டவுன் ரோட்டரி சங்க செயலர் எஸ். கணேசன், மாநில செயற் குழு உறுப்பினர் சி. கோவிந்தசாமி, மாவட்டச் செயலர் க. ஜெயபாலன், துணைத் தலைவர்கள் சி. சேதுராமன், அ. மணவாளன், பொருளர் எம். வீரமுத்து, ஏ. மணிகண்டன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

முன்னதாக, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சை. மஸ்தான்பக்ருதீன் வரவேற்றார். நகரச்செயலர் எம். பழனிச்சாமி நன்றி கூறினார்.
மூலம் : தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக