தே.கு.அ.மாநாடு 2010

தே.கு.அ.மாநாடு 2010
NCSC 2010 - Tamil Nadu

செவ்வாய், 22 நவம்பர், 2011

விஞ்ஞானிகள் மாநாடு: 10 பள்ளிகள் தேர்வு


பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2011,00:40 IST

மதுரை : ஈரோடு சத்தியமங்கலத்தில் நவ.,24 முதல் 26ம் தேதி வரை நடக்கும் மாநில இளம் விஞ்ஞானிகள் மாநாட்டிற்கு, மதுரையைச் சேர்ந்த 10 பள்ளிகளின் ஆய்வு கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இதற்கு முன்னோட்டமாக, மதுரையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடந்த மாவட்ட அளவிலான மாநாட்டில், 00 இளம் விஞ்ஞானிகள் பங்கேற்றனர். மாவட்டத் தலைவர் தினகரன் தலைமை வகித்தார். செயலாளர் கடசாரி வரவேற்றார். என்.சி.சி., மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், ஆய்வுகள் பற்றி விளக்கினார். பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல் நிர்வாகி வாசுதேவன், என்.சி.எஸ்.சி., மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் மோகனா பங்கேற்றனர். மண்வளத்தை மேம்படுத்தும் உரம் குறித்து பல்கலை நடுநிலைப்பள்ளி, நிலைத்தகு மண் வளம் - மகாத்மா மெட்ரிக் பள்ளி, வளமான மண்ணிற்கு அமிர்த நீர் - பாப்புநாயக்கன்பட்டி எஸ்.கே.வி. பள்ளி, நிலவளமேம்பாட்டில் உயிரி உரங்கள் - செயின்ட் ஜோசப் பள்ளி, மண்வளத்தை பராமரிப்பதில் மனிதனின் பங்கு - பொதும்பு துளிர் இல்லம், பள்ளி வளாகத்தில் மரத்தில் மூடாக்குதல் முறை- ஆனையூர் துளிர் இல்லம், பயனற்ற எலக்ட்ரானிக் பொருட்களினால் மண்ணில் ஏற்படும் தாக்கம் - எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி, மண்வளத்தை இயற்கை முறையில் பாதுகாத்தல் - எம்.ஏ.வி.எம்.எம். மெட்ரிக் பள்ளி, குவாரியினால் ஏற்படும் விவசாய பாதிப்புகள் - பராசக்தி பள்ளி ஆகியவற்றின் ஆய்வுகள், மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன

நன்றி: தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக