தினமணிSaturday,14 August 2010 நாகர்கோவில், ஆக. 11: தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தொடர்பான வழிகாட்டி ஆசிரியர்கள் பயிலரங்கு மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் எஸ். டான் தர்மராஜ் தொடங்கி வைத்தார். அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் எம். சசிகுமார் அறிமுக உரையாற்றினார். மாவட்ட கெüரவத் தலைவர் ஆர். ஷெலின்மேரி தலைமை வகித்தார். பேராசிரியர் ஏ. விஜயன், ஐசக் சோபனராஜ், அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலர் ஜா. ஜினோபாய், ஆ. டோமினிக் ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர் எஸ். கணபதி, மாநில கருத்தாளர் எஸ். தினகரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குழும உதவியுடன் குழந்தைகளின் ஆய்வு மனோபாவத்தை வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது. இம்மாநாட்டில் நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளி மற்றும் பள்ளி சாராத குழந்தைகளும் பங்கேற்கலாம். இவ்வாண்டு நிலவளம் வளமைக்காக பயன்படுத்துவோம், வருங்காலத்துக்கும் பாதுகாப்போம் என்ற தலைப்பில் மாணவர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஒரு வழிகாட்டி ஆசிரியர் உதவியுடன் 3 மாதம் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி மாவட்ட, மாநில, தேசிய அளவில் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளையும், இளம் விஞ்ஞானிகளையும் தேர்வு செய்யவுள்ளனர். பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குழும சான்றிதழ்கள் வழங்கப்படும் என பயிலரங்கில் தெரிவிக்கப்பட்டது. தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மற்றும் பள்ளி பொறுப்பாளர்கள், செயலர், 16-22 எப், களியங்காடு, சுங்கான்கடை என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்- 9443730961, 04652-220660. |
20th NCSC - 2012. ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு (NATIONAL CHILDREN'S SCIENCE CONGRESS 2010 & 2012) டிசம்பர் 27 முதல் 31 வரை தேசிய அளவில் இந்திய அரசின் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரிவர்த்தனை குழுமத்தினால் (NCSTC-Network) நடத்தப்படுகின்றது.இந்தியா முழுவதிலும் உள்ள 10 முதல் 17 வயது வரை உள்ள மாணவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். இம்மாநாட்டினை தமிழ்நாட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ( TNSF) ஒருங்கிணைக்கிறது. 20வது அகில இந்தியமாநாடு ---ல் நடைபெறும்.
ஞாயிறு, 5 செப்டம்பர், 2010
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆசிரியர்கள் பயிலரங்கம்
லேபிள்கள்:
News Reports பத்திரிக்கைச் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக