20th NCSC - 2012. ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு (NATIONAL CHILDREN'S SCIENCE CONGRESS 2010 & 2012) டிசம்பர் 27 முதல் 31 வரை தேசிய அளவில் இந்திய அரசின் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரிவர்த்தனை குழுமத்தினால் (NCSTC-Network) நடத்தப்படுகின்றது.இந்தியா முழுவதிலும் உள்ள 10 முதல் 17 வயது வரை உள்ள மாணவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். இம்மாநாட்டினை தமிழ்நாட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ( TNSF) ஒருங்கிணைக்கிறது. 20வது அகில இந்தியமாநாடு ---ல் நடைபெறும்.
செவ்வாய், 10 ஜூலை, 2012
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு
25 Nov 2011 10:23,
(25 Nov) சத்தியமங்கலம், நவ. 24: சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுரியில் வியாழக்கிழமை நடந்த தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்றன. ÷மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய 19-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு கல்லூரி இயக்குநர் எஸ்.கே.சுந்தரராமன் முன்னிலை வகித்தார் ÷தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் என்.மணி தலைமை வகித்து பேசியது: ÷பள்ளி மற்றும் பள்ளிசாரா குழந்தைகளின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்துவதற்காக இம்மாநாடு நடைபெறுகிறது. இதில் 10 முதல் 17 வயது வரையுள்ள குழந்தைகள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் நிலவளத்தை மேம்படுத்துவோம், வரும் தலைமுறைக்காவும் பாதுகாப்போம் என்ற தலைப்பில் 193 குறுகிய கால ஆய்வுகளை சமர்ப்பிக்கின்றனர். மாநாட்டில் தேர்வு பெற்ற ஆய்வேடுகள் மாநில மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டு தேர்வு செய்யப்படும். அவற்றில் சிறந்த 30 ஆய்வுகள் தேசிய மாநாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தான் சூரிய கிரகண நிகழ்வை சூரிய கண்ணாடி மூலம் பார்க்க உதவியது என்றார். ÷நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம், அறிவியல் இயக்க பொதுச் செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன் நாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.மோகனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நன்றி: தினமணி
லேபிள்கள்:
News Reports பத்திரிக்கைச் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக