தே.கு.அ.மாநாடு 2010

தே.கு.அ.மாநாடு 2010
NCSC 2010 - Tamil Nadu

செவ்வாய், 22 நவம்பர், 2011

17-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தொடக்கம்

திருச்சி


First Published : 08 Nov 2009 02:38:52 AM IST


திருவெறும்பூர், நவ. 7: திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகேயுள்ள தேசிய தொழில் நுட்ப கழகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 17-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கௌரவத் தலைவரும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மகளிரியல் துறை இயக்குநருமான முனைவர் ந. மணிமேகலை தலைமை வகித்தார். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாநில செயலாக்க குழு க. சுரேஷ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க பொருளாளர் எம். கவனகன் அறிமுக உரையாற்றினார்.

மாநாட்டை தொடக்கி வைத்து, தேசிய தொழில்நுட்ப கழக இயக்குநர் பேராசிரியர் மா. சிதம்பரம் பேசியது: மாணவர்களின் தனி திறமைகளை வெளிக்கொணரவே இதுபோன்ற மாநாடுகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிவதில் முனைப்பு காட்ட வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வரவேண்டும் என்றார் அவர்.

தேசிய தொழில் நுட்ப கழகத்தின் துறைகளின் தலைவர் பெ. ஜெயபாலன் வாழ்த்தி பேசினார். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெ.மா. சபரிகுமார் நடுவர்களை அறிமுகப்படுத்தி பேசினார். முன்னதாக, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் சு. நடராசன் வரவேற்றார். நிறைவில், மாவட்டத் தலைவர் செ. திருமுருகன் நன்றி கூறினார்.

தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையும் இந்த மாநாடு நடைபெறுகிறது. மாவட்டத்தின் 40 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
நன்றி: தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக