தே.கு.அ.மாநாடு 2010

தே.கு.அ.மாநாடு 2010
NCSC 2010 - Tamil Nadu

வெள்ளி, 31 டிசம்பர், 2010

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கருணாநிதி தொடங்கிவைத்தார்

சென்னை, டிச 27-
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வும், மனப்பான்மையும் உருவாக்குவதற்காக சென்னை பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களால் 1981-ம் ஆண்டு தன்னார்வ இயக்கமாக உருவாக்கப்பட்டது.
தமிழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 1991-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட அறிவொளி இயக்கத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மிக முக்கிய பங்காற்றியது.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறையின் அங்கமான தேசிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கூட்டமைப்பின் உதவியுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 1993-ம் ஆண்டு முதல் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டினை தமிழகத்தில் நடத்தி வருகிறது.
இந்தியா முழுவதிலும் உள்ள 10 முதல் 17 வயதுக்குட் பட்ட குழந்தைகள் தங்கள் அறிவியல் மனப்பான்மை யினையும், அறிவையும் பயன்படுத்தி தங்கள் கனவுகளை நனவாக்க ஒருங் கிணைந்த வாய்ப்பினை தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு உருவாக்கித் தருகிறது.
மேலும் பள்ளி செல்லும் குழந்தைகள் மட்டுமல்லாது இடைநின்ற குழந்தைகளும், பள்ளி சாரா குழந்தைகளும் பங்கேற்கும் வாய்ப்பினை இது அளிக்கிறது. இது எதிர்கால இந்தியாவைப் பற்றி ஒரு கனவினை குழந்தைகளிடையே உருவாக்குகிறது.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஒருங்கிணைந்த கருபொருளை மையமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கூட்டமைப்புடன் இணைந்து 18-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டினை நிலவளம் வளமைக்காக பயன்படுத்துவோம், வரும் தலைமுறைக்காக பாது காப்போம் எனும் தலைப்பில் இந்த ஆண்டு சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இன்று முதல் 31-ந்தேதி வரை நடத்துகிறது.
இம்மாநாட்டில் மாநில அளவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 700 குழந்தை விஞ்ஞானிகள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களும், தெற்காசிய நாடுகளை சேர்ந்த 40 மாணவர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த 5 நாள் அறிவியல் திருவிழாவை முதல்- அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இந்தியா முழுவதிலுமிருந்து பல முக்கிய அறிவியல் அறிஞர்கள் பங்கேற்றுள்ளனர். 31-ந்தேதி நடைபெறுகின்ற மாநாட்டு நிறைவு விழாவில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
நன்றி: மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக