குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு இன்று தொடக்கம்
பதிவு செய்த நாள் 12/3/2010 1:10:32 AM

கோவை : ஆண்டுதோறும் நடத்தப்படும் மாநில குழந்தைகள் அறிவியல் மாநாடு மற்றும் கண்காட்சி இந்த ஆண்டு கோவை அரசூரில் உள்ள கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் இன்று முதல் 5ம் தேதி வரை நடக்கிறது. மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை, தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழு இணைந்து நடத்தும் மாநாட்டை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைக்கிறது.
மாநாட்டை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். கலெக்டர் உமாநாத், மேயர் வெங்கடாசலம் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில், நில வளத்தை, வளமைக்காக பயன்படுத்துவோம், வரும் தலைமுறைக்காக பாதுகாப்போம் என்ற தலைப்பில் பேசுகின்றனர். மாணவர்களின் 2,000 ஆய்வுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 160 முதல் 200 ஆய்வு கட்டுரைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும்.
நன்றி : தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக