தே.கு.அ.மாநாடு 2010

தே.கு.அ.மாநாடு 2010
NCSC 2010 - Tamil Nadu

புதன், 15 செப்டம்பர், 2010

நிலமும் மானுடவியல் செயல்பாடுகளும்

நிலமும் மானுடவியல் செயல்பாடுகளும்

-முனைவர். ப. இளங்கோ

"மானிட தேவைக்கு வேண்டியவற்றை வேண்டிய அளவு

உலகில் இயற்கை வழங்கியுள்ளது. ஆனால் மானுட பேராசைக்கல்ல"

- மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.


மானுடவியல் செயல்பாடுகள் என்பது மனித செயல்பாடுகளின் விளைவால் தோன்றியப் பொருட்களும், நடைமுறை செயல்பாடுகளும் ஆகும். அனைத்து வேளாண் செயல்பாடுகளும் நேரடியாகவோ, மறைமுகமாகமோ நிலத்தை எவ்வாறு கையாளுகிறோம் என்பதனைச் சார்ந்திருப்பதால் மனித மற்றும் வளர்ப்பு விலங்கினங்களின் நலன் என்பதன் அடிப்படையில் பெரிதும் நிலத்தின் வளத்தையே சார்ந்ததாகும். உற்பத்தி, இலாபம் மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதில் நில மேலாண்மை என்பது ஓர் மறைமுக சவாலாக உள்ளது. நிலத்தின் தன்மையை இயற்பியல், வேதியியல், உயிரியல் விதிமுறைகள் வாயிலாக மதிப்பீடு செய்யலாம். ஒன்றோடொன்று தொடர்புடைய ஒன்றோ அதற்கு மேற்பட்ட சாதகமற்ற தன்மைகள் மண்ணில் நீண்டகாலம் நீடித்திருப்பது வேளாண்மையைத் தொடர இயலாத நிலைக்கு தள்ளிவிடுகிறது. மண்ணின் நுண்திறனில் மனித செயல்பாடுகள் ஏற்படுத்தும் பெரும் பாதிப்புகளை இக்கட்டுரை விளக்குகிறது.


மண்வளம் குறைதல்

மண்ணின் செயல்பாடுகள் குறைதல் அல்லது இழத்தல் என்பது மண்வளம் குறைதல் எனப்படும். இந்நிலை சமீபகாலமாக மிகவும் கவலையுடன் செயல்பட வேண்டிய ஒன்றாக உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. மேலும் வேளாண் உற்பத்திக்கும் தரை வாழிட சூழ்நிலை மண்டலத்திற்கும், பெரும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது. மேல் மண் இழப்பு, இயற்பியல் மாற்றகாகிய நில அமைப்பு சேதமடைதல் வேதி மாற்றங்களாகிய உப்புத் தன்மை, அமிலத்தன்மை, சோடியம் உள்ளிட்ட வெடி உப்புக்களின் மூலக்கூறுகள், கடின உலோகங்களின் படிவு, ஒட்டு மொத்த மண்ணின் செழுமையும்

ற்பத்தியும் குறைதல் ஆகிய அனைத்தும் மண்வளம் குறைதல் எனப்படுகிறது.

கிட்டத்தட்ட 2 பில்லியன் ஹெக்டேர் நிலத்தின் வளம் குறைக்கப்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது சுமார் 22% மொத்த பயிர் நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், காடுகள், மரப்பயிர்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். மண்வளம் குறைதலில் தட்பவெப்ப நிலையும், புவித் தோற்ற மூலங்களின் செயல்பாடுகளும் பெரிய அளவில் நிர்ணயிக்கும் காரணிகளாக இருப்பதும், உள்ளூர் சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளும் போது மனித செயல்பாட்டுக் காரணிகளின் பாதிப்பைத் தவிர்த்து விட இயலாது. மனித செயல்பாடுகளில் வேளாண்மை, தொழிற்மயமாக்கல், நகரமயமாக்கல் போன்றவற்றின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

நிலத்தை உழுதல் போன்ற வேளாண் செயல்பாடுகள் நிலத்தின் அமைப்பைச் சிதைப்பதுடன் கனிமப் பொருட்களை வெறுமையாக்கி மண் அரிமானத்தையும், நுண்ணூட்டச் சத்துக்களின் இழப்பையும் ஊக்கப்படுத்துகிறது. இருப்பினும் உழுதல் மண்ணில் காற்றோட்டத்தை அதிகரித்தும், வெப்பத்தை குறைத்தும் விதை முளைத்தலுக்கும் நுண்ணுயிரிகள் செயல்பாட்டிற்க்கும் மண்ணை ஏற்றதாக்குகிறது. அதிக நீர்பாசனமும், தரம் குறைந்த பாசன நீரும் நிலத்தில் நீர்த் தேங்குதல், உப்புத் தன்மையை அதிகரித்தல் போன்ற பிரச்சனைகளைத் தோற்றுவிக்கிறது. அதாவது மேற்கொள்ளப்பட்ட நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற வேதி உரங்களின் பயன்பாடும், குறைந்த நிலப்பரப்பில் இருப்பு செய்யப்பட்ட அதிகளவு வளர்ப்பு உயிரனங்களும் அவற்றின் கழிவுகளும் வேளாண் நிலத்தின் வேதி தரக்குறைபாடுகள் ஏற்பட்டதோடு மட்டுமின்றி, வழிந்தோடும் நீரினால் ஆறு உள்ளிட்ட நிலமேற் நீரோட்டத்தையும் அதிக அளவு நைட்ரஜன் நைட்ரேட்டாக மாறி நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகிறது. மற்ற வேதி வேளாண் பொருட்களான பூச்சிக் கொல்லிகள், களைக் கொல்லிகள் போன்றவைகளும் நிலத்தின் மேல் மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றன.

தொழிற்சாலைக் கழிவுகள் தனது பெரும் பங்காக நில வளத்தின் வேதித் தன்மை இழப்பை ஏற்படுத்துகிறது. முறையற்ற கழிவுகள் மேலாண்மை சுற்றுப்புறத்தில் கடின உலோகப் படிவுகளை நிலம், நீர்நிலைகள், நிலத்தடி நீர் போன்றவற்றில் ஏற்படுத்துகிறது. அதிவேக நகரமாயமாக்கலும் கூட நில வள இழப்பை அதிகப்படுத்துகிறது. தீவிரமான சுரங்கச் செயல்பாடுகள், காடுகளை அழித்தல், முறையற்ற நில மேலாண்மை, ஆராயது மேற் கொள்ளப்படும் உழுதல் போன்ற செயல்பாடுகள் போன்றவைகள் காற்று மற்றும் நீர் செயல்பாடுகளினால் ஏற்படும் கடுமையான மேற் மண் அரிப்பை அதிகரிக்கின்றன. இவை மட்டுமின்றி கணிசமான அளவு மேற்மண் இழப்பு செங்கல் மற்றும் மட்பாண்டத் தயாரிப்புத் தொழில் மூலம் ஏற்பட்டு பல பாரம்பரிய இன மக்களை பாதித்துள்ளது. இதில் முக்கியமாக நாம் அறிய வேண்டிய ஒன்று என்னவென்றால் 2.5 செ.மீ அளவு இழந்த மண்ணை ஈடுசெய்ய பல நூற்றாண்டுகளாகும்.


பல்லுயிர்ப் பெருக்க இழப்பு

பல்லுயிர்ப் பெருக்கம் என்பது ஒரு நிலப்பகுதியின் மொத்த மரபணுக்கள், இனங்கள் மற்றும் சுற்றுச் சூழல் மண்டலத்தைக் குறிப்பதாகும். இந்தியா உலக நிலப்பரப்பில் 2.4% பெற்றுள்ளது. ஆனால் 8% இனங்களை புவியின் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும், இமயமலையும், இந்தியா-பர்மாவிற்கு இடைப்பட்ட பகுதிகளும் உலகளவில் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான 34 முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். நிலப் பயன்பாடு, நிலப் போர்வை மாற்றம் போன்றவற்றால் பல்லுயிர்ப் பெருக்க இழப்பு என்பது பொதுவான ஒன்றாகும். எப்போது ஓர் இயற்கையான காடு விளைநிலங்களாக மாற்றப்படுகிறதோ, அப்போதே மரங்கள், தாவரங்கள், விலங்கினங்கள், நுண்ணுயிரிகள் போன்றவைகள் முழுமையாக அழிந்துவிடுகின்றன. அதனைப் போன்று புல்வெளிகளிலும், நிலத் தொடர்களிலும், அளவற்ற மேய்ச்சல் பல்லுயிர்ப் பெருக்கத்தை சிதைத்துவிடுகிறது. இவை மட்டுமின்றி வணிக நோக்கில் அமைந்த தீவிர சாகுபடியும், மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களும் வேளாண் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளது. சுற்றுச் சூழலுக்கு இணக்கமான தொழில் நுட்பமாகக் கருதப்படும் இயற்கை எரிசக்தி தொழில் நுட்பமும் கூட, ஆராயாமல் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளினால் ஏற்படும் நிலப் பயன்பாட்டு முறை மாற்றங்களினால், பல்லுயிர்ப் பெருக்கம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தி அதிகரித்தல்

நிலவளங்களை தவறாகப் பயன்படுத்துதல் நமக்கு உணர்த்தும் முகம் காட்டும் கண்ணாடியே வளிமண்டலமாகும். விலைமதிப்பற்ற நிலவளங்க்ளில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு மனித செயல்பாடும் வளிமண்டலத்தில் ஓர் பதிவை ஏற்படுத்துகின்றன. கரி அமில வாயுவின் அடர்த்தி 31% ம், மீத்தேனின் அடர்த்தி 15% ம், நைட்ரஸ் ஆக்ஸைடின் அடர்த்தி 17% ம் 1750 லிருந்து அதிகரித்து வருவது உலகளவில் சுற்றுச்சூழல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொழில் புரட்சி, நகரமாயமாக்கல், பெருகி வரும் வளர்ப்பு விலங்குகள் பண்ணைகள், நவீன வேளாண்மை போன்றவற்றால் அதிகரித்துவரும் நிலப் பயன்பாட்டு மாற்றங்களோடு தற்செயலாக ஒத்துப்போகிறது. இது பருவ மாற்றங்களுடனும், அதனால் விளையும் பிரச்சனைகளுடனும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பு கொண்டுள்ளது. வளிமண்டலத்தில் பெருகி வரும் பசுமை இல்ல அடர்த்தியில் நிலவியல் சக்திகள்

பெரும்

தாக்கத்தைச் செலுத்துவதாகக் கருதினாலும், மனித தலையீடுகள், அதிகரித்து வரும் பசுமை இல்ல வாயுக்களின் பாதகமான தாக்கத்தை பெருமளவில் சீர்படுத்த இயலும். வளிமண்டலத்திலுள்ள முக்கியமான பசுமை இல்ல வாயுக்களுக்கு நிலம், தாவரம், விலங்கு போன்றவற்றின் அமைப்பே மூல தோற்றுவாயாக அமைகிறது. இவற்றை சிறப்பாக மேலாண்மை செய்யும் ஓர் முறையை, முறையான ஆய்விற்கு உட்பட்ட நில பயன்பாட்டுத் திட்டங்களின் மூலம் மேற்கொண்டால் நிலத்தின் வளம் தாங்கும் திறனை அதிகரிக்கலாம்.

நீர் மாசடைதல்

நீர், நிலவளத்தின் ஓர் முக்கியமான ஆக்கக் கூறு ஆகும். இக்கோள்களில் மடியாமல் மனித வாழ்வு தொடர்வதற்குக் காரணமான நீரே உயிரியல் வேதியியல் முறைகளில் மாசடையும் போது நோயகளும் பேரிடர்களும் தோன்ற மூல காரணமாகிறது. மானிட செயல்பாடுகளான தொழிற்மயமாதல், நகரமயமாதல், விளைநிலம் மற்றும் வளர்ப்பு விலங்கு பண்ணைகள், அறிவுப்பூர்வமற்ற திடக்கழிவுகள் வெளியேற்றம் போன்றவகளால் தற்போது கிடைக்கும் நிலன் அளவும் தரமும் பெருமளவில் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குடிநீரில் அர்சனிக், குரோமியம் போன்ற கடின உலோகங்களின் அடர்விற்கு மண்ணியல் மற்றும் மானுடவியல் இணைந்த செயல்பாடுகளே காரணமாகிறது. மற்றொரு வகையில் பார்க்கும் போது, பண்ணை மற்றும் நகரக் கழிவுகளிலிருந்து பெருமளவில் கேடுவிளைவிக்கக் கூடிய அனங்ககப் பொருட்களும் செயற்கை கழிவிற்கும் சிறிது சிறிதாகக் கசிந்து நீர் நிலைகளையும், நிலத்தடி நீர் மட்டத்தையும் மாசுபடுத்துகின்றன. இவை தொடர்பான விளக்கமான புரிதலுக்கு நீர் மாசுறுதலும், நிலப் பயன்பாட்டு மாற்றங்களுக்குகிடையே உள்ள தொடர்பை ஆய்வு செய்வது அவசியமாகும்.

நீரியல்


நீரியல் என்பது நிலத்திலும், நிலத்தடியிலும் நீரின் இயக்க ஆற்றலைக் குறிப்பதாகும். கட்டுக்கடங்காமல் சீறிப் பெருகிவரும் குடியிருப்புப் பகுதிகளால் இயற்கையான நீர் சேமிக்கும் ஆற்றுப் பள்ளத்தாக்குகல் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. தொழில்நுட்பத் தலையீடுகள் காரணமாக கற்பனைக்கெட்டாத அளவு மண்ணியல் அமைப்பில் மாற்றங்கள் மிக வேகமாக ஏற்பட்டு வருகின்றன. பெரிய நீர்நிலைகளும் மலையுச்சிகளும் கூட அழிவிலிருந்து விட்டுவைக்கப்படவில்லை. மனிதன் ஏற்படுத்தும் திட்டங்களால் இயற்கையான ஆற்றின் போக்குகளும் மாற்றப்பட்டுள்ளன. கடுமையான மானிட செயல்பாடுகளால் மழைகாலத்தில் நிலத்தினுள் ஊடுறுவும் நீரின் அளவு பெருமளவில் பாதிக்கப்பட்டு வெள்ள நீராக ஓடி நீரிழப்பை ஏற்படுத்துகிறது. இது ந

கரங்களிலும், புறநகர்ப்பகுதிகளிலும் நீர்த் தேங்வெள்ளப் பு

றநகர்ப்பகுதிகளிலும் நீர்த் தேங்கலையும்,

இவற்றால் பல பிரச்சனைகள் முழுமையாக மானிட செயல்பாடுகளினால் ஏற்படுத்தப்படவில்லை என்றாலும் இவைகள் நிச்சயமாக மனித செயல்பாடுகளினால் ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும் ஆய்விற்குட்படுத்தப்பட்ட நிலப் பயன்பாடு, முறையான திட்டங்கள் இவற்றின் மூலம் எதிர்கால தலைமுறைக்காக நிலவளங்களைப் பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். இயற்கை ஒர் பள்ளியாகும். இப்பள்ளியில் இளைஞர்கள் தாம் பங்கு கொள்ளும் அறிவியல் செயல்பாடுகள் மூலம் தான் இயற்கையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.


ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

நெல்லையில் இளம் விஞ்ஞானி:வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி

தினமலர்,

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2010,04:04 IST

திருநெல்வேலி:நெல்லையில் நாளை (5ம் தேதி) இளம் விஞ்ஞானி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு இளம் விஞ்ஞானிகளுக்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நாளை (5ம் தேதி) காலை 10 மணிக்கு மாவட்ட அறிவியல் மையத்தில் நடக்கிறது.பல்கலைக் கழக பேராசிரியரும், அறிவியல் இயக்க தலைவருமான மாதவன் தலைமை வகிக்கிறார். மாவட்ட அறிவியல் மைய அலுவலர் சீதாராம் முன்னிலை வகிக்கிறார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் வரவேற்கிறார்.


இப்பயிற்சியை முதன்மை கல்வி அலுவலர் மேரிஜேசிரோச் துவக்கி வைக்கிறார். வான்முகில் இயக்குனர் பிரிட்டோ, பேராசிரியர் பார்வதிநாதன், மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர் கணபதி, மாநில துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் உட்பட பலர் பேசுகின்றனர்.ஒருங்கிணைப்பாளர் பீட்டர் பாஸ்கரன் நன்றி கூறுகிறார்.இளம் விஞ்ஞானிகளை உருவாக்க விரும்பும் அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும், இதில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். நில வளம் சார்பான ஆய்வும், பயிற்சியும், வழிகாட்டுதலும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் என்று மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர் கணபதி தெரிவித்தார்.ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், வான்முகில் அறக்கட்டளையினர் இணைந்து செய்துள்ளனர்.

மூலம்: தினமலர்

18 th National Children's Science Congress - 2010, The Hindu, Tiruchi

Trichi Dist. Children's Science Congress in October

Special Correspondent

TIRUCHI: The Tiruchi district conference of the 18 th National Children's Science Congress-2010 would be held here in October and the theme of the conference would be ‘Land resource use for prosperity save for posterity.' The conference would be conducted in coordination with the Tamil Nadu Science Forum (TNSF).

P.M.Sabarikumar, Tiruchi district joint secretary of the TNSF and also district coordinator of the conference, said on Sunday that the objective of the Children's Science Congress (CSC) was to make a forum available to children of the age group of 10-17 years, both from formal school system as well as from out of school, to exhibit their creativity to solve a societal problem experienced locally using science. This is a forum open to young scientists in the age group of 10 to 14 (lower age group) and 14-17 (upper age group) as on December 31 .A group of children can do the project with the help of scientists, school teachers, coordinators of school science clubs and activists of science-based voluntary organisations, he said.

Mr Sabarikumar said a two-day orientation programme was conducted recently in Tiruchi, Lalgudi, Manapparai, Musiri and Mannachanallur centres for 365 teacher guides from 340 middle, high, higher secondary, matriculation and CBSE schools from 16 blocks of the Tiruchi district who were selected to guide 500 students. The main theme ‘Land resource use for prosperity save for posterity' will have the sub-themes like know your land, , anthropogenic activity on land, sustainable and community use of land resources.

The State-level conference would be held in November and national level in December this year.The registration forms and project reports should be submitted to Mr P.M.Sabarikumar (Tiruchi district coordinator of the conference), No.3, Sakthi Nagar (West Extension), Woraiyur, Tiruchi-620003 (Mobile: 9842647053) before August 27.

source : The Hindu

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆசிரியர்கள் பயிலரங்கம்



தினமணிSaturday,14 August 2010
நாகர்கோவில், ஆக. 11:
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தொடர்பான வழிகாட்டி ஆசிரியர்கள் பயிலரங்கு மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் எஸ். டான் தர்மராஜ் தொடங்கி வைத்தார். அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் எம். சசிகுமார் அறிமுக உரையாற்றினார். மாவட்ட கெüரவத் தலைவர் ஆர். ஷெலின்மேரி தலைமை வகித்தார்.

பேராசிரியர் ஏ. விஜயன், ஐசக் சோபனராஜ், அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலர் ஜா. ஜினோபாய், ஆ. டோமினிக் ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர் எஸ். கணபதி, மாநில கருத்தாளர் எஸ். தினகரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குழும உதவியுடன் குழந்தைகளின் ஆய்வு மனோபாவத்தை வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது.

இம்மாநாட்டில் நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளி மற்றும் பள்ளி சாராத குழந்தைகளும் பங்கேற்கலாம்.

இவ்வாண்டு நிலவளம் வளமைக்காக பயன்படுத்துவோம், வருங்காலத்துக்கும் பாதுகாப்போம் என்ற தலைப்பில் மாணவர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஒரு வழிகாட்டி ஆசிரியர் உதவியுடன் 3 மாதம் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி மாவட்ட, மாநில, தேசிய அளவில் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளையும், இளம் விஞ்ஞானிகளையும் தேர்வு செய்யவுள்ளனர்.

பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குழும சான்றிதழ்கள் வழங்கப்படும் என பயிலரங்கில் தெரிவிக்கப்பட்டது.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மற்றும் பள்ளி பொறுப்பாளர்கள், செயலர், 16-22 எப், களியங்காடு, சுங்கான்கடை என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்- 9443730961, 04652-220660.

18-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

18-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு


தினமணி
First Published : 24 Jul 2010 11:41:31 AM IST

கம்பம், ஜூலை 23: தேசிய குழந்தைகளுக்கு நடத்தப்படும் அறிவியல் மாநாட்டிற்கு தலைப்புகளை அறிவியல் இயக்கம் அறிவித்துள்ளது.

குழந்தைகளிடையே இயல்பாக உள்ள ஆய்வு மனப்பான்மையையும், படைப்புத் திறனையும் வெளிகொண்டு வரும் விதமாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 1993-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை, தேசிய தகவல் மற்றும் அறிவியல் தொழில்நுட்பப் பரிமாற்றக்குழு ஆகியவற்றோடு இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இம்மாநாட்டை நடத்தி வருகிறது.

இந்த 18-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 10 முதல் 13 வயதுள்ள குழந்தைகளும், 14 முதல் 17 வயதுள்ள பள்ளிக் குழந்தைகள் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆய்வுக் கட்டுரைகளைத் தயார் செய்யலாம். இதில் இந்தாண்டு கருப்பொருளாக நிலவளம்-வளத்திற்காகப் பயன்படுத்துவோம், வருங்காலத்திற்காகவும் பாதுகாப்போம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உபதலைப்பாக, நிலத்தின் செயல்பாடுகள், நிலத்தின் தரம், நிலத்தில் மனிதனால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள், நிலவளத்தின் நிலைத்தகு பயன்பாடுகள், நிலத்தை பயன்படுத்துவது பற்றிய சமூக அறிவு ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பெயர் பதிவு ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்கும். பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே மாநாட்டில் கலந்து கொள்ள முடியும். மாவட்ட அளவில் அக்டோபரிலும், மாநில அளவில் நவம்பரில் கோவையிலும், தேசிய அளவில் டிசம்பர் மாதம் சென்னையிலும் மாநாடு நடைபெற உள்ளது.

மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். சிறந்த ஆய்வு புரிந்தவருக்கு இளம் விஞ்ஞானி விருது குடியரசு தலைவரால் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது. இதுபற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், ஆசிரியருமான எஸ்.சுந்தர் கூறியதாவது:

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கடந்தாண்டு தேனி, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 2 மாணவர்கள் இளம் விஞ்ஞானி விருதைப் பெற்றனர். இந்தாண்டு அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்கும் விதத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வழிகாட்டிப் புத்தகங்கள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

புதன், 21 ஜூலை, 2010

செய்யவேண்டியவையும்... செய்யக்கூடாதவையும்


18 & 19 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு..2010 - 2011
மையப் பொருள் : நிலவளங்கள்
பேரா.சோ.மோகனா,
மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர்,
NCSC 2010-2011
அறிவியல் மாநாட்டுக்கான ஆய்வு பற்றிய குறிப்பு..:
செய்யவேண்டியவையும்... செய்யக்கூடாதவையும்...
  • ஆய்வு செய்யும் குழந்தைகள் 10௦-17 வயதினராய் இருக்க வேண்டும்.
  • அவர்களின் வயது டிசம்பர் 31 ம் நாள் என்ன வயதோ,, அதுவே அவர்களின் ஆய்வுக் குழுவின் வயதாகும்,
  • 10 -13 வயதினர் இளநிலை/கீழ் நிலை என்றும், 13+ -17 வயதினர்,முது நிலை/ மேல் நிலை என்று சொல்லப் படுகிறது.
  • கீழ்நிலை/இளநிலை மாணவர்கள்(10 -13 ), 2 ,500௦௦ வார்த்தைகளும், மேல்நிலை / முதுநிலை மாணவர்கள் (13+ - 17) 3500 வார்த்தைகளுக்கு மிகாமல் ஆய்வறிக்கை தயாரிக்க வேண்டும்.
  • மேலும், ஒரு குழுவில் அதிக பட்ச வயது என்னவோ, அதுதான் அந்த குழுவின் வயதாகும்.
  • குழந்தைகள்,பள்ளியில் படிக்கலாம். பள்ளியில் படிக்காமலும் இருக்கலாம். ஆனால் ஆய்வு செய்யலாம்.வயது மட்டுமே ஆய்வுக்கான நிர்ணயம். முறைசாரப் பள்ளி,/இரவுப் பள்ளி/சிறார் பள்ளி/துளிர் இல்லத்திலிருந்தும் கூட ஆய்வுகள் செய்யலாம்.
  • ஆய்வு பதிவு செய்த உடனேயே, சுமார் ஒரு பக்கத்தில், ஆய்வு பற்றி எழுதி மாநில மையத்திற்கு அனுப்ப வேண்டும்.
  • குழந்தைகள், கட்டாயமாய் 2 -5 பேர் கொண்ட குழுவாகத்தான் செய்ய வேண்டும்.
  • தனி ஒருவராக ஆய்வு அறிக்கை தயார் செய்ய கூடாது.
  • ஆய்வறிக்கைக்கு உதவிட, ஒரு வழிகாட்டி ஆசிரியர் வேண்டும்.
  • அவர் பள்ளி ஆசிரியராகவோ, துளிர் இல்ல பொறுப்பாளராகவோ,அல்லது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்
  • பொதுவாக சோதனை முறையில் ஆய்வு செய்தால், அதனை சரியாக முறைப்படி செய்ய வேண்டும். . ,
  • .ஆய்வின் கருத்து புதிதான, எளிதான, செயல் முறையுடன் கூடியதாய், கூட்டு செயல்பாட்டுடன் இருக்க வேண்டும்.
  • ஆய்வு செய்யும் விஷயங்கள், உள்ளூர் பிரச்சினைகளை மையமாக வைத்து, தகவல்கள், கணக்கெடுப்பு ,சோதனைகள் போன்றவற்றை தங்களின் மாவட்டத்துக்குள்ளேயே தெரிவு செய்து, ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.
  • மாவட்ட எல்லை தாண்டுதல் கூடாது.
  • தலைப்பே தன்னிலை விளக்கம் தருவதாக இருக்க வேண்டும்.
  • புள்ளிவிபரங்கள் போதுமானதாக இருக்க வேண்டும்.
  • புள்ளிவிபரம்/கணக்கெடுப்பு, நேர்காணலுக்கான வினாத்தாள் தயாரிக்கும்போது, அதில் குறைந்த பட்சம் 20 வினாக்கள் இருக்க வேண்டும்.
  • அதே போல் ஆய்வுக்காக நேர்காணல் செய்யப்படும் நபர்கள், குறைந்தது 50 நபராவது இருக்க வேண்டும்
  • கட்டாயமாக , மனிதனின் மேலோ, மனிதன் உண்ணும், குடிக்கும் எந்த பொருளிலும் ஆய்வு செய்யக் கூடாது.
  • மேலும், மருத்துவம், மருந்துகள் , வியாதி தொடர்பாகவும் .ஆய்வு செய்யக் கூடாது.
  • ஆய்வறிக்கையை இணையதளத்தில் இருந்து இறக்கி போடக்கூடாது.
  • ஆய்வறிக்கையை கையால் எழுதலாம்; தட்டச்சும் செய்யலாம்.
  • ஆய்வறிக்கையில் அதிகபட்சமாக 4 நிழற்படங்கள் / அட்டை/விளம்பரப் படம் மட்டுமே இருக்க வேண்டும்.
  • அதிகபட்சமாக உள்ள நிழற்படங்கள் / அட்டைக்கு எவ்வித மதிப்பீடும் கிடையாது.
  • கட்டாயமாக VCD அனுமதிக்கப்பட மாட்டாது.
  • ஆய்வறிக்கைக்கானசெலவைரூ.250க்கு மேல் மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • ஆய்வறிக்கையின் போது கட்டாயமாக தினசரி LOG book எழுத வேண்டும். ( தினசரி..நாட்குறிப்பு போலத்தான் அது.)
  • மாநாட்டின் போது, ஆய்வின் சுருக்கம், ஆங்கிலத்தில் 250 வார்த்தைகள் தட்டச்சு செய்து மாவட்ட ஒருங்கிணைப்பாளரிடம் கொடுக்க வேண்டும்.
  • மாவட்ட மாநாட்டின் பொது கட்டாய மாக log book சமர்ப்பிக்க வேண்டும். ,
  • LOG book இல்லாத குழந்தைகள் மாநாட்டில் பங்கெடுக்க முடியாது.
  • ஒவ்வொரு மாநாட்டுப் பிறகும்,குழந்தைகள், ஒரு 5 பக்கம் ,மாநாட்டிற்குப்பின் என்ன செய்தார்கள் என்பது பற்றிய Follow -up Action பற்றிய தகவல் கட்டாயமாய் இணைக்க வேண்டும். இதனை தனியாக மதிப்பீடு செய்வார்கள்,
  • குழந்தை விஞ்ஞானிகள் மாநாட்டிற்குப்பின் சமூகத்திடம் எவ்வாறு சென்று செயல் படப் போகிறார்கள் என்பதனையும், மாநாட்டில் அவசியம் சொல்லவேண்டும்.
  • குழந்தை விஞ்ஞானிகள் ஆய்வறிக்கையை, நேர்காணலின் போது 8 நிமிடத்தில் சொல்லி முடிக்க வேண்டும்.
  • வழிகாட்டி ஆசிரியர்கள் குழந்தை விஞ்ஞானிகளை ஆய்வறிக்கை சொல்லும்போது, நாங்கள் , செய்தோம், கண்ணன் குழி தோண்டினான், நான் மண் போட்டேன், கலா விதைப் போட்டு தினம் நீர் ஊற்றினாள் என குழுவின் அனைத்து குழந்தைகளையும் இணைத்துப் பேச பழக்க வேண்டும். ஏனெனில் இது ஒரு கூட்டு செயல்பாடு என்பதும், கூட்டு செயல்பாடு , நடவடிக்கைக்கு தனியான மதிப்பீடு உண்டு என்பதை, குழந்தை விஞ்ஞானிகளும், வழிகாட்டி ஆசிரியர்களும் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்