எழுமலை : தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்ட எழுமலை பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளர் காமேஷ் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க எழுமலை கிளைத் தலைவர் சடையாண்டி வரவேற்றார். பாரதியார் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி நிர்வாகிகள் பொன்.கருணாநிதி, பாண்டியன், சுதாகர். நல்.தங்கராஜ், சந்தனம், விவோகானந்த நடுநிலைப் பள்ளி செயலாளர் சிவநேசன் துரைராஜ், ஆசிரியர்கள் செந்தில்குமார், சிவக்குமார், உதவித் தலைமையாசிரியர் ஜெயக்கொடி ஆகியோர் பாராட்டிப் பேசினர். அறிவியல் மாநாட்டில் மாநில அளவில் கலந்து கொண்ட சிவரஞ்சனி குழுவினரை அறிவியல் இயக்க செயலாளர் அழகுமணி அறிமுகம் செய்து வைத்தார். ஆசிரியர் செல்வராஜ் நன்றி கூறினார்.
நன்றி: தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக